Skip to main content

Posts

பகவத் கீதைக்காக ஒரு குடும்பம்

  உபாக்யானே உபதேசம் (  அருளியவர் :-  ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் பகவத் கீதைக்காக ஒரு குடும்பம்  ஒரு முறை, ஒரு ஆன்மீக குரு தன்னுடைய சந்நியாச சீடனுக்கு பகவத் கீதையை கொடுத்து, அதை தினமும் இடைவிடாமல் படிக்குமாறு அறிவுறுத்தினார். குருவின் கட்டளையை ஏற்ற சந்நியாச சீடன், விந்திய மழையின் ஒரு குகையில் அமர்ந்து, பகவத் கீதையை தினமும் படிக்க ஆரம்பித்தார்.  அந்த குகையில் இருந்த ஒரு சிறிய எலி, பகவத் கீதையை கொஞ்சம் கொஞ்சமாக கொறித்து தின்ன ஆரம்பித்தது. எலியுடைய இந்த சேட்டையை பார்த்த அந்த சீடர், அருகிலிருந்த கிராமத்திலிருந்து ஒரு பூனையை கொண்டு வந்தார்.  அடுத்த பிரச்சனை வந்தது.  பூனையை பராமரிக்க பால் தேவை என்பதை உணர்ந்தார். இந்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு பசுவை தேடினார். பகவானின் கருணையால் ஒரு அன்புள்ளம் கொண்டவர், இந்த சீடருக்கு பசுவை தானமாக வழங்கினார். மிகவும் மகிழ்ந்த சீடர், தனது இருப்பிடத்திற்கு வந்தார்.   அடுத்த பிரச்சனை வந்தது.  பசு குகைக்குள் இருக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், அதற்கு ஒரு தொழுவத்தை கட்ட முட...

தாமோதராஷ்டகம்

  பதம்  1 நமாமீஷ்வரம் ஸச்-சித்-ஆனந்த-ரூபம் லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம் யஷோதா-பியோலூகலாத் தாவமானம் பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய-கோப்யா மொழிபெயர்ப்பு   பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய ரூபத்தில் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகின்றேன். சுறா மீனின் வடிவிலுள்ள காதணிகள் இங்குமங்கும் ஆட, தெய்வீகத் திருத்தலமான கோகுலத்தில் அவர் அழகாக ஜொலித்துக் கொண்டுள்ளார். அன்னை யசோதையைக் கண்டதும் பயத்தால் மர உரலிலிருந்து இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் அதைவிட வேகமாக அவரை விரட்டிய அன்னையினால் அவரைப் பிடித்து விட முடிந்தது. அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு நான் எனது பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன். பதம்  2 ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜன்தம் கராம்போஜ-யுக்மேன ஸாதங்க-நேத்ரம் முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம் மொழிபெயர்ப்பு   (அன்னையின் கரங்களில் இருந்த கோலைக் கண்டதும்) அவர் அழுதபடி தாமரை கரங்களைக் கொண்டு, பயம் நிறைந்த கண்களை மீண்டும்மீண்டும் கசக்குகிறார். சங்கின் மூன்று கோடுகளை ஒத்திருக்கும் அவரது கழுத்தில்...

விஜயதசமி நாளில் பகவான் ஶ்ரீ சைதன்யர் வெளிப்படுத்திய திவ்ய லீலைகள்

ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்திய லீலை 15. 32 முதல் 36 🔆🔆🔆🔆🔆🔆🔆 விஜயா-தஷமீ லங்கா-விஜயேர தினே  வானர-ஸைன்ய கைலா ப்ரபு லஞா பக்த-க ணே இலங்கையினை வெற்றி கொண்ட விஜயதசமி நாளில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எல்லா பக்தர்களையும் வானர சேனைகளாக வேடமணியச் செய்தார். ஹனுமான்-ஆவேஷே ப்ரபு வ்ரி'க்ஷ-ஷாகா லஞா  லங்கா-கஃடேசஃடி பேலே கஃட பாரங்கியா ஹனுமானின் பரவசத்தை வெளிப்படுத்திய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஒரு பெரிய மரக்கிளையினைக் கையிலெடுத்து, இலங்கையின் கோட்டைச் சுவர்களில் ஏறி, அதனைத் தகர்க்கத் தொடங்கினார். 'காஹாரே ராவ்ணா' ப்ரபு கஹே க்ரோதா, வேஷே  ஜகன்-மாதா ஹரே பாபீ மாரிமு ஸவம்ஷே ஹனுமானின் பரவசத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கோபத்துடன் கூறினார், "எங்கே அந்த அயோக்கிய இராவணன்? அவன் அகிலத்தின் அன்னையான சீதையை அபகரித்துள்ளான். தற்போது நான் அவனையும் அவனது வம்சத்தினர் அனைவரையும் கொல்லப் போகிறேன்.'' கோ ஸாஞிர ஆவேஷ தேகி லோகே சமத்கார  ஸர்வ-லோக ஜய ஜய பலே பார பார ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பரவசத்தைக் கண்டு அனைவரும் பெரிதும் வியப்புற்றனர், "ஜய! ஜய!" என்று மீண்டும் மீண்டும் முழங்கத் தொடங்கினர். ஏஇ-ம...

