Skip to main content

Posts

துஷ்பிரயோகம் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

புலன் நுகர்வுக்காக பணத்திடம் நாம் பற்றுக் கொண்டுவிடக் கூடாது ; ஒவ்வொரு காசையும்   கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பரப்புவதற்காகவே செலவிட வேண்டும் , புலன் நுகர்வுக்காக அல்ல .  பிரச்சாரம் செய்யும் ஒரு பக்தன் பெரிய அளவிலான பணத்தைப் பெறும் பொழுது , அவனுக்கு ஆபத்து காத்திருக்கிறது . ஏனெனில் அர்பணத்தில் ஒரே ஒரு காசைக்கூட தன் சொந்த புலன் நுகர்வுக்காக அவன் செலவு செய்த உடனேயே , வீழ்ச்சியடைந்தவனாகிறான் . கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பிரச்சாரகர்கள் , இந்த இயக்கத்தைப் பரப்புவதற்குத் தேவைப்படும் பெரிய அளவிலான பணத்தை துஷ்பிரயோகம் செய்யாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இந்த பணம் நம் துன்பத்திற்குக் காரணமாகி விடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் ; இதை கிருஷ்ணருக்காக உபயோகிக்க வேண்டும் . அதுவே நமது நித்தியமான மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும் . பணம் நாராயணரின் நாயகியான லக்ஷ்மிதேவி ஆவாள் . லக்ஷ்மிதேவி எப்பொழுதும் நாராயணருடன்தான் இருக்க வேண்டும் . அப்பொழுது இழிவடையும் பயத்திற்கு அவசியம் இருக்காது . ஶ்ரீ...

ஹம்பி — ஹனுமானின் பிறப்பிடம்

  வழங்கியவர் : ஜீவன கௌர ஹரி தாஸ் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி   மாவட்டத்தில் இயற்கை எழில் நிறைந்த துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருப்பதே ஹம்பி என்னும் திருத்தலம் . இந்த வனம் வானரப் படைகளின் வசிப்பிடமாகத் திகழ்ந்ததால் கிஷ்கிந்தா க்ஷேத்திரம் என்றும் , பார்வதிதேவி கடுந்தவம் புரிந்ததால் பம்பா தீர்த்தம் என்றும் அறியப்படுகிறது . ஹனுமானின்   பிறப்பிடமான இவ்விடத்திற்கு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ,  நித்யானந்த பிரபு , பலராமர் ஆகியோரும் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .   கிஷ்கிந்தா க்ஷேத்திரம்   ஹம்பி நகரமானது விஜயநகர பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது . இன்று இந்நகரம் பாரம்பரிய கட்டிடக் கலை , நினைவுச் சின்னங்கள் , குகைகள் , கற்கோயில்கள் , பசுமையான வளம் , நீரோடை என பலவற்றிற்கும் புகழ் பெற்றுள்ளது . புராண காலத்தில் தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக் ( பஞ்சவடி ) பகுதியிலிருந்து ஹனுமான் அவதரித்த ஹம்பி வரை கிஷ்கிந்தையாக அறியப்பட்டது . பகவான் இராமசந்திரர் கிஷ்கிந்தையில்...