Skip to main content

Posts

யாரால் கிருஷ்ண உணர்வை புரிந்துகொள்ள முடியாது ?

       பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யத் திட்டமிடும் மனிதர்கள் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ளத்தகுதி இல்லாதவர்கள் . பகவானுக்குரிய உன்னத அன்புத் தொண்டாகிய ஆட்சியில் நுழைய முடியாது . மேலும் , உள்நோக்கத்துடன் மிகவும் செயற்கையாக ஆன்மீக குருவிற்கு அடங்கி நடக்கும் மாணவர்கள் என்போர் உள்ளனர் . அவர்களால் கிருஷ்ண உணர்வு நிலை அல்லது பக்தித் தொண்டைப் புரிந்துகொள்ளவும் முடியாது . மத நம்பிக்கையின் மற்றொரு உட்பிரிவால் துவக்கப்பட்டு . பரம புருஷ பகவானை அணுகுவதற்குப் பொது மேடையாக பக்தித் தொண்டைக் கொள்ளாதவர்களும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது . சில மாணவர்கள் நம்முடன் சேர்வதற்கு வருகின்றனர் எனும் அனுபவம் நமக்கு உண்டு , ஆனால் சில குறிப்பிட்ட வகையான நம்பிக்கையில் ஒரு புறச் சாய்வாக இருப்பதால் அவர்கள் நமது பாசறையை விட்டுச் சென்று , பாலைவனத்தில் விடப்படுகிறார்கள் . உண்மையில் , கிருஷ்ண உணர்வு நிலை ஒரு கிளைப்பிரிவினரின் மத நம்பிக்கை இல்லை ; அது பகவானையும் அவருடனான நமது உறவையும் புரிந...

மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடு

  பதம் 22 ஏதாவான் ஏவ லோகே ‘ஸ்மின் பும்ஸாம் தர்ம: பர: ஸ்ம்ருத: பக்தி - யோகோ பவகதி தன் நாம க்ரஹணாதிபி: மொழிபெயர்ப்பு பகவானின் புனித நாம ஜபத்திலிருந்து துவங்கும் பக்தித் தொண்டுதான், மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடாகும். பொருளுரை முந்திய சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், உண்மையான சமயக் கோட்பாடென்பது (தர்மம் பாகவதம்), ஸ்ரீமத் பாகவதத்தில் அல்லது பாகவதக் கல்விக்கு முதற்படியான பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளாகும் (பாகவதம் தர்மம்). இக்கோட்பாடுகள் யாவை? பாகவதம் கூறுகிறது, தர்ம: ப்ரோஜ்ஜித கைதவோ ‘த்ர: ஸ்ரீமத் பாகவதத்தில் ஏமாற்றுச் சமய முறைகள் இல்லை. பாகவதத்திலுள்ளஅனைத்தும் பரமபுருஷருடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன. பாகவதம் மேலும் கூறுவதாவது, ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே: ஆராய்ச்சி அறிவினால் எட்டிப் பிடிக்க முடியாதவரான பரமபுருஷரை நேசிக்கும் முறையை, எது தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு போதிக்கிறதோ அதுவே பரம தர்மமாகும். இத்தகைய ஒரு சமயம், தன் - நாம - க்ரஹண, அதாவது பகவான் புனித நாம ஜபத்திலிருந்து துவங்குகிறது (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ...

உலக வாழ்வு சார்ந்த இன்னல்களெனும் தீயை அணைக்க ஒரே வழி ஹரி நாமம் மட்டுமே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே இது எல்லை கடந்த ஒலி அதிர்வு. மனக்கண்ணாடியில் படிந்திருக்கும் மாசைத்துடைக்க நமக்கு உதவுவது. நியூயார்க் நகரின் இரண்டாவது சாலையில் நெருக்கமான வாகனப் போக்குவரத்து காரணமாக எல்லாப் பொருட்களின் மீதும் தூசியும் புகைக் கரியும் படிந்திருப்பதுபோல் நம் மனக் கண்ணாடியின் மீதும் உலக வாழ்வு சார்பான அழுக்கைப் படிய விட்டிருக்கிறோம. இவ்வுலகில் நம் நடவடிக்கைகளை நாம் கையாளும் விதம் காரணமாக நம் மனமெனும் தெளிவான கண்ணாடியில் பெருமளவில் தூசி சேர்ந்து அதன் விளைவாக நம்மால் எதையும் சரியான வடிவில் பார்கக முடிவதில்லை. இந்த எல்லை கடந்த ஒலி அதிர்வு (ஹரே கிருஷ்ண மந்திரம்) தூசியை அகற்றி நம் உண்மையான அமைப்பிலான நிலையில் நம்மை நாம் தெளிவாகக் காண உதவுகிறது. “நான் இந்த உடலில்லை; நான் ஆன்மா, உணர்வு என் சின்னம்” என்று நாம் இருத்திக் கொள்ள முடிகிறது. ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது நம் உணர்வு தெளிவு பெற்று இவ்வுலக இன்னல்களெல்லாம் மறைந்து போகின்றன. இந்த இகவுலகை எப்போதும் எரித்துவரும் தீ ஒன்றுண்டு; அதை அணைக்க எல்லோரும் ம...