Skip to main content

சாந்திபுரம் பண்டிகை


 சாந்திபுரம் பண்டிகை 


வழங்கியவர் - திரு. ஜீவன கௌர ஹரி தாஸ்


🍁🍁🍁🍁🍁🍁🍁


சாந்திபுரம், அத்வைத ஆச்சாரியரின் விசேஷ வசிப்பிடம்


🍁🍁🍁🍁🍁🍁🍁


இன்றைய இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள மாயாபுரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதே சாந்திபுரம் என்னும் திருத்தலம். சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் தோன்றுவதற்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்த அத்வைத ஆச்சாரியர் இவ்விடத்தில் வசித்ததால், இத்திருத்தலம் கௌடீய வைஷ்ணவர்களுக்கு மிகவும் புனிதம் வாய்ந்ததாகும். அத்வைத ஆச்சாரியர் மஹாவிஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதால், இத்திருத்தலம் வைகுண்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது.


அத்வைதரின் தோற்றம்


🍁🍁🍁🍁🍁🍁🍁


அத்வைத ஆச்சாரியர் 1434ஆம் ஆண்டில், தற்போதைய வங்கதேசத்தின் சில்லட் நகரத்திற்கு அருகிலுள்ள நவகிராமத்தில், ஸ்ரீ குபேர பண்டிதருக்கும் ஸ்ரீமதி நாபதேவிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இந்திய எல்லையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள அத்வைத ஆச்சாரியரின் பிறப்பிடத்தில் சிறு கோயில் எழுப்பப்பட்டுள்ளது, அது தற்போது இஸ்கான் இயக்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது,


குறுகிய காலத்தில் அத்வைத ஆச்சாரியர் கங்கைக் கரையோரத்தில் இருக்கும் சாந்திபுரத்திற்குக் குடிபெயர்ந்தார். நவத்வீபத்தில் இருக்கும் ஸ்ரீவாஸ தாகூரின் இல்லத்திற்கு அருகில் மற்றோர் இல்லத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டபோதிலும், அத்வைத ஆச்சாரியர் பெரும்பாலும் சாந்திபுரத்திலேயே வசித்தார். அவர் இவ்வுலகில் 125 ஆண்டுகளுக்கு தனது திவ்ய லீலைகளை அரங்கேற்றினார்.


சைதன்ய மஹாபிரபு தோன்றுவதற்கு 52 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய அத்வைத ஆச்சாரியர் தனது எஜமானரான சைதன்ய மஹாபிரபுவின் மறைவிற்குப் பிறகும் 25 ஆண்டுகள் திவ்ய லீலைகளில் ஈடுபட்டிருந்தார்.


அத்வைத ஆச்சாரியரின் வம்சம்


🍁🍁🍁🍁🍁🍁🍁


அத்வைத ஆச்சாரியருக்கு இரண்டு துணைவிகள்: சீதா தாகூராணி மற்றும் ஸ்ரீதேவி. சீதா தாகூராணிக்கு அச்சுதானந்தர், கிருஷ்ண தாஸர், கோபாலர், பலராமர், ஸ்வரூபர், ஜகதீஷ மிஸ்ரர் என ஆறு மகன்கள் பிறந்தனர்; ஸ்ரீதேவிக்கு சியாம தாஸர் என்ற ஒரு மகன் பிறந்தார். இவர்களில் அச்சுதானந்தர், கிருஷ்ண தாஸர், கோபாலர் ஆகிய மூவரும் சைதன்ய மஹாபிரபுவின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர்கள்.


மாதவேந்திர புரியிடம் தீக்ஷை பெறுதல்


🍁🍁🍁🍁🍁🍁🍁


கௌடீய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மாதவேந்திர புரியே கிருஷ்ண பிரேமையின் பொக்கிஷக் கிடங்காக கருதப்படுகிறார். கிருஷ்ண பக்தி என்னும் மரத்திற்கு அவரே மூல விதையாகத் திகழ்பவர். மாதவேந்திர புரி விருந்தாவனத்தில் இருக்கும் கோவர்தன மலையின் அடிவாரத்தில் வசித்தபோது, அவரால் அங்கு வழிபடப்பட்ட கோபால விக்ரஹம் அவரது கனவில் தோன்றி தனது திருமேனியில் சந்தனத்தை பூசுமாறு உத்தரவிட்டார். அதனை நிறைவேற்றும் பொருட்டு அவர் ஜகந்நாத புரியை நோக்கி பயணமானார்.


