Skip to main content

Posts

தூய பக்தர்களின் ஒரே ஆசை

 

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

அஜா - அன்னதா ஏகாதசி

பாத்ரபத மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அஜா - அன்னதா ஏகாதசியாக கொண்டாடுவர். அஜா - அன்னதா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.     ஸ்ரீ யுதிஷ்டிரர் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம்- "ஹே ! ஜனார்தனா, இவ்வுலக ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாத்து ரட்சிப்பவரே, பாத்ரபத மாதத்தின் (ஆகஸ்ட் -செப்டெம்பர்) கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயரையும், அதன் மகத்துவத்தையும் விரிவாக எனக்கு எடுத்துரையுங்கள்" என்று வேண்டி நின்றார். பகவான் ஶ்ரீ கிருஷ்ண தர்மபுத்ரரின் வேண்டுகோளுக்கு இணங்கி, பதிலளிக்கையில் "ஹே! ராஜன், நான் சொல்லுவதை மிகவும் கவனத்துடன் கேள்,  பாபங்களைப் போக்கும் இந்த புண்ய ஏகாதசி அஜா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, புலன்களுக்கு அதிபதியான ரிஷிகேசரை வழிபட்டால், பாபத்தின் கர்ம விளைவுகளிலிருந்து விடுபடுவர். அஜா ஏகாதசியின் மஹிமையை காதால் கேட்டாலே, கேட்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறும்.                                    ...

அபைஷுனம் -

 

அக்ரோத

 

உலகை வென்ற உத்தமர் ஸ்ரீல பிரபுபாதர்

  உலகை வென்ற உத்தமர் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் வில்லெடுத்து வாளெடுத்து வானைப் பிளக்கும் கோஷமெடுத்து மன்னர்களை மண்டியிடச் செய்து மண்ணையும் பொன்னையும் வென்ற மன்னர்கள் பலர்; வில்லின்றி வாளின்றி மண்ணின்றி பொன்னின்றி உலகையே வென்ற உத்தமர் ஒருவரே; அவரே தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர். உடல் பலத்தால் உலகை வென்ற வேந்தர்கள் பலர் இருக்க, ஆத்ம பலத்தால் எல்லா தரப்பட்ட மக்களையும் உண்மையாக வென்றவர் பிரபுபாதரே. அரசர்கள் அபகரித்து ஆட்சி செய்த இடங்களில் மக்கள் மனமுவந்து உளமாற அவர்களை ஏற்றார்களா என்று கூற முடியாது; ஆனால், பிரபுபாதரின் பக்தர்களோ உடல், பொருள், ஆவி அனைத்தையும் உளமாற அர்ப்பணித்து சேவை செய்தனர் என்பதால், பிரபுபாதருக்கு நிகரான வேந்தர் வரலாற்றில் யாருமே கிடையாது என்று கூறலாம். பன்னிரண்டு வருடத்தில் பாரெங்கும் பயணம் செய்து பக்தியை பிரச்சாரம் செய்து பல்லாயிரக்கணக்கான உண்மையான சீடர்களை உருவாக்கியவர் வரலாற்றில் வேறு யாரும் கிடையாது. ஸ்ரீல பிரபுபாதர் தம்முடைய பூர்வீக ஆச்சாரியர்களின் முழுமையான பிரதிநிதியாக இருந்தார், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன படைக்க...