பக்தியோகஸ்ச யோகஸ்ச மயா மானவ்யுதீரித : யயோரேகதரேணைவ புருஷ : புருஷம் வ்ரஜேத் மொழிபெயர்ப்பு யோகச் செயல்களின் எட்டு வேறுபட்ட வகைகளை உள்ளடக்கிய அறிவார்ந்த யோகமுறை , பக்தியோகத்தின் முழுமையான நிலைக்கு வரும் குறிக்கோளுடன் நிகழ்த்தப்பட வேண்டும் என்று இங்கு பரம புருஷராகிய கபிலதேவர் விளக்குகிறார் . அமரும் நிலைகளைப் பயிற்சி செய்வதாலும் , முழுமையாகத் தன்னை நினைப்பதாலும் ஒருவர் திருப்தி அடைந்து விடக் கூடாது . சிறந்த தியானத்தால் ஒருவர் பக்தித் தொண்டின் நிலையை அடைய வேண்டும் . முன்பு வர்ணிக்கப்பட்டதுபோல , ஒரு யோகி , பகவான் விஷ்ணுவின் வடிவத்தை , திருவடி முதல் திருமுடி வரை , கணுக்கால்களிலிருந்து கால்களுக்கு முழுங்கால்களுக்கு தொடைகளுக்கு , மார்புக்கு , கழுத்திற்கு என்று இந்த விதத்தில் படிப்படியாக முகம் வரை மனதில் எண்ணி பின்னர் நகைகளுக்கு உட்பட அனைத்துக்கும் தியானம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது . அருவ நிலை தியானம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை . விளக்கமாக பரம புருஷ பகவானைத் தியானிப்பதால் , ஒருவர் பகவானின் அன்பின் ...