Skip to main content

ஸ்ரீல ரூபகோஸ்வாமி அறியாமல் செய்த குற்றம்


 ஸ்ரீல ரூபகோஸ்வாமி அறியாமல் செய்த குற்றம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒருநாள் விருந்தாவனத்தில் , ஶ்ரீல ரூப கோஸ்வாமி தனது ஆழ்ந்த தியானத்தில் இதயம் முழுக்க பேரின்பத்தில் திளைத்திருந்தார். அவர் தனது சமாதிநிலையில் கோபியர்களின் அதியற்புதமான லீலைகளை கண்டு லயித்திருந்தார்.  கோபியர்கள் ஸ்ரீமதி ராதாராணியை அலங்கரித்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணர் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணர் தனது வருகையை கோபியர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களுடைய இதயங்களை மகிழ்ச்சி திருவிழாவாக்கினார், இது எதுவுமே ராதாராணிக்கு தெரியாது. 


கோபியர்கள் ராதாராணிக்கு அழகாக பின்னலிட்டு மலர்களால் அருமையாக அலங்கரித்தனர். அவளுடைய அழகை காண்பதற்காக கண்ணாடியை காண்பித்தனர். தனது தாமரைமுக அழகை ரசித்தபோது, கண்ணாடியில் கிருஷ்ணருடைய நிலவுமுகமும் தெரிவதைக் கண்டாள். இதனால் வெட்கமடைந்த ராதை தனது முகத்தை தனது மேலாடையால் மறைத்துக் கொண்டாள். இதனைக் கண்ட கோபியர்கள் சிரித்தபோது, ரூபகோஸ்வாமியும் சிரித்தார். 


அதே சமயத்தில்  ரூபகோஸ்வாமியை காண கிருஷ்ணதாஸர் என்ற வைஷ்ணவர் அங்கு வந்தார். ரூப கோஸ்வாமியின் சிரிப்பைக்கண்ட கிருஷ்ணதாஸர், தான் முடவன் என்பதால் தன்னை பரிகசித்து ரூபகோஸ்வாமி சிரிப்பதாக நினைத்துக்கொண்டார் இருப்பினும் மனதில் வேதனையுடன் ரூப கோஸ்வாமியின்  சகோதரரான  ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமியை காணச்சென்றார். 


கிருஷ்ணதாஸர், ஸநாதரிடம் , “நான் ஸ்ரீல ரூபகோஸ்வாமியை காணச்சென்றேன், ஆனால் அவரோ என்னைக் கண்டதும் சிரித்துவிட்டார். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஏன் அவர் இப்படி நடந்து கொண்டார் என்று எனக்கு புரியவில்லை. அவரிடம் எதுவும் பேசாமல் நேராக உங்களிடம் வந்துவிட்டேன்.” என்று கூறினார்.


இதை கேட்ட ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமி சிறிது நேரம் மௌனமாக தியானத்தில் ஆழ்ந்து  ரூப கோஸ்வாமியின் நிலையை அறிந்தார். ரூப கோஸ்வாமி  கண்ட அதே காட்சிகளை தானும் கண்டு பரவசதில் மூழ்கினார். பின்னர்  ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமி, ரூப கோஸ்வாமி சிரித்ததற்கான காரணத்தை கிருஷ்ணதாஸரிடம் விளக்கினார். 


இதனைக் கேட்ட கிருஷ்ணதாஸர்  மிகவுமே வருந்தினார். துக்கம் தொண்டையை அடைக்க  " நான் அச்சமயத்தில் அங்கு சென்றிருக்ககூடாது. அவருடைய மனதைப் புரிந்துகொள்ளாமல் அவருக்கு குற்றம் புரிந்துவிட்டேன்.”  என்று கூறினார்


கிருஷ்ணதாஸரின் குமுறலைக் கண்ட ஸநானதர் அவரை சிரமப்பட்டு சமாதானப்படுத்தினார். இதற்கிடையில், கிருஷ்ணதாஸர்  ரூப கோஸ்வாமியை தவறாக நினைத்த குற்றத்திற்காக வருந்தியவுடனேயே, இங்கு ரூப கோஸ்வாமிக்கு பகவானுடைய லீலைகள் திடீரென்று அவருடைய பார்வையிலிருந்து மறைந்தது. இதனால் வருத்தமடைந்தவராக, சுற்றும் முற்றும் பார்த்தார். 



