Skip to main content

சுகதேவர் கோஸ்வாமி


 சுகதேவர் கோஸ்வாமி 


வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁


சுகதேவர் கோஸ்வாமி மகரிஷி வியாசரின் மிகவும் பிரசித்தி பெற்ற மகன் மற்றும் சீடரும் ஆவார். அவர் பிறப்பிலிருந்தே முக்தி பெற்ற ஆத்மாவாக இருந்தார். தனது தாயின் கர்பத்தில் இருக்கும்பொழுதே முக்தியை பெற்றுவிட்டார்.  அவர் தனது ஜனனத்திற்கு பிறகு எந்த ஒரு ஆன்மீக பயிற்சிக்கும் செல்லவில்லை பிறப்பிலேயே அவர் ஒரு நல்ல வைஷ்ணவராக திகழ்ந்தார்.  இதனால் பிராமணர்களுக்கென்றுள்ள  உபநயனம் போன்ற சடங்குகள் எதுவும் நடைபெறாமல் இருந்தும் அனைத்து மங்களகரமான குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தார்.  அவர் சனாதன தர்மம் கொள்கைகளில் அதீதமான அறிவு பெற்றிருந்ததால் அவர் முற்றிலும் தூய்மையடைந்த  ஆத்மாவாக இருந்தார்.  அவர் முதன்முதலில் மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத் பாகவத உபன்நியாசங்களை தனது தந்தையான வியாச தேவரிடமிருந்து கேட்டார்.  அவர் கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சஷர்களின் சபையில் 14 லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மகாபாரதத்தை உபந்நியாசம் செய்தார்.  அவர் முதன்முதலாக மகாராஜா பரீக்ஷித்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபந்நியாசம் செய்தார்.  அவர் தனது தந்தை வியாசதேவரிடம் மதங்களின் கொள்கைகள் குறித்தும் ஆன்மீகத்தின் முக்கியத்துவம் குறித்தும் விரிவான விளக்கங்களை விசாரணை செய்து கேட்டறிந்தார்.  சுகதேவ கோஸ்வாமி ஆரனேயா, அருணிசுத, வையாசகி,  மற்றும் வியாசமாதஜா போன்ற பல்வேறு நாமங்களில் அழைக்கப்பெற்றார்.


ஒரு கற்றறிந்த பிராமணனானவன  பிராமணன், சண்டாளன் நாய் மற்றும் நாயைத் தின்பவன்,  பசு போன்ற அனைத்து உயிர்களையும் ஒரே  சம நோக்குடன் பார்க்கிறான்  என்று ஶ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. .  சுக தேவ கோஸ்வாமியும் அத்தகைய உயர் நிலையில் இருந்தார்.  அவர் ஒரு நபரை ஆண் என்றோ பெண் என்றோ பார்க்காமல் வெவ்வேறு ஆடைகள் அணிந்த  உயிர் வாழிகள் என்ற நோக்குடனே பார்த்தார்.  அவர் ஒரு கிரஹஸ்தரின்  வீட்டில் பால் கறந்து எடுக்கும் நேரம் மட்டுமே நிற்பார். மேலும் அதில் சிறிது அளவு மட்டுமே தனது ஆத்மாவை தக்க வைத்துக் கொள்வதற்காக உணவாக எடுத்துக்கொள்வார்.


 அடக்கமான மனநிலையில் திவ்ய சாஸ்திர நூலான ஸ்ரீமத் பாகவதத்தை ஒருவர் கவனத்துடன் கேட்க வேண்டும்.  அவ்வாறு கேட்கும் போது ஒருவர் தன்னை உணர்ந்து திவ்ய தலத்தை அடையலாம்.  ஆனால்  சரியான மூலத்திடம்  இருந்து அதனைக் கேட்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.  இந்த அறிவானது நாரத முனிவரால் ஆன்மீக உலகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு அவரது சீடரான வியாசருக்கு வழங்கப்பட்டது.  அந்த அறிவை பின்னாளில் வியாச தேவர் தனது மகனான சுகதேவ கோஸ்வாமிக்கு வழங்கினார்.  சுகதேவ கோஸ்வாமி அதனை மகாராஜா பரீக்ஷித்திற்கு அவர் மரணிபபதற்கு 7 நாட்களுக்கு முன்  உபதேசித்தார்.