ஶ்ரீ ராமசந்திர விஜய உற்சவம் (தசரா)

  யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம் எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன். பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம் தர்ம-ஸம்ஸதாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தழைத்தோங்கும்போது, பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக முழுமுதற் கடவுள் இவ்வுலகில் யுகந்தோறும் அவதரிக்கின்றார் என்பதை நாம் பகவத் கீதையில் (4.7 & 8 காண்கிறோம். முழுமுதற் கடவுள் மனித சக்திக்கு மட்டுமின்றி, தேவர்களின் சக்திக்கும் அப்பாற்பட்டவர் .இராமர் தேவர்களையே அச்சம்கொள்ளச் செய்த இராவணனைக் கொல்வதர்காக , சமுத்திரத்தின் மீது பாலம் கட்டி கடல் கடந்து இலங்கை சென்று இரவணண வதம் செய்தார். இவ்வாறாக,ஸ்ரீ இராமர், சாதுக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த இராவணன் உட்பட பல்வேறு அசுரர்களைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டினார...

பக்தி தொன்டு செய்யும் நான்கு விதமான மனிதர்கள்

சதுர்-விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ க்ஞானி ச பரதர்ஷப மொழிபெயர்ப்பு பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள். பொருளுரை துஷ்டர்களுக்கு எதிர்மாறான நல்லோர் (அறநெறிகளைப் பின்பற்றுவோர்), ஸுக்ருதினர் என்று அழைக்கப்படுகின்றனர். சாஸ்திரங்களின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியும் இவர்கள், நீதி மற்றும் சமூகச் சட்டங்களைக் கடைப்பிடித்து, பெரும்பாலும் முழுமுதற் கடவுளுக்கு பக்தி செய்பவர்களாவர். இவர்களில் நான்கு வகையினர் உண்டு—துயரத்தில் இருப்போர், பணத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரண உண்மையின் அறிவைத் தேடுவோர். பல்வேறு சூழ்நிலைகளின் காரணத்தினால் இத்தகையோர் முழுமுதற் கடவுளுக்கு பக்தித் தொண்டாற்ற வருகின்றனர். தங்களது பக்தித் தொண்டின் மூலம் சில விருப்பங்களைப் பூர்த்தி செய்ய விரும்புவதால், இவர்கள் தூய பக்தர்கள் அல்ல. தூய பக்தித்தொன்டு ஜட இலாபத்திற்கான எவ்வித ஆசைகளும் இல்லாதது. பக்தி ரஸாம்ருத ஸிந்து (1.1.11) தூய பக்தியினை பின்வருமாறு வ...

பிராயச்தசித்தத்தால் என்ன பயன்?

ஸ்ரீமத் பாகவதத்தில் (6.1.9-10) சுகதேவ கோஸ்வாமியிடம் சில புத்திசாலித்தனமான கேள்விகளை பரீட்சித்து மகாராஜா கேட்டார். இக்கேள்விகளில் ஒன்று “மக்களால் தங்களின் புலன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவர்கள் ஏன் பிராயச்சித்தங்களை மேற்கொள்கின்றனர்?” உதாரணமாக, திருடன் ஒருவன் தனது திருட்டுத் தொழிலுக்காக கைது செய்யப்படக் கூடும் என்பதை நன்கறிவான். மேலும் போலீஸ்காரரால் திருடனொருவன் கைது செய்யப்படுவதையும் கூட அவன் காணக்கூடும், இருப்பினும் அவன் தொடர்ந்து திருட்டைச் செய்கிறான். காண்பதாலும், கேட்பதாலும் அனுபவம் திரட்டப்டுகிறது. புத்தியில் தாழ்ந்தவன் காண்பதன் மூலமாக அனுபவத்தை சேகரிக்கிறான். மேலும் அதிக புத்தியுள்ள ஒருவன் கேட்பதன் மூலமாக அனுபவத்தை சேகரிக்கிறான். அறிவுள்ளவன் கற்ற நூல்களில் இருந்தும், சாஸ்திரங்களில் இருந்தும் திருடுவது நல்லதல்ல என்பதையும், திருடனொருவன் அகப்படும் போது தண்டிக்கப்படுவான் என்பதையும் கேள்விப்பட்டதும் திருட்டிலிருந்து பின் வாங்கிக் கொள்கிறான். புத்தியில் தாழ்ந்தவன் திருட்டை நிறுத்தப் பழகிக் கொள்ளும் முன்பாக அவன் முதலில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியிருக்கும். ஆனால...