Skip to main content

Posts

இந்தியர்கள் அனைவருமே மேற்கொள்ள வேண்டிய பிரதான கடமை

இந்தியர்கள் அனைவருமே மேற்கொள்ள வேண்டிய பிரதான கடமை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆   ஆத்மௌபம்யேன என்ற சொல் , தன்னுயிரைப் போலவே பிற உயிர்களைப் பற்றி எண்ணுவதைக் குறிக்கிறது . பக்தித்தொண்டு இல்லாமல் , கிருஷ்ண உணர்வைப் பெறாமல் , ஒருவனால் மகிழ்ச்சியடைய முடியாது என்று மிகவும் புத்திசாலித்தனமாக ஒருவனால் முடிவு செய்ய முடியும் . ஆகவே உலக முழுவதிலும் கிருஷ்ண உணர்வைப் பரப்புவதே எல்லா பக்தர்களுக்கும் உள்ள கடமையாகும் . ஏனெனில் கிருஷ்ண உணர்வில்லாத அனைத்து ஜீவன்களும் பௌதிக வாழ்வின் துன்பங்களை அனுபவிக்கின்றனர் . கிருஷ்ண உணர்வைப் பரப்புவதுதான் மிகச் சிறந்த பொதுநலத் தொண்டாகும் . உண்மையில் , ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவால் இது , பர - உபகார அதாவது உண்மையான பொதுநலத்தொண்டு என்று விவரிக்கப்படுகிறது . இந்த பரோபகாரச் செயலானது , குறிப்பாக இந்தியாவில் மனிதர்களாகப் பிறந்துள்ளவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . பாரத - பூமிதே ஹைல மனுஷ்ய - ஜன்ம யார ஜன்ம ஸார்தக கரி ’ கர பர - உபாகர ( சை . ச . ஆதி 9.41) கிருஷ்ண உணர்வு இல்லாததால் முழு உலகும் துன்பப்பட்டு...

பூதனை வதம்

பூதனை வதம் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக, கம்சனின் கட்டளையை ஏற்ற பூதனை என்னும் அரக்கி, தனது மார்பில் விஷத்தைத் தடவிக் கொண்டு, தன்னை அழகிய பெண்ணாக உருமாற்றிக் கொண்டாள். கிருஷ்ணரின் அறைக்குச் சென்ற பூதனை அவரை தன் மடியில் அமர்த்திக் கொண்டாள். குழந்தை கிருஷ்ணர் பாலை உறிஞ்சும்போது அவளது உயிரையும் உறிய ஆரம்பித்தார். அந்த வலியைத் தாங்கவியலாத பூதனை தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி, பதினாறு மைல் நீளம் கொண்ட உடலாக வெளிப்படுத்தி மாண்டு போனாள். அதன் பிறகு, பூதனையின் நெஞ்சில் விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணரை விருந்தாவனவாசிகள் தூக்கிச் சென்றனர். கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்திவினோத தாகூர், பூதனையை இதயத்தில் குடி கொண்டிருக்கும் பொய்யான ஆன்மீக குருவிற்கு ஒப்பிடுகிறார். மற்றவரின் பார்வைக்கு பூதனை கிருஷ்ணரின் ஆரோக்கியத்திற்காக அவருக்கு பாலூட்ட முனைந்ததாக தோன்றலாம், ஆனால் அவளது நோக்கம் கிருஷ்ணரைக் கொல்ல வேண்டும் என்பதே. அதுபோலவே, போலி குருமார்கள் கிருஷ்ணரின் மீதான ஆரோக்கியமான தூய அன்பை வளர்ப்பதற்கு உதவுவதுபோல காணப்பட்டாலும், பிறரை புலனுகர்ச்சி விஷயங்களில் ஈடுபட வைப்ப...

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் ஏன் பல ரூபங்களில் அருள்பாளிக்கிறார் ?

  பக்தர்கள் மற்றும் ஆன்மீகிகளின் வேறுபட்ட தகுதிகளுக்கேற்ப பரமபுருஷர் அநேக திவ்ய நாமங்களை ஏற்று அவர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். பகவான் அவரது அருவ ரூபத்தில் உணரப்படும் பொழுது பரப்பிரம்மன் என்று அழைக்கப்படுகிறார். பரமாத்மாவாக உணரப்படும்பொழுது அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறார். பௌதிக சிருஷ்டிக்காக வெவ்வேறு வடிவங்களில் அவர் தம்மை விரிவடையச் செய்யும் பொழுது க்ஷீரோதகசாயி விஷ்ணு எனறும், கர்போதகசாயி விஷ்ணு என்றும், காரணோதகசாயி விஷ்ணு எனறும் அழைக்கப்படுகிறார். இந்த மூன்று விஷ்ணு ரூபங்களுக்கும் மேலான சதுர்வ்யூஹமாக (வாசுதேவர், சங்கர்ஷணர், பிரதியும்னர், அநிருத்தர்) உணரப்படும்பொழுது, அவர் வைகுண்ட நாராயணர் என்று அழைக்கப்படுகிறார். அந்த நாராயண உணர்வுக்கு மேலானது பலதேவ உணர்வாகும். அதற்கும் மேலானது கிருஷ்ண உணர்வாகும். பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபடும்பொழுது ஒருவனால் இவ்வெல்லா நிலைகளையும் உணர்ந்தறிய முடியும். அதன்பிறகு மூடிக் கொண்டுள்ள ஒருவனது இதயம் முழுமையாக திறக்கப்பட்டு, பரமபுருஷரை அவரது பல்வேறு ரூபங்களில் அவன் புரிந்து கொள்கிறான். ( ஸ்ரீமத் - பாகவதம்  6.9.33    -  பொர...

