யுதிஷ்டிர மகாராஜன் பரீட்சித்து மகாராஜனை ஹஸ்தினாபுர அரியாசனத்தில் அமர்த்தியபின் , பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பேரனான வஜ்ரனை மதுராவின் அரசராக நியமித்தார் . அதன் பிறகு அவர் துறவு வாழ்வை ஏற்றார் . குணத்தையும் , செயலையும் அடிப்படையாகக் கொண்ட நான்கு சமூக பிரிவுகளும் , நான்கு ஆன்மீக பிரிவுகளும் “ வர்ணாஸ்ரம - தர்மம் ” எனப்படுகிறது . வர்ணாஸ்ரம முறைதான் உண்மையான மனித வாழ்வின் துவக்கமாகும் . இம்முறையை நன்கு பாதுகாத்து வந்த யுதிஷ்டிர மகாராஜன் பரீட்சித்து மகாராஜனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து தக்க சமயத்தில் துறவறம் ஏற்றார் . விஞ்ஞானபூர்வமான வர்ணாஸ்ரம முறை மனித வாழ்வை நான்கு சமூகப் பிரிவுகளாகவும் , நான்கு ஆன்மீக பிரிவுகளாகவும் வகுத்துள்ளது . ஒருவர் எந்த சமூக பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் , பிரம்மச்சாரி , கிருஹஸ்தன் , வானபிரஸ்தம் மற்றும் சந்நியாசி ஆகிய ஆன்மீக வாழ்வு நிலைகள் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவையாகும் . இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் வயதான பருவத்திலும் சுறுசுறுப்பான வாழ்விலிருந்து ஓய்வு பெற விரும்புவ...