அப்பயணத்தின்போது, மாதவேந்திர புரி சில நாள்கள் சாந்திபுரத்தில் தங்க நேர்ந்தது. அத்வைத ஆச்சாரியரும் மாதவேந்திர புரியும் கிருஷ்ணரின் திவ்ய லீலைகளை பற்றி விவாதித்தனர். மாதவேந்திர புரியிடம் காணப்பட்ட பக்தி பரவசத்தைக் கண்ட அத்வைத ஆச்சாரியர் அவரின் காலில் விழுந்து வணங்கி, அவரை தனது குருவாக ஏற்று, அவரிடமிருந்து தீக்ஷையும் பெற்றுக் கொண்டார். அத்வைத ஆச்சாரியர் பரம புருஷ பகவானின் விரிவங்கமாக இருந்தபோதிலும், உலக மக்களுக்கு ஆன்மீக குருவை ஏற்பதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, சீடர் என்னும் திவ்ய லீலையை அரங்கேற்றினார்.


கலி யுக அவலம்


🍁🍁🍁🍁🍁🍁🍁


அத்வைத ஆச்சாரியர் இவ்வுலகில் தோன்றியபோது, பண்டிதர்கள் செருக்குடனும் ஞானிகள் பெருமையுடனும் பொதுமக்கள் பௌதிக இலாபங்களுக்காகவும் கிருஷ்ணரைத் தவிர்த்து தேவர்களை வழிபட்டுக் கொண்டிருந்தனர். விஷ்ணு பக்தி இல்லாமல் பௌதிக மக்கள் துன்புறுவதைக் கண்ட அத்வைத ஆச்சாரியருக்கு இதயத்தில் வலி ஏற்பட்டது. கலி யுக மக்களின் அவல நிலையைக் கண்ட அத்வைத ஆச்சாரியர் அதனை உடனடியாக போக்குவதற்காக, பரம புருஷ பகவானை இவ்வுலகில் அவதரிக்கச் செய்வதற்கான மும்முரமான ஏற்பாட்டில் இறங்கினார்.


சிறந்த முன்னோடி


🍁🍁🍁🍁🍁🍁🍁


அத்வைத ஆச்சாரியர் அனைத்து மங்களகரமான குணங்களுக்கும் இருப்பிடமாவார். தாமரைப் போன்ற கண்களைக் கொண்டிருந்ததால், அத்வைத ஆச்சாரியருக்கு கமலகாந்தர் என மற்றொரு திருநாமமும் இருந்தது. அத்வைத ஆச்சாரியர் பக்தி, ஞானம், துறவு என அனைத்திலும் முதன்மையாகத் திகழ்ந்ததால், அவரை வேதபஞ்சனானர் என்றும் அழைத்தனர். அத்வைத ஆச்சாரியரின் அனைத்து செயல்களும் உலகின் நன்மைக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால் அவரை வைஷ்ணவர்கள் ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டனர். (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை, 6.30)


அத்வைத ஆச்சாரியர் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசிக்கும்போது, கிருஷ்ண பக்தியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதே சாஸ்திரத்தின் முடிவுரை என அடிக்கடி வலியுறுத்துவார். அத்வைத ஆச்சாரியர் கலி யுகத்தில் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களைக் கரை சேர்ப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் சைதன்ய மஹாபிரபுவை இவ்வுலகிற்கு வரவழைக்க வேண்டும் என ஆழமாக விருப்பம் கொண்டிருந்தார்.


அத்வைதரின் அழைப்பு


🍁🍁🍁🍁🍁🍁🍁


சாதாரண மக்களின் அழைப்பை ஏற்று பரம புருஷ பகவான் இவ்வுலகில் தோன்றுவதில்லை. அத்வைத ஆச்சாரியர் அழைத்ததன் பெயரிலேயே தான் இவ்வுலகில் தோன்றியதாக சைதன்ய மஹாபிரபு பலமுறை பக்தர்களிடம் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ண பக்தி என்னும் உயர்ந்த பிரேமையை கலி யுக மக்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கு சைதன்ய மஹாபிரபுவே பொருத்தமானவர் என உறுதி கொண்டிருந்த அத்வைத ஆச்சாரியர் கடும் விரதத்தை மேற்கொண்டார்.


