தாய் யசோதை ஸ்ரீ கிருஷ்ணரை உரலில் கட்டுதல் (ஆதாரம் ; - ஸ்ரீமத் - பாகவதம் / பத்தாம் - காண்டம் / அத்தியாயம் 9.) *********************************************** ஒருநாள் , வேலைக்காரிகள் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் , தாய் யசோதை தானே தயிரைக் கடைவதில் ஈடுபட்டிருந்தாள் . இதற்கிடையில் கிருஷ்ணர் வந்து தமக்குப் பால் வேண்டுமென்று கேட்க , தாய் யசோதையும் உடனே அவருக்குத் தன் முலைப் பாலை ஊட்டினாள் . இவ்வாறு கிருஷ்ணருக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபொழுது , அடுப்பில் பால் பொங்கிவழிவதைக் கண்ட யசோதை , குழந்தைக்குப் பாலூட்டுவதை உடனே நிறுத்திவிட்டு அடுப்படிக்குச் சென்றாள் . தாய்ப்பலைக் குடிப்பதில இடையூறு ஏற்பட்டதால் , கடுங்ககோபமடைந்த கிருஷ்ணர் , ஒரு கல்லை எடுத்து தயிர்ச் சட்டியை உடைத்து விட்டு , ஓர் அறைக்குள் புகுந்தார் . அங்கிருந்த புதிதாகக் கடைந்தெடுத்த வெண்ணையை எடுத்து சாப்பிடத் துவங்கினார் . அடுபப்படியிலிருந்து திரும்பிய தாய் யசோதை தயிர்ச்சட்டி உடைந்துகிடப்பதைக் கண்டு , இது கிருஷ்ணரின் வேலையாகத்தான் இருக்கும் என்ற...