Skip to main content

Posts

மனக்கிலேசம்

 

மனம்

  மனதைக் கொன்று விடக்கூடாது. மனத்தை அல்லது ஆசையை நிறுத்தவும் முடியாது. ஆனால் ஆன்மீகத் தன்னுணர்வை இலக்காகக் கொண்டே ஓர் ஆசையை விருத்தி செய்து கொள்வதற்காக, மன ஈடுபாட்டின் தரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். சுறுசுறுப்பான புலன் இயக்கங்களுக்கு மனமே ஆதாரமாக இருக்கின்றது. இதனால் எண்ணம், உணர்ச்சி மற்றும் இச்சை ஆகியவற்றின் தரத்தை மாற்றினால், புலன்களால் இயற்றப்படும் செயல்களின் தரமும் தானாகவே மாறிவிடும் ஶ்ரீமத் பாகவதம் 2.1.17 / பொருளுரை பரம புருஷரின் உன்னதமான நாமம், உருவம், இயல்புகள் மற்றும் திருவிளையாடல்கள் போன்றவைகளை தற்போதைய ஜடப் புலன்களால் அறிவது சாத்தயமல்ல என்பதால், இத்தகைய தெய்வீகத் தன்னுணர்வை, புலன் இயக்கங்களுக்கு மையமாக உள்ள மனதின் மூலமாக செயற்படுத்த வேண்டியது அவசியமாகும். ஶ்ரீமத் பாகவதம் 2.1.17 / பொருளுரை படிப்படியாக, மனம் ஆன்மீக முன்னேற்றம் அடைய அடைய, புலன் நுகர்விலிருந்து அதைப் பின்னுக்கு இழுத்துக்கொள்ள வேண்டும். பிறகு புத்தியால் புலன்கள் அடக்கப்பட்டுவிடும். ஜடச் செயல்களில் அளவுக்கதிகமாக ஆழ்ந்துள்ள மனதை முழுமுதற் கடவுளின் தொண்டில் ஈடுபடுத்தி, உன்னத உணர்வில் முழுமையாக அதை நிலைக்கச் செய்...

பக்தி தொண்டை மனதின் மூலமாக செயற்படுத்த வேண்டும்.

 

பக்தி தொண்டை மனதின் மூலமாக செயற்படுத்த வேண்டும்.

 

ஒவ்வொரு அடியிலும் அபாயம்

ஸமாஷ்ரிதா யே பத-ப்லவம் மஹத் பதம் புண்ய-யஷோ முராரே: பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம் பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம் "முக்தியை அளிப்பவரும், முகுந்தன் என்னும் பெயர் பெற்றவரும், பிரபஞ்சத் தோற்றத்தின் அடைக்கலமுமான பகவானின் பாத கமலங்கள் என்னும் படகை ஏற்றுக் கொண்டவனுக்கு, பௌதிக உலகம் என்னும் பெருங்கடல், கன்றின் குளம்பில் தேங்கிய நீரைப் போன்றதாகும். அவனது நோக்கம் பௌதிக துன்பங்களற்ற வைகுண்டமே (பரமபதமே) —ஒவ்வொரு அடியிலும் அபாயம் இருக்கக்கூடிய இடமல்ல." ( ஶ்ரீமத் பாகவதம் (10.14.58) ) இவ்வுலகம், ஒவ்வொரு அடியிலும் அபாயங்கள் நிறைந்த துன்பகரமான இடம் என்பதை அறியாமையினால் ஒருவன் அறிவதில்லை. அதன் காரணத்தினாலேயே, சிற்றறிவுடையோர், செயல்களின் பலன்கள் தங்களை மகிழ்விக்கும் எனக் கருதி பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையை சரி செய்ய முயற்சி செய்கின்றனர். முழு பிரபஞ்சத்திலும் உள்ள எவ்வித பௌதிக உடலும் துயரற்ற வாழ்வைத் தர இயலாது என்பதை அவர்கள் அறிவதில்லை. வாழ்வின் துயரங்களான பிறப்பு, இறப்பு, முதுமை , நோய் ஆகியவை பௌதிக உலகம் முழுவதும் உள்ளன. ஆனால் பகவானது நித்தியத் தொண்டன் எனும் தனது உண்மையான ஸ்வரூபத்தை...

மன ஈடுபாட்டின் தரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால், பொய் அகங்காரம் பிறக்கிறது.

  தொடக்கத்தில் , பரிசுத்த உணர்வு நிலை அல்லது கிருஷ்ணர் பற்றிய தூய உணர்வு எனும் நிலையிலிருந்து முதல் மாசு தோன்றியது . இது    பொய் அகங்காரம்    அல்லது உடலைத் தானாக எண்ணிக்கொள்ளுதல் ஆகிய   தவறு என்று அழைக்கப்படும் . உயிரினம் கிருஷ்ணர் பற்றிய உணர்வின் இயல்பான நிலையில் உள்ளது . ஆனால் உயிர்களுக்கு அளவோடு கூடிய சுதந்திரமும் உள்ளது . இது தான் கிருஷ்ண உணர்வினை மறக்கச் செய்கிறது . அதாவது உண்மையில் , தூய கிருஷ்ணர் பற்றிய உணர்வு இருக்கிறது ; ஆனால் அளவோடு கூடிய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் , கிருஷ்ணரை மறக்கும் வாய்ப்பும் உள்ளது . இது உண்மையான வாழ்வில் காட்டப்படுகிறது ; கிருஷ்ணர் பற்றிய உணர்வில் உள்ள சிலர் திடீரென்று மாறுவது போன்ற நிகழ்ச்சிகள் நிறையவே உள்ளன . அதனால் , ஆன்மீக உணர்தலுக்கான வழி கூர்மையான முனையினை உடைய கக்தி போன்றது என்று உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தச் சான்று மிகச் சரியானது . ஒருவர் தன் கன்னங்களைக் கூர்மையான கத்தி கொண்டு மிகவும் நன்றாக மழிக்கிறார் . ஆனா...