Skip to main content

Posts

வைஷ்ணவன்மற்றவர்களுடைய குற்றங்களை காண்பதில்லை

  வைஷ்ணவனுடைய தகுதிகளில் ஒன்று அதோ ஷ தர்ஷீ என்பதாகும் அவன் ஒருபோதும் மற்றவர்களுடைய குற்றங்களை காண்பதில்லை. ஒவ்வொரு மனிதனிடமும் நற்குணங்கள், குற்றங்கள் என இரண்டும் இருப்பது உண்மையே . எனவே ஸஜ்-ஜனா குணம் இசந்தி தோஷம் இச்சந்தி பாமர, அனைவருமே தோஷங்களும் பெருமைகளும் கலந்த கலவையாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் நிதான புத்தி உடைய வைஷ்ணவன் ஒரு மனிதனின் பெருமைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான், அவனது குறைகளை காண்பதில்லை ஈக்கல் புண்களை நோக்கி செல்கின்றன ஆனால் தேனீக்கள் தேனை தேடுகின்றன (ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்./ ஆதிலீலை 8.62) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். Telegram செயலி 🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇 🔆🔆🔆🔆🔆🔆🔆 கட்டுரைகள், சாஸ்தி...

மாங்காய்த்துவையல்

  தேவையான பொருட்கள் மாங்காய் (நல்ல புளிப்பாக)     -       1 கப் தேங்காய்த் துருவல்                    -       1                  பச்சை மிளகாய்                            -       6 பெருங்காயம்                                      -          சிறு துண்டு உப்பு                                                   -        சுவைக்கேற்ப செய்முறை: நல்ல புளிப்ப...

வேப்பம்பூ துவையல்

தேவையான பொருட்கள் வேப்பம்பூ                         -          1 கப் புளி                                         -         1 சிறிய எலுமிச்சபழஅளவு                         வெல்லம்                           -           25 கிராம் உப்பு                                      -           சுவைக்கேற்ப காய்ந்தமிளகாய்      -           1 எண்ணெய்          ...

மக்கள் கிருஷ்ண உணர்வை ஏற்காதது ஏன்?

  மக்கள் பௌதிக இன்பத்தில் மிகவும் மயங்கியிருக்கும் காரணத்தினால், இது மிகவும் கடினமான செயலாக உள்ளது. நமது கிருஷ்ண உணர்வினைப் புதுப்பிப்பதே மனித வாழ்வின் இறுதிக் குறிக்கோள் என்றபோதிலும், இவர்கள் பொதுவாக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினை விரும்புவதில்லை. கிருஷ்ணரே கடவுள், இதுவே வேத சாஸ்திரங்களின் வாக்கியம்: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம். கடவுளைத் தேடிய பின்னர், கடவுள் யார் என்பதில் மாபெரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பின்னர், எல்லா ஆச்சாரியர்களும் கிருஷ்ணரே கடவுள் என்று முடிவு செய்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, கலி யுகத்தின் தற்போதைய தருணத்தில், பெரும்பாலான மக்கள் கடவுள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதில்லை. ஏன்? இது பகவான் கிருஷ்ணரால் பகவத் கீதையில் (7.15) குறிப்பிடப்பட்டுள்ளது: நமாம் துஷ்க்ருதினோ மூடா:ப்ரபத்யந்தே நராதமா: மாயயாபஹ்ருத-க்ஞானாஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா: துஷ்க்ருதின என்னும் சொல்லானது “எப்போதும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவன்” என்று பொருள்படுகிறது. க்ருதி என்றால் “சிறப்புவாய்ந்த” அல்லது “மிகவும் புத்திசாலியான” என்று பொருள். ஆனால் துஷ்க்ருதி என்றால் “தனது தகுதிகளை பாவச் செயல்களுக்காக உபயோ...

