கட்வாங்க மகாராஜனின் மகன் தீர்கபாஹு. அவரது மகன் இரகு. இரகுவின் மகன் அஜன். அஜனின் மகன் தசரதர். தசரதரின் புத்திரர் பகவான் ஸ்ரீ ராமச்சந்திரர். பரமபுருஷர் தமது பூரண சதுரங்க அம்சமாக, பகவான் ராமச்சந்திரராகவும், லக்ஷ்மணராகவும், பரனாகவும் மற்றும் சத்ருக்னராகவும் இவ்வுலகில் அவதரித்தார். பரம சத்தியத்தை உண்மையாக அறிந்துள்ள வால்மீகியைப் போன்ற மாமுனிவர்கள் அவரது உன்னதமான லீலைகளை விவரித்துள்ளனர். ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி இந்த லீலைகளை சுருக்கமாக விவரிக்கிறார். பகவான் ராமச்சந்திரர் விஸ்வாமித்திரருடன் சென்று மாரீசனைப் போன்ற இராட்சஸர்களைக் கொன்றார். ஹரதனு என்ற பருத்த, உறுதியான வில்லை உடைத்தபின், பகவான் சீதைப் பிராட்டியை மணந்தார். பிறகு பரசுராமரின் கவர்த்தை வேரறுத்தார். அதன்பிறகு தன் தந்தையின் கட்டளைப்படி, சீதையும் லக்ஷ்மணனும் பின்தொடர வனம் புகுந்தார். அங்கு சூர்ப்பநகையின் மூக்கைத் துண்டித்ததுடன், இராவணனின் சகாக்களான கரன், தூஷணன் முதலானவர்களையும் கொன்றார். இராவணன் சீதையை அபகரித்துச் சென்றது முதல், அந்த அரக்கனின் துருதிர்ஷ்டம் ஆரம்பமானது. மாரீசன் ஒரு தங்க மானின் உருவை ஏற்றபோது, சீதையை மகிழ்விக்கும் பொ...