Skip to main content

ஜெயா ஏகாதசி / பைமி ஏகாதசி


 ஜெயா ஏகாதசி


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



மாசி மாத வளர்ப்பிறையில் (ஜனவரி/ பிப்ரவரி) தோன்றக்கூடிய ஜெயா ஏகாதசி அல்லது பைமி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கு இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. 



ஒரு முறை யுதிஸ்டிரர், பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ! பகவான் கிருஷ்ணரே, ஓ! முழுமுதற் கடவுளே, ஓ! ஜகத்தின் நாதரே, கிருஷ்ணரே, வியர்வையில் தோன்றுவன, விதைகளில் தோன்றுவன, முட்டைகளில் தோன்றுவன, கருவில் தோன்றுவன போன்ற நான்கு விதமான ஜீவராசிகளின் மூல காரணம் நீரே. அனைத்தையும் சிருஷ்டித்து, காத்து பிறகு அழிப்பவரும் நீரே. மாசி மாத வளர்பிறையில் (ஜனவரி / பிப்ரவரி) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றியும், அதனை அனுஷ்டிக்கும் வழிமுறையைப் பற்றியும் மற்றும் இந்த மங்களகரமான நாளில் வழிபடத்தக்க தெய்வத்தை பற்றியும் தயவு செய்து எனக்கு விவரமாக கூறுங்கள்.


பகவான் கிருஷ்ணர், கூறினார் ஓ! மன்னர்களில் சிறந்தோனே, யுதிஸ்ஸ்டிரா, மாசி மாத வளர்பிறையில் தோனறக்கூடிய ஏகாதசி ஜெயா ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்படும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பவர். எக்காரணத்திற்கும் பிசாசு உடலை ஏற்க வேண்டியதில்லை. முக்தி அளிப்பதலும், ஒருவரின் பாவ விளைவுகளை அழிப்பதிலும் இந்த ஏகாதசிக்கு நிகர் வேறு ஏதும் இல்லை. ஓ, சிங்கம் போன்ற மன்னா, நான் ஏற்கனவே பத்ம புராணத்தில் விளக்கியுள்ளபடி இந்த ஏகாதசியைப் பற்றி இப்பொழுது கேள்.


தேவர்கள் சுவர்க்க லோகத்தில் இந்திரனின் ஆட்சியின் கீழ் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பாரிஜாத மலர்களின் நறுமணம் நிறைந்த நந்தன் கனனா என்ற காட்டில் இந்திரன், அஸ்ப்சரஸ்களுடன் பலவிதமான பரிமாற்றங்களை அனுபவித்து வந்தார். ஒரு முறை இந்திரன், ஐந்து கோடி அப்சரஸ்கள் கொண்ட ஒரு நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அந்த சபையில் புஷ்பதந்தா என்ற ஒரு கந்தர்வ பாடகர் இருந்தார். சித்ரசேனா என்ற மற்றொரு கந்தர்வர், தன் மனைவி மாலினி மற்றும் தன் மகளுடன் அங்கு வந்தார். சித்ரசேனாவிற்கு புஷ்பவனா என்ற ஒரு மகன் இருந்தான். புஷ்பவனாவின் மகன் பெயர் மல்யவன். புஷ்பவதி என்ற ஒரு கந்தவர்ப்பெண் மல்யவனின் அழகால் கவுரப்பட்டாள். புஷ்பவதி மிக அழகானவள் மன்மதனின் கூரிய அம்புகளால் தாக்கப்பட்ட புஷ்பவதி, மல்யவனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, சைகைகள் கடைக்கண் பார்வை என பல வழிகளில் முயற்சித்தாள். ஓ மன்னா, அவளுடைய அழகை நான் எவ்வாறு வர்ணிப்பேன். முழு நிலவை போன்ற முகம் கயல் போன்ற விழிகள். தோடுகளால் அலங்கரிக்கப்பட்ட காதுகள், அவளுடைய கழுத்தோ சங்கின் அழகை வெற்றி கொண்டன. அவளுடைய ஒளிரும் பாதங்கள் செந்தாமரையின் அழகை வெற்றி கொண்டன. ஆடம்பரமான மற்றும் அழகான ஆபரணங்களும் ஆடைகளும் அவளுடைய அழகான மேனிக்கு மீண்டும் அழகு சேர்த்தன. இந்த அழகான புஷ்பவதியை கண்டவுடன் மல்யவன் முழுமையாக வசீகரிக்கப்பட்டான்.


இந்திரனை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் மல்யவன் மற்றும் புஷ்பவதி ஆகிய இருவரும் மற்ற அப்சரஸ்களுடன் சேர்ந்து ஆடுவதிலும் பாடுவதிலும் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் கவர்ந்ததால் அவர்களால் நடன நிகழ்ச்சியால் சரிவர செயல்பட இயலவில்லை. அதன் பலனாக நடன சபையில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. இருவரும் ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் இடைவிடாமல் பார்த்துக்கொண்டு, மன்மத அம்புகளால் தாக்கப்பட்டனர். ஆடலிலும் பாடலிலும், ஏற்பட்ட ஓயாது இடையூறுகளை கவனித்த இந்திரன், அவ்விருவரின் மன நிலையை புரிந்து கொண்டார். நடன நிகழ்ச்சியில் ஏற்பட்ட தொடர்ந்து இடையூறுகளால் இந்திரன் அவமதிப்பை உணர்ந்தார். பிறகு அவர்களை சபித்தார். நீங்கள் இருவரும் மூடர்கள் மற்றும் பாவமிக்கவர்கள். என்னுடைய ஆணையை மீறியதால் நான் உங்களைப் சபிக்கிறேன். நீங்கள் இருவரும் ஆண் மற்றும் பெண் பிசாசு உடலைப் பெற்று பூலோகத்தில் உங்களுடைய கர்ம வினைகளை அனுபவியுங்கள்.