சூழ்நிலையை ஆராய்ந்தபோது,  கிருஷ்ணருடைய லீலைகளில் தான் மூழ்கியிருந்த சமயத்தில், யாரோ ஒரு தூய பக்தர் இங்கு வந்திருக்க வேண்டும். கிருஷ்ணரின் லீலைகளை தரிசனம் செய்து கொண்டிருந்த தான் அவரை சரியான முறையில் வரவேற்க தவறிவிட்டேன்.அதனால் அவர் மனவருத்ததுடன் இவ்விடம் விட்டு சென்று இருப்பார்.அதனால் எனது நிஷ்டை தடைபட்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். 


“என்னைத் தேடிவந்தவரை நான் கண்டு கொள்ளாமல், அவருக்கு குற்றம் செய்துவிட்டேன்” என்று எண்ணியவராக, ரூப கோஸ்வாமியும் ஸநாதனரைக் காணச் சென்றார். 


அங்கே ரூப கோஸ்வாமியும் கிருஷ்ணதாஸரும் நமஸ்கரித்து ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். ஒருவரையொருவர் மன்னித்து இருவருமே மகிழ்ச்சியடைந்தனர். இருவருமாக இணைந்து ஸநாதன கோஸ்வாமியை நமஸ்கரித்தனர். பின்னர் நீண்டநேரம் அவர்கள் அனைவரும் கிருஷ்ணருடைய இத்தகைய அமிர்தமயமான லீலையின் சுவையில் மூழ்கியிருந்தனர். இத்தகைய நிகழ்ச்சிகளைக் கேட்ட அனைவரும் அதிசயத்தனர். 


கதையின் நீதி: 

🍁🍁🍁🍁🍁🍁🍁


இத்தகைய அற்புதமான லீலை நமக்கு மிகப்பெரிய பாடமாகும். 


முதலாவதாக நாம் தூய பக்தர்களுக்கு மட்டும்தான் அபராதம் (குற்றம்) செய்யகூடாது என்று நினைத்துக்கொண்டு, யார் தூய வைஷ்ணவர் என்பதை ஆராய்வதில் நமது அபராதங்களை(குற்றங்களை) நியாயப்படுத்துகிறோம்.  


அதற்கு பதிலாக, “நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவருமே தூய பக்தர்களே” என்று நினைக்கவேண்டும். இத்தகைய உணர்வுதான், நாம் மற்றவர்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும், அவர்களை துளியளவும் புண்படுத்தாமல் பழகவேண்டும் என்பதில் நம்மை வழிநடத்தும்.  


எதனால் நாம் பல வருடங்களாக பக்தி சேவையில் ஈடுபட்டும் எந்தவொரு சுவையையும் அடையமுடியாமல் இருக்கின்றோம் என்ற கேள்விக்கான பதிலாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. 


ஸ்ரீமத் பாகவதம் 4.9.23ல் ஸ்ரீல பிரபுபாதர் தனது பொருளுரையில் கூறுகின்றார், “ஒரு வைஷ்ணவரின் தாமரைப்பாதத்தில்  செய்யும் குற்றமே இந்த உலகில் மிகப்பெரிய குற்றமாகும். துருவ மன்னரை அவமதித்த காரணத்தால், சுருசி தனது மகனை இழந்து, பைத்தியமாகி, அவனைத் தேடி காட்டுக்குள் சென்றபோது, காட்டுத்தீக்கு இரையாகினாள், இவ்விதமாக அவளுடைய வாழ்க்கை முடிவுற்றது.”  இந்த பாடத்தின் மூலமாக நாம் ஒரு வைஷ்ணவரை ஒருபோதும் நிந்திக்க கூடாது என்ற பாடத்தை கற்கவேண்டும். 


