Skip to main content

கோபீ சந்தனத்தின் மகிமை


 கோபீ சந்தனத்தின் மகிமை

ஆதாரம் - ஶ்ரீ கர்க ஸம்ஹிதை / ஆறாம் காண்டம் / அத்தியாயம் 15 


🍁🍁🍁🍁🍁🍁🍁


நாரத முனிவர், பஹூலாஸ்வ மன்னரிடம் கூறினார் .  மன்னா! இனி கோபீபூமியின் மகிமையைக் கேள். இது பாவம் போக்கும் உத்தமமான தீர்த்தமாகும். அதைக் காதால் கேட்ட மாத்திரத்தில் கர்ம பந்தனத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது கோபிகள் அங்கு வாசம் செய்த காரணத்தாலேயே அந்த இடம் கோபி பூமி என்னும் பெயரில் பிரபலமாகி உள்ளது. அங்கு கோபிகளுடைய அங்கப் பூச்சினால் தோன்றிய உத்தமமான கோபிசந்தனம் கிடைக்கிறது. தன் அங்கத்தில் கோபி சந்தனம் தரிப்பவனுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது எப்போதும் கோபி சந்தனத்தால் அடையாளமிடப்பட்டவன், அதாவது கோபி சந்தனமுத்திரை திலகமணிபவன் ஒவ்வொரு நாளும் மஹா நதியில் நீராடிய புண்ய பலனை அடைகிறான்


அவன் ஆயிரம் அச்வமேதமும் நூறு ராஜசூய யாகமும் செய்தவனாகிறான் எல்லா தீர்த்தங்களின் சேவையும் தான-விரதங்களின் அனுஷ்டானமும் செய்தவனாகிறான். நிச்சயம் அவன் கோபிசந்தனம் தரித்ததினால் மட்டுமே தன்யனாகி விடுகிறான். கங்கையின் மண்ணைக்காட்டிலும் இருமடங்கு புண்ணியம் சித்ரகூட மண்ணுக்கு உண்டு என்று கருதப்படுகிறது. அதைக்காட்டிலும் பத்து மடங்கு புண்ணியம் பஞ்சவடி மண்ணுக்கும் அதையும் விட நூறு மடங்கு புண்ணியம் கோபீ சந்தன மண்ணுக்கும் உண்டு. கோபி சந்தனத்தை நீ பிருந்தாவனத்துக்கு நிகரானது என்பதை அறிந்து கொள். கோபி சந்தனமிடப்பட்ட சரீரம் நூற்றுக்கணக்கான பாவங்களோடு இருப்பினும் அதை யமராஜன் தன்னுடன் எடுத்துச்செல்ல முடியாது என்றால் யம தூதர்களைப் பற்றி என்ன கூறுவது? பாவியாக இருந்தாலும் தினந்தோறும் கோபி சந்தனத்தை உடலில் தரிப்பவன் இயற்கையின் குணங்கள் பிரவேசிக்க முடியாத ஸ்ரீஹரியின் கோலோக தாமத்திற்குச் செல்கிறான்.


மன்னர் தீர்கபாஹூ


🍁🍁🍁🍁🍁🍁🍁


சிந்து தேசத்தில் தீர்க்கபாஹூ என்னும் ஒரு மன்னன் இருந்தான். அவன் அநியாயமான வகையில் வாழ்க்கை நடத்தியவன் துஷ்டன், எப்போதும் பொது மகளிரின் சங்கத்திலேயே இருந்தவன் அவன் பாரத பூமியில் நூற்றுக்கணக்கான பிராமணர்களைக் கொன்றவன். அந்தத் தீயவன் பத்து கர்ப்பிணிகளைக் கொன்றவன் அவன் வேட்டையாடும் போது தன் அம்புகளால் கபிலா இன பசுக்களைக் கொன்றவன். ஒருநாள் அவன் சிந்துதேசக் குதிரையில் ஏறி மான் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். அங்கு அவனிடம் கோபமுற்றிருந்த மந்திரி ஒருவன் அரசுப் பேராசையால் அந்தத் தீய மன்னனை கூர்மையான முனையுள்ள கத்தியால் அந்தக் காட்டிலேயே கொன்றுவிட்டான். அவன் மரணமடைந்து பூமியில் கிடப்பதைக் கண்ட யமனுடைய பணியாட்கள் கட்டி, பரஸ்பரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு அவனை யமபுரிக்கு எடுத்துச் சென்றனர். அந்தப் பாவி எதிரில் நிற்பதைக்கண்ட எமராஜன் சித்ரகுப்தனிடம் இவனுக்குத் தகுதியான கஷ்டம் (வேதனை) என்ன என்று கேட்டான்.


