பதம் 1 நமாமீஷ்வரம் ஸச்-சித்-ஆனந்த-ரூபம் லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம் யஷோதா-பியோலூகலாத் தாவமானம் பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய-கோப்யா மொழிபெயர்ப்பு பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய ரூபத்தில் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகின்றேன். சுறா மீனின் வடிவிலுள்ள காதணிகள் இங்குமங்கும் ஆட, தெய்வீகத் திருத்தலமான கோகுலத்தில் அவர் அழகாக ஜொலித்துக் கொண்டுள்ளார். அன்னை யசோதையைக் கண்டதும் பயத்தால் மர உரலிலிருந்து இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் அதைவிட வேகமாக அவரை விரட்டிய அன்னையினால் அவரைப் பிடித்து விட முடிந்தது. அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு நான் எனது பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன். பதம் 2 ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜன்தம் கராம்போஜ-யுக்மேன ஸாதங்க-நேத்ரம் முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம் மொழிபெயர்ப்பு (அன்னையின் கரங்களில் இருந்த கோலைக் கண்டதும்) அவர் அழுதபடி தாமரை கரங்களைக் கொண்டு, பயம் நிறைந்த கண்களை மீண்டும்மீண்டும் கசக்குகிறார். சங்கின் மூன்று கோடுகளை ஒத்திருக்கும் அவரது கழுத்தில்...