Skip to main content

Posts

சதி தன் உடலைக் கைவிடுதல்

ஸ்ரீமத் பாகவதம் -  நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 3-5 - சுருக்கம் தக்ஷனின் வேள்வி மாமனாருக்கும் ( தக்ஷனுக்கும் ) மருமகனுக்கும் ( சிவபெருமானுக்கும் ) இடையிலான பகைமை தொடர்ந்தது . பிரம்மதேவரால் பிரஜாபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து தக்ஷனின் கர்வம் மேலும் தலைக்கேறியது . இதனால் , வாஜபேய யாகத்தை நடத்திய தக்ஷன் அதில் கலந்துகொள்ள சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை . மேலும் , பிரகஸ்பதி ஸவம் எனும் சிறந்த யாகத்தையும் துவங்கினான் . அந்த யாகத்திற்கு பிரம்ம ரிஷிகள் , தேவ ரிஷிகள் , பித்ருக்கள் , தேவர்கள் முதலியோர் தத்தமது மனைவியருடன் புஷ்பக விமானங்களில் சென்று கொண்டிருந்தனர் . இதனைக் கண்ட தக்ஷனின் மகளான சதி தனது கணவர் சிவபெருமானிடம் கூறலானாள் .   சதி சிவபெருமானின் உரையாடல்   தந்தைக்கும் கணவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை சதி நன்கு அறிந்திருந்தாள் . இருப்பினும் , நண்பர் , கணவர் , குரு , தந்தை ஆகியோரின் இல்லங்களுக்கு அவர்களது அழைப்பின்றியே செல்லலாம் என அவரிடம் சாதுர்யமாகக் கூறினாள் . அன்பு மனைவியின் பேச்சைக் கேட்ட சி...