Skip to main content

Posts

ஆத்ம நிவேதனம் (பூரண சரணாகதி)

தேவர்ஷி-பூதாப்த-ந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன் ஸர்வாத்மனா ய: சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம் மொழிபெயர்ப்பு அரசே, பௌதிக கடகைமளையெல்லாம் விட்டு அனைவருக்கும் புகலிடமளிக்கும் முகுந்தனின் தாமரைப் பாதங்களைப் புகலிடம் அடைந்தவன் தேவர்களுக்கோ, சிறந்த முனிவர்களுக்கோ சாதாரண ஜீவராசிகளுக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ மனித குலத்திற்கோ அல்லது முன்னோர்களுக்கோ கடனாளி அல்ல. இவ்வெல்லா ஜீவராசிகளும் பரமபுருஷரின் அங்கங்களே என்பதால், பகவானின் சேவைக்காகத்தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் தனித்தனியாக இவர்களுக்குச் சேவை செய்ய அவசியமில்லை. பொருளுரை பகவானின் பக்தித் தொண்டிடம் முழுமையாகச் சரணடையாதவனுக்கு நிச்சயமாகப் பல பௌதிக கடமைகள் உள்ளன. ஒவ்வொரு சாதாரண பந்தப்பட்ட ஆத்மாவும் சூரிய ஒளி, சந்திர ஒளி, மழை, காற்று, உணவு ஜட உடல் போன்ற எண்ணற்ற நன்மைகளை தேவர்களிடமிருந்து பெறுகிறான். இவற்றிற்குப் பதிலாக தேவர்களுக்கு யாகத்தில் நிவேதனம் செய்யாதவன் திருடன் (ஸ்தேன) என்று பகவத் கீதை கூறுகிறது. அவ்வாறே, பசு முதலான ஜீவராசிகள் சுவை மிக்க அநேக உணவு வகைகளை அளிக்கின்றன. காலையில் எழுந்ததும் பறவைகளின் இன...

ஹரி நாமாம்ருதம்

கிருஷ்ண உணர்விலுள்ள பக்தர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு மந்திரத்தை சொல்லிப் பயிற்சி செய்வது அவசியமாகும். மகா - மந்திரமான ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஒருவர் நிச்சயமாக ஜபிக்க வேண்டும். மேலும் சிந்தாமணி - ப்ரகர - ஸத்மஸு எனும் மந்திரத்தையோ அல்லது (இதோ ந்ருஸிம்ஹ: பரதோ நருஸிம்ஹோ யதோ யதோ யாமி ததோ ந்ருஸிம்ஹ:) என்ற நரசிம்ஹ ஸ்தோத்திரத்தையோ ஒருவர் பாடிப் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்தரும் ஏதேனும் ஒரு மந்திரத்தை பக்குவமான முறையில் பாடிப் பயிலவேண்டும். இதனால், இப்பிறவியில் அவர் ஒரு மிருகமாகப் பிறக்க நேர்ந்தாலும் கிருஷ்ண உணர்வை அவர் மறந்துவிடமாட்டார். இப்பிறவியிலேயே ஒருவர் தனது கிருஷ்ண உணர்வை பக்குவப் படுத்த முயல வேண்டும். ஏனெனில், கிருஷ்ணரையும் தன் உபதேசங்களையும் புரிந்து கொள்வதாலேயே, இவ்வுடலை உகுத்தபின் ஒருவரால் பரமபதத்தைச் சென்றடைய முடியும். ஒருவர் விழ நேர்ந்தாலும், கிருஷ்ண உணர்வுப் பயிற்சி ஒருபோதும் வீணாவதில்லை. உதாரணமாக, அஜாமிளன் தனது சிறு பிராயத்தில், தன் தந்தையின் உபதேசத்தின்படி, நாராயண எனும் நாமத்தை உச்சரிக்கும் பயிற்சியை மேற் கொண்டான். ஆனால் பிறகு, அவன் தன் வாலிபப் பருவத்தில் ஒரு குடிகாரனாகவும்...

