மானிடப் பிறப்பு தன்னுணர்வு பெறுவதற்குச் சிறந்த வாய்ப்பிளைக் கொடுக்கிறது . ஒருவன் தேவலோகத்தில் தேவனாகப் பிறக்கலாம் . ஆயினும் வசதிகள் ஏராளமாக அங்கே இருக்கின்ற காரணத்தினால் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து ஒருவனால் விடுதலை பெற முடியாது . இப்பூலோகத்தில் கூட வசதி மிக்கவன் பொதுவாக கிருஷ்ண உணர்வினை மேற்கொள்வதில்லை . உலகப் பிடியிலிருந்து விடுதலை பெறுவதில் உண்மையான விருப்பமுடைய புத்திமான் தூய பக்தர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் . அத்தொடர்பினால் ஒருவன் பொருள் , பொன் என்னும் உலகக் கவர்ச்சியிலிருந்து படிப்படியாக விடுதலை பெற முடியும் . உலகப் பற்றின் அடிப்படை விதிகளாக இருப்பது , பணமும் , பெண்களுமே ஆவர் . ஸ்ரீ சைதன்ய மகா பிரபு அதனால்தான் வீடு பேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைய வேண்டுமென்று உண்மையில் விரும்புவோர் இறை உலகில் நுழைவதற்கானத் தகுதியைப் பெற பணம் மற்றும் பெண்களைத் துறக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார் . பணமும் பெண்களும் பகவானின் தொண்டிற்கே முற்றிலும் பயன்படுத்தப்பட வேண்டும் . இவ்வாறு பயன்படுத்துபவன் உலக...