சுகதேவ் கோஸ்வாமி வழங்கிய  திவ்ய அறிவை  பரீக்ஷித்  மகராஜ் மிகவும் கவனமாக மிகச் சரியான முறையில் ஒரு தீவிர மாணவரைப் போல் ஶ்ரீமத் பாகவதத்தை கேட்கவும் பாடவும் செய்தார். இதில் உரைப்பவர், கேட்பவர் என இரண்டு பேருமே பயனடைந்தனர். கங்கைக் கரையில்  குழுமியிருந்த கற்றறிந்த முனிவர்களுக்கு மத்தியில் 16 வயதே நிரம்பிய சுகதேவ கோஸ்வாமியே மிகவும் அனுபவம் மிக்கவராக இருந்தார்.அவர் பதினாறு வயதே நிரம்பியிருந்தாலும் ஞானத்தில் அங்கு குழுமி இருந்தவர்கள் மத்தியில்  அவரே முதன்மையானவராக திகழ்ந்தார்.  



ஸ்ரீமத் பாகவதத்தில் பரிந்துரைக்கப்பட்ட பகவானுக்கு செய்யும் ஒன்பது விதமான  வேறுபட்ட பக்தி சேவை நிலைகளில் முதல் இரண்டு முக்கிய நிலைகளான ஸ்ரவணம் (கேட்டல் , செவியுறுதல்),  கீர்த்தனம்  (உபதேசித்தல், பாடுதல்) ஆகியவற்றில்  சுகதேவ கோஸ்வாமி மற்றும் பரீட்சித்து மகாராஜா போன்ற மகாத்மாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்களாவர்.


 சமஸ்கிருத மொழியில் "சுக" என்னும் சொல்  கிளியைக்  குறிக்கிறது.  கிளியின் சிவந்த அலகில்,  எப்பொழுதும் நன்றாக கனிந்த பழத்தின் இனிமையான மயக்குகின்ற தரமான சுவையால்  நிரம்பியிருக்கும். அதுபோல வேதம் என்னும் மரத்தின் கனிந்த மற்றும் முதிர்ந்த பழமாகிய ஸ்ரீமத் பாகவதம் கிளியுடன் ஒப்பிடப்படும் சுகதேவகோஸ்வாமியின் உதடுகளால் பேசப்பட்டு அவரால் முழுமையாக சுவைக்கப்படுகிறது. அவர்  ஶ்ரீமத்பாகவதத்தை உபதேசிக்கும் பொழுது ஒரு வித்தைக்காரன், அல்லது விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் மயக்கும் இனிமையான வார்த்தைகளால் பேசுவது போன்ற இனிமையான வார்த்தைகள் பேச ஒருபோதும் முயற்சிக்கவில்லை.


வெளிப்பார்வைக்கு அவர் ஒரு சாதாரண மனிதர் போல் காணப்பட்டாலும் உண்மையில் அவர் மிகவும் உயர்ந்த உன்னத மகாத்மா ஆவார். அவர் தனது தந்தையின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பித்துப் பிடித்தவன் போல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். இதனால் ஒரு சாதாரண நிலையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு சுகதேவ் கோஸ்வாமியின் உயர்ந்த நிலையை இனம் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயலாகும்.  இதனால் ஒரு சாதுவை பார்ப்பதன் மூலம்  அவரை அங்கீகரிக்காமல், அவரிடமிருந்து கேட்பதன் மூலம் அஙகீகரிக்க  வேண்டும். எனவே ஒரு சாதுவை அல்லது ஒரு மகானை பார்ப்பதற்காக அணுகாமல் அவரிடமிருந்து கேட்பதற்காக ஒருவர் அணுக வேண்டும்.


 இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சங்கிலி மாகாணத்தில் "சுகாச்சாரி" என்றழைக்கப்படும் இடத்தில்  சுகதேவ கோஸ்வாமி தனது இறுதி நாட்களை அங்கு கழித்ததாகக் கருதப்படுகிறது.  அவர் அங்கு ஒரு குகையில் இருந்து தனது கடைசி மூச்சு வரை  பகவானை  நினைத்து தியானம்  செய்ததாக அறியப்படுகிறது. சுகதேவ் கோஸ்வாமி இங்கு  இருந்தார் என்பதை நினைவூட்டும் வகையில் இன்றும் அந்த இடத்தை சுற்றி ஏராளமான கிளிகள் உள்ளன.



ஹரே கிருஷ்ண 🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram செயலி


🍁🍁🍁🍁🍁🍁


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

👇


https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/joinchat/HIm4JGufgEgG7jw


🍁🍁🍁🍁🍁🍁


வலைதளம் /  website


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


https://suddhabhaktitamil.blogspot.com/?m=1

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...