மறுபிறவியின் துன்பத்தை அறிவோம்

வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கடவுளின் சட்டங்களைப் பற்றியும் மக்களுக்கு அறிவினைப் புகட்டுவதற்கு இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் முயற்சி செய்து வருகிறது. நாங்கள் எதையும் புதிதாக தயாரிப்பதில்லை. இவையனைத்தும் வேதங்களில் இருந்து பெறப்படுகின்றன. வேதங்கள் அறிவைப் பெறுவதற்கான நூல்களாகும் (வேதம் என்றால் “அறிவு” என்று பொருள்). நாம் தற்போது பாவச் செயல்களை தொடர்ந்து செய்து வருகிறோம், இவற்றிற்காக மறுபிறவியில் துன்பப்பட நேரிடும். நாம் அனைவரும் நிச்சயம் மரணமடைவோம். கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்: ந ஹன்யதே ஹன்யமானே சரீரே, “உடல் மடியும்போது ஆத்மா மடிவதில்லை.” நாஸ்திகர்கள் நினைக்கின்றனர்: “உடல் அழியும்போது, அனைத்தும் முடிந்துவிடுகிறது.” ஆனால் இஃது உண்மையல்ல. நாம் வெறுமனே உடையைப் போன்ற இந்த உடலை மட்டுமே மாற்றுகின்றோம். ஆனால் ஆத்மாக்கள் என்ற முறையில், நான் நித்தியமானவன், நீங்கள் நித்தியமானவர்கள். நம்முடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினாலேயே நாம் பலதரப்பட்ட உடல்களினுள் நுழைகின்றோம். உதாரணமாக, நான் மனிதனாக என்னுடைய வாழ்வினை மிகவும் அருமையாக அனுபவித்து வருகிறேன். ஆனால் என்னுடைய மறுபிறவியில் ...

பகவான்

“பக” என்ற சொல்லுக்கு “வளம்” என்று பொருள். “வான்” என்றால் “உடையவர்”. (பகவான்- வளங்கள், சிறப்புக்கள், செல்வங்கள் உடையவர்) படைப்பின் சிறப்புக்களும், பகவானிடம் பொருந்தியுள்ளன. வேதங்களில் கூறப்பட்டுள்ளது போல் (கடோபநிஷத் 2.2.13) “நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான்” ‘நித்ய’ (ஒருமை) பகவான், ‘நித்யானாம்’ (பன்மை) ஜீவாத்மாக்கள் அதாவது உயிர்வாழிகள், ‘நித்ய நித்யானாம்’ - நாம் பலர், கடவுள் ஒருவரே. ஜீவன்கள் எண்ணிலடங்காதவை. “அனந்த” என்றால் “எல்லையற்றவை” இந்த ஜீவன்கள் (உயிர்வாழிகள்) எல்லாம் பரமபுருஷனான பகவானால் பராமரிக்கப்படுகின்றன. சிறிய எறும்பு முதல் பெரிய யானை போன்ற 84,00,000 உயிரின வகைகள் பகவானால் பராமரிக்கப்படுகின்றன. நம்மை அவர் காப்பாற்றமாட்டாரா என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? பகவானின் பக்தர்களாயிருந்து அவரது பாதகமலங்களில் சரணடைந்து அவருக்குத் தொண்டாற்றுவதற்காக மற்றெல்லாவற்றையும் துறந்திருப்பவர்கள் நிச்சயமாகக் கவனித்துக் கொள்ளப்படுவார்கள். எமது கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் 350க்கும் மேலான மையங்கள் உள்ளன; கிருஷ்ணர் அவற்றையெல்லாம் பராமரித்து வருகிறார். எமது பக்தித் தொண...

எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை

  ஜட வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்ற கறைபடிந்த நோக்கமே மனித சமூகத்தின் துன்பங்களுக்குக் காரணம். புலன் நுகர்வுக்காக ஜட வசதிகளைச் சுரண்டுவதில் மனித சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பகவானின் மாயையான, ஜடச் சக்தியில் அது சிக்கிக் கொள்கிறது. இவ்வாறாக உலகின் துன்பம் குறைக்கப் படுவதற்கு பதிலாக தீவிரமாக்கப்படுகிறது. உணவு தானியங்கள், பால், பழம், மரம், கல், சர்க்கரை, பட்டு நூல், இரத்தினங்கள், பருத்தி, உப்பு, நீர் மற்றும் காய்கறிகள் போன்றவைகளின் உருவில் மனிதனின் அன்றாடத் தேவைகள் பூரணமாக பகவானால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரபஞ்சத்திலுள்ள மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், அதிலுள்ள ஒவ்வொரு கிரகத்திலும் வாழும் உயிரினங்களுக்கும், உணவு வழங்குவதற்கும், அவற்றின் நலத்தைப் பேணுவதற்கும் போதுமான அளவுக்கு பகவான் அளித்துள்ளார். தேவைகளைப் பூர்த்தி செய்பவர் பூரணமானவராவார். மேலும் மனிதன் இத்தேவைகளை பெறுவதற்கு அவனுடைய உழைப்பு மட்டுமே சிறிது தேவைப்படுகிறது. செயற்கையான முறையில் வாழ்வின் வசதிகளை உண்டாக்கும் இயந்திரங்கள், கருவிகள் அல்லது மிகப்பெரிய இயந்திர சாதனங்கள் ஆகியவை தேவையில்லை...