வாழ்வின் மிகவுயர்ந்த பூரணத்துவமான பரமபதத்தை அடையும் கடமையை யாரும் அலட்சியம் செய்துவிடக் கூடாது.

  யுதிஷ்டிர மகாராஜன் பரீட்சித்து மகாராஜனை ஹஸ்தினாபுர அரியாசனத்தில் அமர்த்தியபின் , பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பேரனான வஜ்ரனை மதுராவின் அரசராக நியமித்தார் . அதன் பிறகு அவர் துறவு வாழ்வை ஏற்றார் . குணத்தையும் , செயலையும் அடிப்படையாகக் கொண்ட நான்கு சமூக பிரிவுகளும் , நான்கு ஆன்மீக பிரிவுகளும் “ வர்ணாஸ்ரம - தர்மம் ” எனப்படுகிறது . வர்ணாஸ்ரம முறைதான் உண்மையான மனித வாழ்வின் துவக்கமாகும் . இம்முறையை நன்கு பாதுகாத்து வந்த யுதிஷ்டிர மகாராஜன் பரீட்சித்து மகாராஜனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து தக்க சமயத்தில் துறவறம் ஏற்றார் . விஞ்ஞானபூர்வமான வர்ணாஸ்ரம முறை மனித வாழ்வை நான்கு சமூகப் பிரிவுகளாகவும் , நான்கு ஆன்மீக பிரிவுகளாகவும் வகுத்துள்ளது . ஒருவர் எந்த சமூக பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் , பிரம்மச்சாரி , கிருஹஸ்தன் , வானபிரஸ்தம் மற்றும் சந்நியாசி ஆகிய ஆன்மீக வாழ்வு நிலைகள் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவையாகும் . இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் வயதான பருவத்திலும் சுறுசுறுப்பான வாழ்விலிருந்து ஓய்வு பெற விரும்புவ...

மறப்போம் மன்னிப்போம்

 

காளிதேவியின் பிரசாதம் என்று ஏற்றுக்கொள்பவர்கள் உண்மையில் யாருடைய பிரசாதத்தை ஏற்றுக்கொள்கின்றனர்

காளிதேவியின் பிரசாதம் என்று ஏற்றுக்கொள்பவர்கள் உண்மையில் யாருடைய பிரசாதத்தை ஏற்றுக்கொள்கின்றனர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 கலியுகத்தில் மனிதர்கள் தாங்கள் உண்பதற்காக நிறைய இறைச்சிக் கூடங்களைத் திறக்கின்றனர். அதனால் பழைய சடங்குகளும், விழாக்களும் கொண்டாடப்பட்டால் மக்கள் அவற்றைப் பயன்படுத்தி மேலும் மேலும் விலங்குகளைக் கொல்வதற்குத் தூண்டப்படுவர். கல்கத்தாவில் உள்ள இறைச்சிக் கடைகளில் காளியின் படத்தை வைத்திருப்பார்கள், மாமிசம் உண்போர் இதுபோலக் காளியின் படங்கள் வைத்திருக்கும் கடைகளிலேயே இறைச்சிகளை வாங்குவர். ஏனெனில் அது காளிதேவிக்கு படைக்கப்பட்ட நைவேத்தியம் என்பது அவர்கள் கருத்து. காளிதேவி சிவபெருமானின் சிறந்த துணைவியாதலினால் அவள் புலால் உண்ணமாட்டாள் என்பதை அவர்கள் அறிவதில்லை. சிவபெருமான் சிறந்த வைணவராதலினால் அவர் புலால் உண்ணுவதில்லை. மேலும் அவருக்கு அளிக்கும் படையல்களையே காளிதேவியும் ஏற்றுக்கொள்கிறாள். அதனால் அவள் இறைச்சியோ, மீனோ உண்பதற்கான சாத்தியமே இல்லை. இதுபோன்ற நிவேதனங்கள் எல்லாம் காளிதேவியின் அடியவர்களான பேய், பூதம், பிசாசு மற்றும் ராட்சர்களுக்கு அளிக்கப்படுவதாகும். அவர்களே இவைகளை ஏற்றுக் க...