புலன் நுகர்வுக்காக பணத்திடம் நாம் பற்றுக் கொண்டுவிடக் கூடாது ; ஒவ்வொரு காசையும் கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பரப்புவதற்காகவே செலவிட வேண்டும் , புலன் நுகர்வுக்காக அல்ல . பிரச்சாரம் செய்யும் ஒரு பக்தன் பெரிய அளவிலான பணத்தைப் பெறும் பொழுது , அவனுக்கு ஆபத்து காத்திருக்கிறது . ஏனெனில் அர்பணத்தில் ஒரே ஒரு காசைக்கூட தன் சொந்த புலன் நுகர்வுக்காக அவன் செலவு செய்த உடனேயே , வீழ்ச்சியடைந்தவனாகிறான் . கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பிரச்சாரகர்கள் , இந்த இயக்கத்தைப் பரப்புவதற்குத் தேவைப்படும் பெரிய அளவிலான பணத்தை துஷ்பிரயோகம் செய்யாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இந்த பணம் நம் துன்பத்திற்குக் காரணமாகி விடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் ; இதை கிருஷ்ணருக்காக உபயோகிக்க வேண்டும் . அதுவே நமது நித்தியமான மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும் . பணம் நாராயணரின் நாயகியான லக்ஷ்மிதேவி ஆவாள் . லக்ஷ்மிதேவி எப்பொழுதும் நாராயணருடன்தான் இருக்க வேண்டும் . அப்பொழுது இழிவடையும் பயத்திற்கு அவசியம் இருக்காது . ஶ்ரீ...