Skip to main content

Posts

மானிடப் பிறப்பு தன்னுணர்வு பெறுவதற்குச் சிறந்த வாய்ப்பிளைக் கொடுக்கிறது

  மானிடப் பிறப்பு   தன்னுணர்வு பெறுவதற்குச் சிறந்த வாய்ப்பிளைக் கொடுக்கிறது . ஒருவன் தேவலோகத்தில் தேவனாகப் பிறக்கலாம் . ஆயினும் வசதிகள் ஏராளமாக அங்கே இருக்கின்ற காரணத்தினால் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து ஒருவனால் விடுதலை பெற முடியாது . இப்பூலோகத்தில் கூட வசதி மிக்கவன் பொதுவாக கிருஷ்ண உணர்வினை மேற்கொள்வதில்லை . உலகப் பிடியிலிருந்து விடுதலை பெறுவதில் உண்மையான விருப்பமுடைய புத்திமான் தூய பக்தர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் . அத்தொடர்பினால் ஒருவன் பொருள் , பொன் என்னும் உலகக் கவர்ச்சியிலிருந்து படிப்படியாக விடுதலை பெற முடியும் . உலகப் பற்றின் அடிப்படை விதிகளாக இருப்பது , பணமும் , பெண்களுமே ஆவர் . ஸ்ரீ சைதன்ய மகா பிரபு அதனால்தான் வீடு பேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைய வேண்டுமென்று உண்மையில் விரும்புவோர் இறை உலகில் நுழைவதற்கானத் தகுதியைப் பெற பணம் மற்றும் பெண்களைத் துறக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார் . பணமும் பெண்களும் பகவானின் தொண்டிற்கே முற்றிலும் பயன்படுத்தப்பட வேண்டும் . இவ்வாறு பயன்படுத்துபவன் உலக...

பௌதீக உலகம் இன்பத்தின் மிகப்பெருங்காடு

  பௌதீக வாழ்க்கைக் காட்டின் நேரடி பொருள் இவ்வத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது , வணிகர்கள் நகரங்களில் நல்ல விலைக்கு விற்பதற்காகக் காட்டிற்குள் சென்று பல அரியப்பொருட்களைச் சேகரிக்கின்றனர் . ஆயினும் அக்காட்டுப்பாதை மிகவும் ஆபத்து நிறைந்ததாகும் . பௌதீக உலகில் அனுபவித்து மகிழ்வதற்காக ஒரு தூய ஆத்மா பகவானின் தொண்டினைக் கைவிட விரும்பும் பொழுது கிருஷ்ணர் பௌதீக உலகினுள் நுழைவதற்கான வாய்ப்பினை நிச்சயம் அவனுக்கு அருள்வார் . “ பிரேம விவர்தத்தில் ,” “ க்ருஷ்ண பஹிர் முக ஹனா போக வாஞ்சா கரே ” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது . பௌதீக உலகில் ஒரு தூய ஆத்மா வீழ்வதற்கு இதுவே காரணமாகும் , ஜட இயற்கையின் முக்குணங்களின் பாதிப்பின் கீழ் அவனது செயல்பாடுகள் இருப்பதினால் உயிர்வாழி பல்வேறு உயிர்க்குலங்களிடையே பல்வேறு நிலைகளை அடைகிறான் . சிலநேரம் அவன் தேவலோகத்தில் ஒரு தேவகுமாரனாகப் பிறக்கிறான் , சிலநேரம் கீழ் உலகில் ஒர் இழிந்த ஜந்துவாகப் பிறக்கிறான் . இது தொடர்பாக ஸ்ரீல நரோத்தம தாஸ தாக்கூர , “ நானா யோனி ஸதா பிரே :” உயிர்வாழ...