சித்ரகுப்தன் கூறினான்: மகாராஜா இவனை ஐயமின்றி எண்பத்து நான்கு லக்ஷம் நரகங்களிலும் மாறி மாறி வீழ்த்தினாலும் சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை இவன் நரகத்தின் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கவேண்டும். இவன் பாரத பூமியில் பிறவி எடுத்து ஒரு கணம்கூட ஒருபோதும் புண்ணியம் செய்ததே கிடையாது. இவன் பத்து கர்ப்பவதி பெண்களையும் எண்ணற்ற கபிலா பசுக்களையும் கொலை செய்திருக்கிறான். இதைத்தவிர காட்டு விலங்குகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறான். ஆகவே தெய்வ, பிராம்மண நிந்தை செய்த இவன் பெரும் பாவியாவான்



நாரதர் கூறுகிறார்: "மன்னா அப்போது யமனுடைய ஆணைப்படி யமதூதர்கள் அந்த பாவ ஆத்மாவை கும்பீபாகமெனும் நரகத்திற்கு அழைத்துச் சென்றனர். அது ஆயிரம் யோஜனை விஸ்தீரணமானது. அங்கு பெரிய கடாயில் சூடாக்கப்பட்ட எண்ணெய் நிரம்பியிருந்தது, கொதிக்கும் அந்த எண்ணெயில் நுரை ததும்பிக் கொண்டிருந்தது யமதூதர்கள் அந்த பாவியை கும்பீபாகத்தில் தள்ளினார்கள். அவன் விழுந்ததுமே பிரளய அக்னியைப் போல ஜ்வலித்துக் கொண்டிருந்த அக்னி அக்கணமே குளிர்ந்துவிட்டது. விதேஹ மன்னா பிரஹ்லாதனை கொதிக்கும் எண்ணெயில் வீசியதும் அது குளிர்ந்து விட்டதைப் போல் அந்தப் பாவியை நரகத்தில் தள்ளியதும் அங்கிருந்த ஜூவாலை சாந்தமாகிவிட்டது. யமதூதர்கள் அக்கணமே யமராஜனிடம் சென்று இந்த சம்பவத்தைக் கூறினார்கள் சித்ரகுப்தனும் யமனும் மிகுந்த கவலையில் ஆழ்ந்து இவன் புவியில் ஒரு போதும் எந்த புண்ணியமும் செய்ததில்லையே என்று யோசிக்கலாயினர். மன்னா! இதே சமயம் தாமராஜனின் சபையில் வியாசமுனிவர் எழுந்தருளினார். அவரை வரவேற்று பூஜித்த தர்மராஜர் அவரை வணங்கிக் கேட்கலானார்


யமன் கேட்டார்: 'பகவானே !  இந்தப் பாவி எப்போதும் எந்தப் புண்ணியச் செயலையும் செய்தது கிடையாது. ஆகவே நுரைததும்பும் கொதிக்கும் எண்ணெய் நிறைந்த கும்பீபாகத்தின் பெரிய கடாயில் இவன் வீசப்பட்டான். இவனைப் போட்டதுமே அங்கிருந்த  தீ  குளிர்ந்துவிட்டது. இதனால் என் மனம் மிகவும் கவலைப்படுகிறது.


ஸ்ரீ வியாசர் கூறினார்: 'சாஸ்திரமறிந்த பண்டிதர்களில் சிறந்த ஞானபுருஷர்கள் பிரம்மத்தின் கதி சூச்ஷமமானதென்று  கூறுவதைப்போல பாவ-புண்ணியத்தின் கதியும் சூஷ்மமானது. தெய்வாதீனமாக இவனுக்குத் தானாகவே பிரத்யக்ஷமான பயனுடைய புண்ணியம் கிடைத்து விட்டிருக்கிறது. அறிவிற் சிறந்தவரே, அவன் தூய்மையடைந்ததற்கான புண்ணியத்தைக் கூறுகிறேன், கேளுங்கள். யார் கையினாலோ துவாரகாவின் மண் இருந்த இடத்திலேயே இந்தப் பாவியின் மரணம் நிகழ்ந்துள்ளது. அந்த மண்ணின் பிரபாவத்தால்தான் இந்தப் பாவி தூயவனாகி விட்டான். கோபி சந்தனப் பூச்சு உடைய அங்கத்தை உடைய நரன், நாராயணனாகி விடுகிறான். அவனது தரிசனத்தால் மட்டுமே பிரம்மஹத்தி விலகிவிடுகிறது.


நாரதர் கூறுகிறார். மன்னா! இதைக்கேட்ட தர்மராஜர் அவனை அழைத்து வந்தார். விரும்பியபடி செல்லக்கூடிய ஒரு சிறப்பு விமானத்தில் அவனை உட்காரச் செய்து இயற்கைக்கு அப்பாற்பட்டதான வைகுண்ட தாமத்திற்கு அனுப்பிவிட்டார். கோபி சந்தனத்தின் ஞானம் (பிரதாபம்) அவருக்குத் தற்செயலாக அப்போதுதான் உண்டாயிற்று மன்னா! நான் உனக்கு கோபி சந்தனத்தின் மகிமையைக் கூறிவிட்டேன். கோபி சந்தனத்தின் சிறந்த இந்த மாஹாத்மியத்தைக் கேட்பவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய பரமதாமத்திற்குச் செல்கிறான்.



கோபீ சந்தனத்தில் திலகம் தரிப்பது எப்படி? 


அருளியவர் :- தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி 


🍁🍁🍁🍁🍁🍁🍁


திலகம் தரிப்பதற்கு பல்வேறு விதமான பொருட்கள் சாஸ்திரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கௌடீய வைஷ்ணவர்கள் கோபிசந்தனத்தைப் பயன்படுத்துவர். துவாரகையிலிருந்து பெறப்படும் இந்த மஞ்சள் நிற களிமண் அனைத்து இஸ்கான் கோயில்களிலும் கிடைக்கப்பெறும். திலகம் அணிவதற்கு சிறிது நீரை இடது உள்ளங்கையில் எடுத்துக் கொள்ளவும். கோபிசந்தனக் கட்டியை வலது கையில் எடுத்து, அதனை நீருடன் தேய்த்து, குழைவான பசையை உருவாக்கவும். 



வலது கையின் மோதிர விரல் நுனியைக் கொண்டு, இடது உள்ளங்கையில் இருக்கும் கோபிசந்தனக் கலவையில் சிறிதை எடுக்கவும். பின்னர், நெற்றியில் நாமம் இட வேண்டும். இரண்டு நேரான கோடுகள் வரும் வகையில் நடுவே சீராக அழுத்தவும். மூக்கின் மேல் பாகத்திலிருந்து மேல்நோக்கி செல்ல வேண்டும். மேலிருந்து கீழாக அல்ல. இறுதியில் இரண்டு அழகிய கோடுகள் வரும்வரை இதனை பலமுறை தொடரலாம். பின்னர், கோபிசந்தனத்தை மேலிருந்து கீழாக மூக்கின் மீது இட வேண்டும். மூக்கின் நான்கில் மூன்று பங்கு திலகம் இருக்க வேண்டும். (அதாவது, மிகச் சிறியதாகவும் இல்லாமல், மூக்கு முழுவதும் இல்லாமல் இருக்க வேண்டும்.) நெற்றியில் இடப்பட்டதையும் மூக்கில் தரித்ததையும் இடைவெளி ஏதுமின்றி இணைக்க வேண்டும், 



உடலின் குறிப்பிட்ட இடங்களில் திருநாமம் தரிக்கும்போது, பின்வரும் மந்திரங்களை இங்கு காட்டப்பட்டுள்ள வரிசையில் உச்சரித்து திலகமிட வேண்டும்.


1) ஓம் கேஷவாய நம:     -     நெற்றி


(2) ஓம் நாராயணாய நம:     -     வயிற்றின் மத்தியில்


(3) ஓம் மாதவாய நம:     -     நெஞ்சுப்பகுதி 


(4) ஓம் கோவிந்தாய நம:     -      கீழ் கண்டம் (தொண்டை) 


(5) ஓம் விஷ்ணவே நம:     -     வயிற்றின் வலப்பக்கம்


(6) ஓம் மதுஸூதனாய நம:     -     வலது புஜத்தின் கீழ்பகுதி


(7) ஓம் த்ரிவிக்ரமாய நம:     -     வலது புஜத்தின் மேல்பகுதி


(8) ஓம் வாமனாய நம:     -     வயிற்றின் இடப்பக்கம்


(9) ஓம் ஸ்ரீதராய நம:     -     இடது புஜத்தின் கீழ்பகுதி


(10) ஓம் ஹ்ருஷீகேஷாய நம:     -     இடது புஜத்தின் மேல்பகுதி


(11) ஓம் பத்மநாபாய நம:     -     முதுகின் மேல்பகுதி


(12) ஓம் தாமோதராய நம:     -     முதுகின் கீழ்பகுதி   



வலது கரத்தின் மோதிர விரலால் திருநாமம் இட வேண்டும். வலது புஜத்தில் இடப்படும் இரண்டு திலகத்திற்கும் இடது கரத்தின் மோதிர விரலைப் பயன்படுத்த வேண்டும். திலகம் இட்டுக் கொண்டபின், இடது உள்ளங்கையில் இருக்கும் சிறிதளவு கோபிசந்தனத்தை, ஓம் வாஸுதேவாய நம: என்று சொல்லியவாறு உச்சந்தலையில் இட்டுக்கொள்ள வேண்டும்.



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...