சுருசி துருவ மன்னரை அவமதித்தபோது அவர் சிறு குழந்தையாகத்தான் இருந்தார். துருவ மன்னர் சிறந்த வைஷ்ணவர் என்பதை அவள் அச்சமயத்தில் அறிந்திக்கவில்லை, எனவே அவளுடைய குற்றம் அறியாமல் இழைக்கப்பட்டதே. 


ஒரு வைஷ்ணவருக்கு அறியாமல் செய்யும் சேவையினால் ஒருவர் நற்பலன்களை அடைகிறார், அதேசமயம், அறியாமல் செய்யும் குற்றத்திற்காக அவர் துர்பலன்களை அடைகிறார். 


வைஷ்ணவர்கள் பரம புருஷ பகவானுக்கு மிகமிக பிரியமானவர்கள். வைஷ்ணவரை மகிழ்விப்பதும், வருத்தமடையச் செய்வதும் பரம புருஷரை நேரடியாக பாதிக்கின்றது.  நாம் நமது சுயகௌரவத்தை விட்டொழித்து அறிந்தோ அறியாமலோ அனைவரிடமும் செய்துள்ள குற்றங்களுக்கு  மன்னிப்பு கேட்க வேண்டும். 


ஸ்ரீமத் பாகவதம் 9.4.68ல், தனது பொருளுரையில் ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பிடுகின்றார், “ஸாதவோ ஹ்ருதயம் மஹ்யம்” – தூய பக்தர்கள் எப்போதும் எனது இதயத்தில் குடிகொண்டுள்ளனர்.” என்று பகவான் நாராயணன் மாமுனிவர் துர்வாசரிடம்  கூறிகிறார் .


 தனது குழந்தையின் வருத்தத்தைக் கண்டு துயரப்படும் தந்தையைப் போலவே பகவான் துயரப்படுகிறார். எனவே வைஷ்ணவர்களுடைய தாமரைப் பாதங்களில் குற்றம் இழைக்காமல் இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும். வைஷ்ணவரை  மட்டுமல்ல வேறு எவரையும்  நிந்திக்கக்கூடாது. 


ஒரு பக்தரின் தாமரைப்பாதங்களில் எந்தவொரு குற்றமும் செய்துவிடக்கூடாது என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு உறுதியாக வலியுறுத்துகின்றார். 


இத்தகைய குற்றம் மத யானையுடன் ஒப்பிடப்படுகிறது. மதம்கொண்ட யானை தோட்டத்திற்குள் நுழைந்தால் அனைத்தையும் அழித்து பாழாகிவிடும். 


எனவே ஒருவர் ஒரு தூய பக்தரின் தாமரைப் பாதங்களில் குற்றமிழைத்து விடாமல் இருப்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.” என்று பக்தி ரத்னாகரின் ஐந்தாவது அலை கூறுகிறது. 


பக்த-ஸ்தானே ஸபதான ஹபே ஸர்வ மதே 

யேன கோன அகௌஸல நஹே தாந்ர சிதே

அகௌஸல ஹைலே ஸப ஹய அந்தரய

ப்ரஸங்க பலிய கிச்சு கஹியே யேதய


“பக்தர்களுடன் பழகுவதில் கவனமாக இருங்கள், அவர்களுடைய மனதை துளியளவும் வருத்தம் கொள்ளச் செய்துவிடாதீர்கள். பக்தர்களை வருத்தமடைச் செய்வது உங்களுடைய பக்திப்பாதைக்கான தடைக்கற்களாகும்.”


வைஷ்ணவ பிரணாமம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


வாஞ்சா-கல்பதருப் யஷ், ச க்ருபா-ஸிந்துப்ய ஏவ ச

பதிதானாம் பாவனேப் யோ வைஷ்ணவேப் யோ நமோ நம:


நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும், கற்பக விருட்சங்களைப் போன்று எல்லாரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவர் களுமான பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.


ஹரே கிருஷ்ண !


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...