பயம்

 

பயம்

 

அச்சம் தவிர்

பகவத்கீதைக் கூறுகிறது: ஆன்மீக வளர்ச்சியடைய விரும்பும் ஒருவன் முதலில் அச்சத்தை விட வேண்டும். “அபயம் ஸத்த்வ ஸம்ஸீத்தி:” (ப.கீ.16.1) பௌதீக ஈடுபாட்டினாலேயே அச்சம் உண்டாகிறது. இதனை ஸ்ரீமத் பாகவதமும் (11.2.37) குறிப்பிடுகின்றது: “பயம்த்விதீயாபினி வேஸத: ஸ்யாத்:” உடலியற் கருத்துடைய வாழ்க்கையே அச்சத்தினை உருவாக்குகின்றது. ஒருவன் தன்னை இழந்த ஜடவுடல் என்று நினைக்கும்வரை அவனுக்கு அச்சம் என்பது இருக்கும், இச் ஜடக்கருத்தினின்று ஒருவன் வெளிவரும் பொழுது அவன் பிரம்மபூத அல்லது தன்னுணர்வு பெற்றவனாகிறான் உடனடியாக அவன் அச்சமற்றவனாகிறான். ப்ரஹ்ம பூத: ப்ரஸன்னாத்மா (ப.கீ.18.54) அச்சமுடையோன் ஆனந்தம் அடைவதில்லை. பக்தர்கள் அச்சமில்லாதவர்கள். அவர்கள் எப்பொழுதும் ஆனந்த முடையோராயிருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் பகவானின் தாமரைத் திருவடிகளிடத்துத் தொடர்ந்து பக்தித் தொண்டில் ஈடுபடுவதே காரணமாகும். இது மேலும் கூறப்படுகிறது: ஏவம் ப்ரஸன்ன - மனஸோ பகவத் - பக்தி - யோகத: பகவத் - தத்த்வ - விஞ்ஞானம் முக்த - ஸங்கஸ்ய ஜாயதே (பாக.1.2.20) பகவத் பக்தி யோகத்தினைப் பயிற்சி செய்வதின் மூலம் ஒருவன் அச்சமற்றவனாகவும் ஆனந்தமுடையவனாகவும் ஆகிற...

நாம் செய்யும் செயல் நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும் அப்படி உயர்த்தவில்லை எனில் ..

நேஹ யத்கர்ம தர்மாய ந விராகாய கல்பதே ந தீர்த்தபதஸேவாயை ஜீவந்நபி ம்ருதோ ஹி ஸ: மொழிபெயர்ப்பு யாருடைய பணி மத வாழ்வுக்கு அவனை உயர்த்தவில்லையோ, யாருடைய மதச் சடங்குகள் அவனைத் துறவுக்கு உயர்த்தவில்லையோ, துறவில் உள்ளவனை எது பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டுக்கு அழைத்துச் செல்லவில்லையோ, அவன் சுவாசித்துக் கொண்டிருந்தாலும் இறந்தவனாகக் கருதப்பட வேண்டும். பொருளுரை தேவஹூதியின் கூற்று என்னவென்றால், அவள் புலன் நுகர்ச்சிக்காக அவள் கணவருடன் வாழ்வதற்கு பற்றுடையவளாக இருந்தாலும், அது உலகப் பிடிப்பிலிருந்து விடுதலைக்கு அழைத்துச் செல்லாவிட்டால், அவள் வாழ்வு வீணானதாகும். ஒருவர் செய்யும் வேலை அவரை மத வாழ்வு நிலைக்கு அழைத்து செல்லாவிட்டால், அது பயனற்ற செயல் ஆகும். எல்லாரும் இயற்கையால் ஏதாவது வேலை செய்ய விருப்பம் கொள்வர், அந்த வேலை ஒருவரை மத வாழ்வுக்கு அழைத்துச் சென்றால், அந்த மத வாழ்வு ஒருவரைத் துறவு நிலைக்கு அழைத்துச் சென்றால், அந்த துறவு நிலை ஒருவரை பக்தித் தொண்டிற்கு அழைத்துச் சென்றால், ஒருவர் அந்த வேலையின் நிறைவை அடைகிறார். பகவத் கீதையில் குறிப்பிட்டிருப்பதுபோல, எந்த வேலை ஒருவரை பக்தித் தொண்டின் நிலைக்கு இறு...

பிரேமையின் சுபாவம்