Skip to main content

மனு ( மனித குலத்தின் உண்மையான தந்தை)


 மனு


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மனு என்பவர் மனித குலத்தின் உண்மையான தந்தை ஆவார்.  இதன் காரணமாகவே மனிதகுலம் "மனுஷ்யா" என்று அழைக்கப்படுகிறது.  உலகத்தின் முழு நிர்வாகப் பொறுப்பும் பகவானிடம் திரும்பிச் செல்வதற்கான முறைக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மதேவர் முழுமுதற்கடவுள் பகவான் கிருஷ்ணரின் பிரதிநிதி ஆவார்.  மனு என்பவர் பிரம்மதேவரின் மகனாவார்.  அதுபோலவே பிரபஞ்சத்தின் வெவ்வேறு கிரகங்களில் உள்ள மன்னர்கள்,  அரசர்கள் யாவரும் மனுவின் பிரதிநிதிகளாவர்.  பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர், எவ்வாறு மனுக்கள் உன்னதமான அறிவை தமக்கு போதித்தவர்களிடமிருந்து நம்பிக்கையோடு பெற்றனர் என்பதையும், எவ்வாறு  அவர்கள் நம்பிக்கையோடு தமது சந்ததியினருக்குக் அதனை கற்றுக் கொடுத்தனர் என்பதையும் விளக்குகிறார்.



பிரபஞ்ச படைப்பின் முதல்  உயிர் வாழி, ஸ்வாயம்புவ மனு மற்றும் அவரது மனைவி சதரூபாவையும் உருவாக்கிய பிரம்ம தேவர் ஆவார். இங்கு காட்டப்பட்ட பிரம்மதேவர் மற்றும் மனு இடையிலான தந்தை மகன் உறவை அவர்கள் கையாளும் விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். தந்தை மகன் இரண்டு பேருமே மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.  எனவே மனித வர்க்கம் முழுமையும் அவர்களை பின்பற்றும் படிக்கு ஒரு உதாரணமாக இருந்தார்கள்.  வேத ஞானம் நிறைந்த பிரம்மதேவர் தன் மகன் மனுவிடம்  உனக்கு இரண்டு மகன்களும் 3 மகள்களும் வருவார்கள் என்று அறிவுறுத்தினார்.  அவரின் அறிவுறுத்தலால்  மனு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் அவர்களிடமிருந்து அனைத்து பிரஜைகளும் உருவாகுவார்கள் என்றும் கூறினார். மனு ஒரு மிகச் சிறந்த ஆட்சியாளர் ஆவார்.  அவரது வரலாறு பகவான் வராகர் காலத்திலிருந்தே துவங்குகிறது . ஸ்வாயம்புவ மனு ஒரு ராஜரிஷி ஆவார்.  ஏனென்றால் அவரது ராஜ்ஜியம் மற்றும் இல்லங்களில் கிருஷ்ண உணர்வு நிரம்பியிருந்தது.  அவருடைய நல்ல குணநலன்களாலும் அவரின் செல்வ செழிப்பாலும் எல்லோராலும் மிகவும் கொண்டாடப்பட்டார்.  அவர் தன்னை முழுவதுமாக பகவான் விஷ்ணுவின் நாமங்களை ஜெபிப்பதிலும் அவரது ரூபத்தை தியானம் செய்வதிலும் ஈடுபடுத்தினார்.  அவர் தனது நேரத்தை அனாவசிய காரியங்களுக்காக விரயம் செய்யாமல் மிகச் சிறந்ததொரு யோகியாக இருந்தார்.  அவர் பேசுவதெல்லாம் முழுமுதற்கடவுள் பகவான் கிருஷ்ணரைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.  அவர் கேட்பதெல்லாம் கிருஷ்ணரைப் பற்றிய திவ்ய செய்திகளாகவே இருந்தது.  அவர் தியானம் செய்ததெல்லாம் கிருஷ்ணரையும் அவருடைய திவ்ய செயல்களையுமே.



அவருடைய வாழ்வு மிக நீண்டது என்று கூறப்படுகிறது. ஒரு யுகம் என்பது 43 லட்சத்து 20 ஆயிரம் வருட காலங்களாகும்.  இதுபோன்று 71 யுகங்கள் சேர்ந்தது ஒரு மனுவின் காலம்.  அவருடைய மொத்த வருடங்களும் அவர் தன்னை முழுவதுமாக பகவான் கிருஷ்ணரைப் பற்றியே பேசவும் கேட்கவும் தியானிக்கவும் செய்தார்.  ஸ்வாயம்புவ மனு தொடர்ச்சியாக கிருஷ்ண உணர்வுடனேயே இருந்ததால் அவரது வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்ததைப் போலவே மிகவும் பசுமையாகவே இருந்தது. 



இந்த பெளதிக உலகில் பௌதிக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று வந்துள்ள கட்டுண்ட ஜீவன்களின் விடுதலைக்காக மனு வேதங்களை அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகளை உருவாக்குகிறார்.  கிருஷ்ணர் மிகவும் கருணை உள்ளவர் என்பதால் யாரெல்லாம் இந்த உலகில் பௌதிக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று வந்துள்ளனரோ அவர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து அதே சமயம் அவர்களின் விடுதலைக்கான பாதையையும் காட்டுகிறார்.  ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கான சட்டபுத்தகம் "மனு சம்ஹிதை" என்று அழைக்கப் படுகிறது.  இதன் அனைத்து நடவடிக்கைகளும் நம்மை பகவான் கிருஷ்ணரின் திவ்யமான சேவையை நோக்கியே வழிநடத்துகிறது.



மனு தனது "பிரம்ம வர்த்தா" என்னும் சிம்மாசனத்தில் இருந்து பூமியையும் அதனைச் சுற்றியுள்ள ஏழு பெரும் கடல்களையும் ஆட்சி செய்தார். இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள 'மணாலி' என்று அழைக்கப்படும் இடத்தில் மனுவின் வசிப்பிடங்களும் அவரின் ஆசிரமங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.  இங்குள்ள பழைய மணாலி கிராமத்தில் மனுவின் சிறந்த ஆளுமைக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஒன்று உள்ளது.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...