அதன் காரணமாக அத்வைத ஆச்சாரியர் கங்கைக் கரையோரத்தில் இருக்கும் பாப்லா என்னுமிடத்தில் கல் வடிவில் இருக்கும் சாலக்ராம விக்ரஹத்தை துளசியாலும் கங்கை நீராலும் வழிபட்டார். கிருஷ்ணரின் தாமரை திருப்பாதத்தை தியானித்து, கிருஷ்ணரின் திருநாமத்தை அத்வைத ஆச்சாரியர் கண்ணீருடன் உரக்க கர்ஜித்தபோது, அது விண்ணுலகைப் பிளந்து சென்று வைகுண்டம் வரை கேட்டது.


அத்வைத ஆச்சாரியரின் தொடர் வற்புறுத்தலால், சைதன்ய மஹாபிரபு சச்சிதேவியின் கருவிற்குள் புகுந்து தனது தெய்வீகத் தோற்றத்தை இவ்வுலகில் வெளிப்படுத்தினார். சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகப் பிறப்பை அறிந்த அத்வைத ஆச்சாரியரும் ஹரிதாஸ தாகூரும் சாந்திபுரத்தில் மிகுந்த பரவசமும் உற்சாகமும் ஆனந்தமும் அடைந்தனர். இவ்வாறாக, சைதன்ய மஹாபிரபுவின் தோற்றத்திற்கு முதன்மையான காரணமாகத் திகழ்பவர் அத்வைத ஆச்சாரியர்.


திவ்ய லீலைகள்


🍁🍁🍁🍁🍁🍁🍁


கிருஷ்ணர் சைதன்ய மஹாபிரபுவாகவும், பலராமர் நித்யானந்த பிரபுவாகவும், மஹாவிஷ்ணு அத்வைத ஆச்சாரியராகவும், ஸ்ரீமதி ராதாராணி கதாதர பண்டிதராகவும், நாரதர் ஸ்ரீவாஸ தாகூராகவும் கலி யுகத்தில் தோன்றினர். மஹாவிஷ்ணுவும் சதாசிவமும் இணைந்த உருவமே அத்வைத ஆச்சாரியர்.


அத்வைத ஆச்சாரியரின் இல்லத்தில் பக்தர்கள் கிருஷ்ண கதையை கேட்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். கிருஷ்ணரை வழிபட வைப்பதிலும் புனித நாமத்தை உச்சரிக்க வைப்பதிலும் அவர் ஆன்மீக குருவாக (ஆச்சாரியராக) செயல்பட்டார். மேலும், அவர் மஹாவிஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதால், அத்வைதர் என்று அறியப்பட்டார்.


அத்வைத ஆச்சாரியர் தனது பெற்றோர்களின் மறைவிற்குப் பிறகு, கயாவிற்குச் சென்று பிண்ட சடங்குகளை நிறைவேற்றி, பாரத தேசத்தின் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விருந்தாவனத்திற்கு வருகை புரிந்த அவர், கிருஷ்ணரின் வழிபாட்டில் முழுமையாக மூழ்கி, பின்னர் மதனமோஹன விக்ரஹத்தைக் கண்டெடுத்து, மதுராவில் இருந்த சௌபே என்ற பிராமணரிடம் ஒப்படைத்தார். பின்னர், தெய்வீக ஏற்பாட்டின்படி அந்த விக்ரஹம் ஸநாதன கோஸ்வாமியின் வழிபாட்டை ஏற்றுக் கொண்டார். இந்த விக்ரஹமே கௌடீய வைஷ்ணவர்களால் இன்றும் விருந்தாவனத்தில் ஸம்பந்த விக்ரஹமாக வழிபடப்படுகிறார்.


சாந்திபுரம் பண்டிகை


🍁🍁🍁🍁🍁🍁🍁


மாதவேந்திர புரியின் மற்றொரு சீடரான ஈஸ்வர புரியை சைதன்ய மஹாபிரபு தனது குருவாக ஏற்றுக் கொண்டார். சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் பூண்ட பிறகு, இரண்டாவது முறையாக சாந்திபுரத்திற்கு கோவிந்த துவாதசி தினத்தன்று வருகை புரிந்தார். அச்சமயத்தில் அத்வைத ஆச்சாரியர் தனது குருவான மாதவேந்திர புரியின் மறைவு தினத்தைக் கொண்டாடும் வகையில் மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.


அந்த ஏற்பாட்டைக் கண்டு அகமகிழ்ந்த சைதன்ய மஹாபிரபு, இந்த திதியில் யாரொருவர் இவ்விடத்திற்கு வருகை தந்து பிரசாதத்தை உண்கிறார்களோ, அவர்களுக்கு தூய கிருஷ்ண பக்தி கிட்டும் என வரமளித்தார். சாந்திபுர கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோயிலில், இன்றும் இஸ்கான் இயக்கம் வருடந்தோறும் சாந்திபுரத்தின் இப்பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. மாதவேந்திர புரியின் மறைவு தினத்தை நினைவுகொள்ளும் வகையில் நிகழும் இப்பண்டிகை உலகப் புகழ் வாய்ந்ததாகும்.


