Skip to main content

Posts

ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரைப் போலவே முற்றிலும் ஆன்மீகமயமானவள்.

 ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரைப் போலவே முற்றிலும் ஆன்மீகமயமானவள். அவளை பௌதிகமாக யாரும் கருதக் கூடாது. அவள் நிச்சயமாக, பௌதிகப் புலன்களால் மூடப்பட்டு, ஸ்தூலம், சூட்சுமம் என்று பௌதிக உடல்களைக் கொண்டுள்ள கட்டுண்ட உயிர்வாழிகளைப் போன்றவள் கிடையாது. அவள் முற்றிலும் ஆன்மீகமானவள், அவளது உடல், அவளது மனம் என இரண்டும் அதே ஆன்மீக ஸ்வரூபம் கொண்டவை. அவளுடைய உடல் ஆன்மீகமானது என்பதால், அவளது புலன்களும் ஆன்மீகமானதே. இவ்வாறாக, அவளது உடல், மனம் புலன்கள் என அனைத்தும் கிருஷ்ண பிரேமையினால் முழுமையாக ஜொலிக்கின்றன. அவள் ஹ்லாதி,னீ சக்தியின் (பகவானது அந்தரங்க சக்தியின் ஆனந்தமளிக்கும் சக்தியின்) ஸ்வரூபம் என்பதால், ஸ்ரீ கிருஷ்ணருடைய இன்பத்திற்கு அவள் மட்டுமே மூலமாவாள். அகத்தில் தம்மிடமிருந்து வேறுபட்ட எதனையும் ஸ்ரீ கிருஷ்ணரால் அனுபவிக்க முடியாது. எனவே, ராதையும் ஸ்ரீ கிருஷ்ணரும் வேறுபட்டவர்கள் அல்லர். ஸ்ரீ கிருஷ்ணருடைய அந்தரங்க சக்தியின் ஸந்தி,னீ பகுதியானது முழு கவர்ச்சியுடைய ஸ்ரீ கிருஷ்ணரின் ரூபத்தை வழங்கியுள்ளது, அதே அந்தரங்க சக்தி ஹ்லாதி னீயின் அம்சத்தில். அனைவரையும் கவரக்கூடியவரை கவரக்கூடிய ஸ்ரீமதி ராதாராணியை ...

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பொன்னிற அவதாரம்

  க்ருஷ்ண - வர்ணம் த்விஷாக்ருஷ்ணம்   ஸாங்கோபாங்காஸ்த்ர - பார்ஷதம் யக்ஞை : ஸங்கீர்த்தன - ப்ராயைர்   யஜந்தி ஹி ஸு - மேதஸ : மொழிபெயர்ப்பு கலியுகத்தில் சிறந்த புத்திமான்கள் , சதா கிருஷ்ணருடைய நாமங்களைப் பாடிக் கொண்டிருக்கும் பகவானின் அவதாரத்தைக் கீர்த்தனை என்ற யாகத்தாலேயே பூஜிக்கின்றனர் . அவரது வர்ணம் கருமையில்லை என்றாலும் அவர் கிருஷ்ணரேயாவார் . அவர் தமது சகாக்களாலும் , சேவகர்களாலும் , ஆயுதங்களாலும் , அந்தரங்கத் தோழர்களாலும் சூழப்பட்டிருக்கிறார் . பொருளுரை இதே பதம் கிருஷ்ணதாஸ கவிராஜரால் சைதன்ய சரிதாம்ருதத்தில் ( ஆதி .3.52) மேற்கோள் காட்டப்பட்டுள்ளது . இச்சுலோகத்திற்கு ஸ்ரீல பிரபுபாதா பின்வரும் பொருளுரையைக் கொடுத்துள்ளார் . “ ஜீவ கோஸ்வாமி கிரம - ஸந்தர்பம் என்ற தமது பாகவத் உரையில் இச்சுலோகத்தைப் பின்வருமாறு விளக்குகிறார் . பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பொன்னிறமாகவும் தோன்றுகிறார் . அந்த பொன்னிற அவதாரம் , இக்கலியுகத்தில் சிறந்த அறிவாளிகளால் பூஜிக்கப்படும் பகவான் சைதன்யராவார் . இதை கர்க முனி பாகவதத்தில் உறுதி செய்த...