தாவத் கர்மாணி குர்வீத ந நிர்வித்யேத யாவதா மத்-கதா-ஸ்ரவணாதௌ வா ஸ்ரத்தா யாவன் ந ஜாயதே மொழிபெயர்ப்பு எதுவரையில் கர்மத்தில் திருப்தியடையவில்லையோ, எதுவரையில் என் கதை முதலியவற்றைக் கொண்ட பக்தித்தொண்டில் சிரத்தை உண்டாகவில்லையோ அதுவரையில் ஒருவன் வேத விதிகளுக்கேற்பவே செயற்பட வேண்டும். பொருளுரை தூய பக்தர்களுடன் சகவாசம் கொண்டு பகவத் தொண்டில் முழு நேர ஈடுபாடு கொள்வதன் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் திட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தாலொழிய ஒருவன் சாதாரண வேதக் கோட்பாடுகளையும், கடமைகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது. இதை பகவானே பின்வருமாறு குறிப்பிடுகிறார். ஸ்ருதி-ஸ்ம்ருதி மமைவாக்ஞே யஸ் தே உல்லங்ய வர்ததே ஆக்ஞா-ச்சேதீ மம த்வேஷீ மத்-பக்தோ ’பி ந வைஷ்ணவ: “சுருதி மற்றும் ஸ்மிருதி சாஸ்திரங்கள் எனது கட்டளைகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டளைகளை மீறுபவன் எனது விருப்பத்தை மீறி என்னை எதிர்ப்பவனாகிறான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஒருவன் தன்னை எனது பக்தன் என்று கூறிக்கொண்டாலும், உண்மையில் அவன் ஒரு வைஷ்ணவனல்ல.” பகவானைப் பற்றிக் கேட்பதிலும், பாடுவதிலும் திட நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாத...