Skip to main content

பிரம்மதேவர்



12 மஹாஜனங்கள்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


1

பிரம்மதேவர் 


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


இந்த பிரபஞ்ச படைப்பிற்கு  சற்று பின்னர் படைக்கப்பட்ட முதல் உயிர் வாழியே பிரம்மதேவர். அவர் பகவான் விஷ்ணுவின் நாபித்  தாமரையில் இருந்து பிறந்தவராவார்.  பௌதிக உலகப் படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மதேவரின் இதயத்தில் வேத அறிவை பகவான் புகட்டினார்.  வேதங்களை அவர் மூன்று முறை மிகுந்த சிரத்தையோடு படித்து வேதங்களின் நோக்கத்தை அறிவதில் கவனம் செலுத்தி அனைத்தையும் கவனமாக ஆராய்ந்த பின்னர் அனைத்து மத கொள்கைகளின் மிக உயர்ந்த பக்குவம் முழுமுதற்கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தூய்மையான அன்போடு இடையறாது பக்தித் தொண்டு  செய்வதே என்பதை உறுதிப்படுத்தினார்.



ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ

யதோ பக்திர் அதோக்ஷஜே

அஹை துகி அப்ரதிஹதா 

யயாத்மா ஸுப்ரஸீததி




( எதனால் மனிதன் பரம புருஷரின்  உன்னதமான பக்தித் தொண்டை பெற முடியுமோ அதுவே மனித வர்க்கம் முழுமைக்கும் தர்மமாகும்.  ஆத்மாவை பூரண திருப்தி படுத்துவதற்கு இத்தகைய பக்தித் தொண்டு உள்நோக்கம் இல்லாததாகவும் இடையறாத ஆகவும் இருக்க வேண்டும் ) ( ஸ்ரீமத் பாகவதம் 1.2.6 )


முழுமுதற்கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிரம்ம தேவரை தவம் மேற் கொள்ளுமாறு பணித்தார்.


அந்த நேரத்தில் படைப்பில் வேறு எவரும் இல்லாததால் பிரம்மதேவரே  முதல் உயிர்வாழியாக இருந்தார்.   பிரபஞ்சங்களை படைத்தல் முதலான பகவத் தொண்டிற்கு பிரம்மதேவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.  அவர் பல தரப்பட்ட படைப்புகளை இந்த பிரபஞ்சத்தில் படைத்தார்.  எண்ணற்ற கிரகங்களையும் ஒவ்வொரு கிரகங்களிலும் எண்ணிலடங்காத வகையில் உயிர்களையும் படைத்தார்.  அவர் தனது தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.  ஆயிரம் தேவ ஆண்டுகள் அவர் தவத்தில் ஆழ்ந்தார்.  இதன் மூலம் அவர் தனது புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தினார்.  அவரது தவங்கள் மற்ற உயிர்வாழிகளுக்கு சிறந்த பாடமாக அமைந்தது.  இதனால் அவர் துறவிகளில் எல்லாம்  மிகச் சிறந்தவராக அறியப்பட்டார்.  பகவானே ஆன்மீக குருவாக இருந்து நல்கிய வழி முறைகளை பிரம்மதேவர் எவ்வாறு நிறைவேற்றினாரோ அதைப்போல் அங்கீகரிக்கப்பட்ட நம்முடைய ஆன்மீக குரு நமக்கு இட்ட ஆணைகளை நிறைவேற்றுவதில் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.



பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிரம்மதேவரிடம் நிறையவே அன்பு கொண்டிருந்தார்.  இதனால் அவர் தமது பல லீலைகளில் அவரை பங்கேற்க வைத்தார். பிரம்ம தேவரிடம் இருந்து வேதங்களைத் திருடிய அசுரனுடன்  பகவான் ஶ்ரீமன் நாராயணன் ,ஹயக்ரீவராக அவதாரமெடுத்து சண்டையிட்டார். மேலும்  பரம புருஷ பகவான் வராக மூர்த்தியாக அவதாரம் எடுத்த போது பிரம்மதேவரின்  மூக்கிலிருந்து வெளியே வந்தார்.  பிரம்மதேவர் தனது பல சந்தர்ப்பங்களிலும் மற்றும் அவரது பல சாதனைகளின் போதும் தேவர்களுக்கு தலைமை வகித்து பரமபுருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றிப் புகழ்ந்தார். பல்வேறு தவங்களையும் யாகங்களையும். மேற்கொள்பவர்களை ஆசீர்வதிக்கும் பொருட்டு பகவான் விஷ்ணு பிரம்ம தேவரை நியமித்திருந்தார்.   எப்போதெல்லாம் இப்பிரபஞ்சத்தில் இடையூறுகள் ஏற்படுகின்றதோ அதை அது அதற்கென்று நியமிக்கப்பட்ட தேவர்களால் தீர்வு காண முடியவில்லை என்றால் அவர்கள் பிரம்ம தேவரை நாடுவர். அவராலும் பிரச்சினைக்கு தீர்வு காண இயலாவிடில் பிறகு பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவை போற்றித் துதித்து அவருடன் கலந்து ஆலோசித்து பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பார்.  பிரம்மதேவர் "பிதாமகர்" அதாவது தாத்தா என்று அறியப்படுகிறார். பகவானோ "பரம பிதா மகர்" அல்லது தாத்தாவின் தந்தை கொள்ளுத்தாத்தா என்று அறியப்படுகிறார்.


பிரம்மதேவர் தனது 'பிரஹ்ம சம்ஹிதையில்' பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய நிறைய விஷயங்களை அதிக அளவில் விளக்கியுள்ளார்.


இந்த பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த கிரகமான பிரம்மலோகத்தில் பிரம்மதேவர் வசிக்கின்றார.  சத்ய யுகம், திரேதாயுகம், துவாபரயுகம்,, கலியுகம் என்ற இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் என்று அறியப்படுகிறது.  இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல்.  அதைப்போல் ஆயிரம் சதுர் யுகங்கள் அவரின் ஒரு இரவு.  இவ்வாறு 2000 சதுர யுகங்கள் சேர்ந்தது பிரம்மதேவரின் ஒரு நாள்.  இவ்வாறு அவர் நூறு ஆண்டுகள் உயிர் வாழ்கின்றார். பூமி கணக்கீட்டின்படி 311 மில்லியன் மற்றும் 40 பில்லியன் ஆண்டுகள்.  இதுவே பிரம்மதேவரின் ஆயுட்காலம்.


 இவ்வளவு உன்னதமான குணங்களை பிரம்மதேவர் கொண்டிருந்தும் பூமியில் அவருக்கென்று சில கோவில்களே உள்ளன.  குறிப்பிடும்படியாக  ராஜஸ்தானில் உள்ள புஷ்கரத்தில் "ஜகத் பிதா" கோவில் அமைந்துள்ள.  தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள  "உத்தமர் கோவில்".  ஆனால் வருடந்தோறும் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் பிரம்மோற்சவ உற்சவத்தின் போது அவர் தனது அன்பு கலந்த பக்தியை தொடர்ந்து பகவானிடம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...