யதா ப்ரகாஷ யத் - யேக : க்ருத்ஸ்னம் லோகம் இமம் ரவி : க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்னம் ப்ரகாஷ யதி பாரத பரதனின் மைந்தனே, ஒரே ஒரு சூரியன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப் போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றான். பொருளுரை: உணர்வைப் பற்றி பல்வேறு கொள்கைகள் இருக்கின்றன. இங்கே பகவத் கீதையில் சூரியனும் சூரியக் கதிர்களும் உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஓரிடத்தில் அமைந்துள்ள சூரியன் அகிலம் முழுவதையும் பிரகாசப்படுத்துவதைப் போல, சிறு துகளாகிய ஆன்மீக ஆத்மா, உடலின் இதயத்தில் அமைந்திருந்தாலும் உணர்வின் மூலம் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றது. எனவே, சூரியக்கதிர் அல்லது வெளிச்சமானது சூரியன் இருப்பதற்கு சாட்சியாக விளங்குவதைப் போல, உணர்வானது ஆத்மா இருப்பதற்கு சாட்சியாக விளங்குகின்றது. உடலில் ஆத்மா இருக்கும்பொழுது உணர்வானது உடல் முழுவதும் காணப்படு கின்றது, ஆத்மா உடலிலிருந்து நீங்கியவுடனேயே உணர்வு எதுவும் இருப்ப தில்லை. அறிவுள்ள எந்த மனிதனாலும் இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, உணர்வு என்பது ஜ...