Skip to main content

Posts

“நரகத்திலிருந்து வைகுண்டம் – ராமநாமத்தின் மகிமை”

     சீதாதேவியின் தந்தையான ஜனக மஹாராஜா , பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரின் மிகுந்த பக்தரும் ஆவார் . ஸ்ரீமத் பகவதம் - இல் அவர் தர்மத்தை நிலைநாட்டிய பன்னிரண்டு மகாஜனர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார் . அவருடைய கருணையும் , பக்தியும் வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான சம்பவம் பத்ம புராணத்தில் ( பாதாளகண்டம் ) விவரிக்கப்படுகிறது . ஒருநாள் , அனந்த சேஷன் ஜனக மஹாராஜா நரகத்தில் சென்ற நிகழ்வைப் பற்றி கூறினார் . தெய் வீக  வைகுண்ட  பயணம் இடைவிடாத யோக சாதனையின் பின் ஜனக மஹாராஜா தனது உடலைத் துறந்தார் . அப்பொழுது மணி ஒலிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தெய்வீக விமானம் இறங்கி வந்தது . அவர் அதில் ஏறிச் சென்றார் . அந்த விமானம் யமராஜாவின் உலகத்திற்கருகே சென்றபோது , அங்குள்ள பாவிகள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர் . ஆனால் ஆச்சரியம் என்னவெனில் – ஜனக மஹாராஜாவைத் தொட்ட காற்று அந்தப் பாவிகளை எட்டியவுடன் , அவர்கள் துன்பம் மறந்து பேரின்பத்தை அனுபவித்தனர் . அந்தப் பாவிகள் கண்ணீர் மல்க , " அரசே ! எங்களை விட்டுச் செல்ல...

யாரால் கிருஷ்ண உணர்வை புரிந்துகொள்ள முடியாது ?

       பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யத் திட்டமிடும் மனிதர்கள் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ளத்தகுதி இல்லாதவர்கள் . பகவானுக்குரிய உன்னத அன்புத் தொண்டாகிய ஆட்சியில் நுழைய முடியாது . மேலும் , உள்நோக்கத்துடன் மிகவும் செயற்கையாக ஆன்மீக குருவிற்கு அடங்கி நடக்கும் மாணவர்கள் என்போர் உள்ளனர் . அவர்களால் கிருஷ்ண உணர்வு நிலை அல்லது பக்தித் தொண்டைப் புரிந்துகொள்ளவும் முடியாது . மத நம்பிக்கையின் மற்றொரு உட்பிரிவால் துவக்கப்பட்டு . பரம புருஷ பகவானை அணுகுவதற்குப் பொது மேடையாக பக்தித் தொண்டைக் கொள்ளாதவர்களும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது . சில மாணவர்கள் நம்முடன் சேர்வதற்கு வருகின்றனர் எனும் அனுபவம் நமக்கு உண்டு , ஆனால் சில குறிப்பிட்ட வகையான நம்பிக்கையில் ஒரு புறச் சாய்வாக இருப்பதால் அவர்கள் நமது பாசறையை விட்டுச் சென்று , பாலைவனத்தில் விடப்படுகிறார்கள் . உண்மையில் , கிருஷ்ண உணர்வு நிலை ஒரு கிளைப்பிரிவினரின் மத நம்பிக்கை இல்லை ; அது பகவானையும் அவருடனான நமது உறவையும் புரிந...