பகவான் நரசிம்மர் அசுர ராஜனைவதம் செய்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 அசுர குமாரர்கள் அனைவரும் பிரகலாத மகாராஜனின் உபதேசங்களைப் பின்பற்றி பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவிடம் பற்றுக் கொண்டவர்கள் ஆயினர் . இப்பற்றுதல் தீர்மானமானதாக மாறியபொழுது , அவர்களுடைய ஆசிரியர்களான சண்டனும் , அமர்க்கனும் , அச்சிறுவர்கள் பகவானிடம் அதிக பக்தியுடையவர்களாக மாறி விடுவார்களோ என்று மிகவும் அஞ்சினர் . அவர்கள் உதவியற்ற இந்நிலையில் இரண்யகசிபுவை அணுகி , பிரகலாதருடைய பிரச்சாரத்தின் விளைவைப் பற்றி அவனிடம் விவரமாகக் கூறினார்கள் . இதைக் கேட்டதும் , இரண்யகசிபு தன் மகனான பிரகலாதரைக் கொன்றுவிட முடிவு செய்தான் . இரண்யகசிபு கடுங்கோபமடைந்ததால் , பிரகலாத மகாராஜன் அவனை சமாதானப்படுத்துவதற்காக அவனுடைய பாதங்களில் விழுந்து பல விஷயங்களைக் கூறினார் . ஆனால் இரண்யகசிபுவை அவரால் சமாதனப்படுத்த இயலவில்லை . ஓர் அசுரனுக்கு இலக்கணமாக விளங்கிய இரண்யகசிபு , தன்னைப் பரமபுருஷரை விடப் பெரியவனாக கூறிக்கொள்ளத் துவங்கினாள் . ஆனால் இரண்யகசிபு கடவுளல்ல என்று கூற...