உலகை வென்ற உத்தமர் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் வில்லெடுத்து வாளெடுத்து வானைப் பிளக்கும் கோஷமெடுத்து மன்னர்களை மண்டியிடச் செய்து மண்ணையும் பொன்னையும் வென்ற மன்னர்கள் பலர்; வில்லின்றி வாளின்றி மண்ணின்றி பொன்னின்றி உலகையே வென்ற உத்தமர் ஒருவரே; அவரே தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர். உடல் பலத்தால் உலகை வென்ற வேந்தர்கள் பலர் இருக்க, ஆத்ம பலத்தால் எல்லா தரப்பட்ட மக்களையும் உண்மையாக வென்றவர் பிரபுபாதரே. அரசர்கள் அபகரித்து ஆட்சி செய்த இடங்களில் மக்கள் மனமுவந்து உளமாற அவர்களை ஏற்றார்களா என்று கூற முடியாது; ஆனால், பிரபுபாதரின் பக்தர்களோ உடல், பொருள், ஆவி அனைத்தையும் உளமாற அர்ப்பணித்து சேவை செய்தனர் என்பதால், பிரபுபாதருக்கு நிகரான வேந்தர் வரலாற்றில் யாருமே கிடையாது என்று கூறலாம். பன்னிரண்டு வருடத்தில் பாரெங்கும் பயணம் செய்து பக்தியை பிரச்சாரம் செய்து பல்லாயிரக்கணக்கான உண்மையான சீடர்களை உருவாக்கியவர் வரலாற்றில் வேறு யாரும் கிடையாது. ஸ்ரீல பிரபுபாதர் தம்முடைய பூர்வீக ஆச்சாரியர்களின் முழுமையான பிரதிநிதியாக இருந்தார், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன படைக்க...