இவ்வாறு இந்திரனால் சபிக்கப்பட்ட மல்யவன் மற்றும் புஷ்பவதி பிசாசு உடல்களைப் பெற்று, இமயமலையின் ஒரு குகையில் தங்கள் துன்பமயமான வாழ்க்கையை துவங்கினர். பிசாசு உடலைப் பெற்றதால், இருவரும் மிகுந்த துயரத்திற்கும் புலம்பலுக்கும் ஆளானார்கள். சாபம் பெற்றதன் விளைவால், அவர்களால் தொடு உணர்வு, வாசனை மற்றும் தூக்கம் போன்ற உணர்வுகளால் இன்புற இயலவில்லை. அடர்ந்த காடுகளிலும் குளிர்ந்த இமயலைத் தொடரிலும் திரிந்து வந்த அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து தங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினர். ஆண் பிசாசு, பெண் பிசாசிடம் கூறியது, நாம் எப்படிப்பட்ட பாவச்செயலை செய்து விட்டோம். அதனால் இந்த துயரம் மிகுந்த பிசாசு உடலை பெற்றோம்! இவ்வாறு மிகுந்த கவலையுடன் தங்கள் செயல்களை எண்ணி மிகவும் வருந்தினர். தங்களுடைய தவறான நடத்தையை எண்ணி மிக துயருற்று அன்று முழுவதும் எந்த ஒரு உணவையும் ஏற்கவில்லை. தற்செயலாக அந்த நாள் மங்களகரமான ஜெயா ஏகாதசி நாளாயிற்று. பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டிருப்பினும் அன்று அவர்கள் எந்த ஒரு ஜீவனையும் கொல்ல வில்லை. அவர்கள் கிழங்குகளையோ, பழங்களையோ (அ) நீரையோ கூட ஏற்க வில்லை.


ஓ! மன்னா, இவ்வாறு துயரத்தில் ஆழ்ந்து அவர்கள் ஒரு அரசமரத்தடியில் அமர்ந்திருக்கையில் சூரியனும் மறைந்தது. குளிராலும், கவலையில் ஆழ்ந்திருந்ததாலும் அன்று இரவு முழுவதும் அவர்கள் தூங்க வில்லை. மன உளைச்சலால் அவர்களுக்கு புலனின் பத்திலும் விருப்பம் இருக்கவில்லை. ஓ, சிங்கம் போன்ற மன்னா, இவ்வாறு அவர்கள் தன்னையறியாமலே ஜெயா ஏகாதசியை அனுஷ்டித்தனர். இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பலனாக அடுத்த நாளே, அவர்கள் பிசாசு உடலில் இருந்து விடுபட்டு, தங்களுடைய முந்தைய நிலையை அடைந்து விமானம் மூலம் சுவர்க்க லோகத்திற்குச் சென்றனர். சுவர்க்க லோகத்தை அடைந்தவுடன் மகிழ்ச்சியுடன், தேவர்களின் மன்னனான இந்திரனை அணுகி தங்கள் வணக்கங்களை சமர்ப்பித்தனர். அவர்களைக் கண்டவுடன் இந்திரன் ஆச்சர்யத்துடன் கேட்டார். என்ன அதிசயம்? எந்த புண்ணிய பலனால் உங்களுடைய பிசாசு நிலை அழிக்கப்பட்டது. எந்த தேவதை உங்களை என்னுடைய சாபத்திலிருந்து விடுவித்தார்? இதற்கு மல்யவன் பதிலளித்தார். முழு முதற் கடவுளின் காரணமற்ற கருணையாலும் ஜெயா ஏகாதசியை அனுஷ்டித்ததன் பலனாலும், நாங்கள் உம்முடைய சாபத்தில் இருந்து விடுபட்டோம். ஓ, எஜமானே, பக்தி தொண்டின் காரணத்தால் சுலபமாக நாங்கள் பேய் வாழ்க்கையில் இருந்து விடுபட்டோம்.


இதைக் கேட்ட இந்திரன் மல்யவனிடம் கூறினார். பகவான் விஷ்ணுவின் பக்தித்தொண்டாலும், ஏகாதசி விரதத்தாலும் நீங்கள் புனித மடைந்து உள்ளீர்கள். ஆகையால் நீங்கள் என்னாலும் வணங்கத் தக்கவர்கள். பகவான் விஷ்ணுவின் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர் யாராயினும் என்னால் வணங்கப்படுகிறார். மற்றும் மதிக்கப்படுகிறார். அதன் பிறகு புஷ்பவதியும் மல்யவனும் சுவர்க்க லோகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஓ! யுதிஷ்டிர மன்னா! ஒருவர் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஜெயா ஏகாதசியின் அனுஷ்டானம். அந்தணரை கொல்லும் பாவத்தையும் நீக்கிவிடும். தானமளிப்பது, யாகம் செய்வது மற்றும் புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்றவற்றால் அடையும் புண்ணிய பலனை இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதன் மூலம் கூடுதல் பலனாக ஒருவர் அடைவார். இந்த ஏகாதசியை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அனுஷ்டிப்பவர் என்றென்றும் வைகுண்டத்தில் வாழ்வார். இந்த ஏகாதசியின் பெருமைகளைப் படிப்பதாலும், கேட்பதாலும் ஒருவர் அக்னிஸ்தோம யாகத்தின் பலனை அடைவார்


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...