மாதவேந்திர புரியின் மறைவு தின திதி பொதுவாக சைதன்ய மஹாபிரபுவின் அவதார தினமான கௌர பூர்ணிமாவிற்கு சற்று முன்பாக வருவதால், பல்வேறு நாடுகளிலிருந்து மாயாபுர் தாமத்திற்கு வருகை புரிந்துள்ள பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் இத்திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். உணவு தயாரிப்பதிலும் விநியோகம் செய்வதிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஈடுபடுகின்றனர்.


ஒவ்வொரு வருடமும் குறைந்தது 50,000 மக்கள் இத்திருவிழாவில் பங்கெடுத்து ஆன்மீகப் பலனை அடைகின்றனர். மாதவேந்திரபுரியின் மறைவு தின திதியில் இப்பிரசாதத்தை உட்கொள்வதற்கு தேவர்களும் மானிட உடலை எடுத்து இங்கு வருகின்றனர் என்பது ஐதீகம். கடல்போன்ற பக்தர்களின் கூட்டத்தில் கிருஷ்ண பிரசாதத்தை ஏற்பது பரவசமான நிகழ்ச்சியாகும். நூற்றுக்கணக்கான மாமரங்களை கொண்ட மாந்தோப்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் அன்றைய தினத்தில் வைகுண்டமாக கண்களுக்கு காட்சியளிக்கும் என்றால் அது மிகையாகாது.


சாந்திபுரத்தின் முக்கிய நிகழ்வுகளில் சில


🍁🍁🍁🍁🍁🍁🍁


1) சைதன்ய மஹாபிரபுவின் குருவான ஈஸ்வர புரி அத்வைத ஆச்சாரியரின் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார்.


2) சிரார்த்த சடங்கு முழுமை பெறுவதற்கு பொதுவாக பிராமணர்களை அழைப்பது வழக்கம். ஆயினும், பகவானின் நாமத்தை உச்சரிப்பவர் எல்லா பிராமணர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, அத்வைத ஆச்சாரியர் முதல் பிரசாதத்தை உட்கொள்வதற்கு நாமாசாரியரான ஸ்ரீல ஹரிதாஸ தாகூரை இங்கு அழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


3) சைதன்ய மஹாபிரபு கட்வாவில் சந்நியாசம் பூண்ட பிறகு முதன்முதலில் சாந்திபுரத்திற்குதான் வருகை புரிந்தார். அப்போது அத்வைத ஆச்சாரியரின் இல்லத்தில் சைதன்ய மஹாபிரபுவும் நித்யானந்த பிரபுவும் உணவருந்தியபோது அத்வைத ஆச்சாரியர் பரவச நிலையை எய்தினார்.


4) முருகன் என்று அழைக்கப்படுகின்ற கார்த்திகேயன் சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் பங்கெடுப்பதற்காக, அத்வைத ஆச்சாரியரின் மகனாக அச்சுதானந்தர் என்ற பெயரில் தோன்றினார் (கௌர கணோத்தேஷ தீபிகா 87.8).


சாந்திபுரத்தின் கருணை


🍁🍁🍁🍁🍁🍁🍁


கலி யுக மக்கள் சைதன்ய மஹாபிரபுவின் கருணையைப் பெறுவதற்கு சாந்திபுர் திருத்தலம் மிகச்சிறந்த முன்னோடியாக போற்றப்படுகிறது. அத்வைத ஆச்சாரியரின் திவ்யமான லீலைகளை பௌதிக புத்தியினால் அறிந்துகொள்ள முடியாது.


சைதன்ய மஹாபிரபுவை இவ்வுலகிற்கு வரவழைத்ததும் அனுப்பி வைத்ததும் அத்வைத ஆச்சாரியரே. சாந்திபுரத்தின் மகிமையும் அத்வைத ஆச்சாரியரின் திவ்ய லீலைகளும் மிகவும் விரிவான முறையில் சைதன்ய சரிதாம்ருதம், சைதன்ய பாகவதம் மற்றும் பக்தி ரத்னாகரத்தில் கூறப்பட்டுள்ளது. 


"இக்கட்டுரை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...