Skip to main content

அம்பரீஷ சரித்திரம்




 

அம்பரீஷ சரித்திரம்

**********************


மனுவின் மகன் நபகன், அவரது மகனான நாபாகன்  , நாபாகனிலிருந்து, மிகவும் சக்திவாய்ந்தவரும், புகழ்பெற்ற பக்தருமான அம்பரீஷர் பிறந்தார். அம்பரீஷ மகாராஜன் முழு உலகிற்கும் பேரரசராக இருந்தார். ஆனாலும் தன் செல்வங்களெல்லாம் தற்காலிகமானவை என்று கருதினார். இத்தகைய பௌதிக ஐசுவரியமே பந்தப்பட்ட வாழ்வில் விழுவதற்கு உண்மையான காரணம் என்பதை அறிந்திருந்த அவர், அதில் பற்றற்றவராக இருந்தார். அவர் தமது புலன்களையும், மனதையும் பகவத் சேவையில் ஈடுபடுத்தினார். இந்த முறை யுக்த-வைராக்யம், அல்லது சாத்தியமான துறவு என்று அழைக்கப்படுகிறது. பரமபுருஷரின் வழிபாட்டிற்கு இது மிகவும் பொருத்தமான முறையாகும். சக்கரவர்த்தியான அம்பரீஷ மகாராஜன் அளவுக்கு மிஞ்சிய செல்வந்தராக இருந்ததால், பக்தித் தொண்டையும் பெரும் ஐசுவரியத்துடன் அவர் நிறைவேற்றினார். எனவே அவ்வளவு செல்வம் இருந்தும் மனைவியிடமோ, குழந்தைகளிடமோ, அல்லது இராஜ்யத்திலோ அவர் பற்றுக் கொண்டவராக இருக்கவில்லை. தம் புலன்களையும், மனதையும் அவர் இடைவிடாமல் பகவானின் தொண்டில் ஈடுபடுத்தினார். எனவே பௌதிக செல்வங்களை அனுபவிப்பதைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. முக்தியைக் கூட அவர் விரும்பவில்லை.

 

ஒருசமயம் அம்பரீஷ மகாராஜன் பிருந்தாவனத்தில் துவாதசி விரதத்தை ஏற்று பரமபுருஷரை வழிபட்டு வந்தார். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசியன்று, ஏகாதசி விரதத்தை முடித்துக் கொள்ளப்போகும் வேளையில் மகாயோகியான துர்வாசர் அதிதியாக அங்கு தோன்றினார். அம்பரீஷ மகாராஜனும் அவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார். அரசரின் அழைப்பை ஏற்று, அங்கு உணவருந்துவதாக ஒப்புக்கொண்ட துர்வாச முனி, நடுப்பகலில் குளிப்பதற்காக யமுனை நதிக்குச் சென்றார். நீண்ட நேரம் சமாதியில் ஆழ்ந்துவிட்ட அவர் விரைவில் திரும்பவில்லை. ஆனால் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டதைக் கண்ட அம்பரீஷ மகாராஜன், விரதத்தை முடித்துக் கொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றுவதற்காக, கற்றறிந்த பிராமணர்களின் யோசனைப்படி சிறிது நீரைப் பருகினார்.



தன் யோக சக்தியினால் நடந்ததை அறிந்த துர்வாச முனிவர் கடுங்கோபமடைந்தார். அவர் திரும்பி வந்ததும் அம்பரீஷ மகாராஜனைத் தண்டிக்க முற்பட்டார். அதில் அவர் திருப்தியடையாததால், இறுதியாக அவரது தலை மயிரிலிருந்து மராணாக்னி போல் தோன்றிய ஓர் அரக்கனை உண்டாக்கினார். ஆனால் எப்பொழுதும் தமது பக்தர்களைக் காப்பவரான பரமபுருஷர் தமது சுதர்சன சக்கரத்தை அனுப்பினார். அது உடனடியாக அந்த நெருப்பரக்கனைக் கொன்றது. பிறகு அம்பரீஷ மகாராஜனிடம் பெரும் விரோதம் கொண்டிருந்த துர்வாசரை விரட்டத் துவங்கியது. துர்வாசர் பிரம்மலோகத்திற்கும், சிவலோகத்திற்கும் மற்றெல்லா உயர் கிரகங்களுக்கும் தப்பி ஓடினார். ஆனால் சுதர்சன சக்கரத்தின் கடுங்கோபத்திலிருந்து அவரால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இறுதியாக அவர் ஆன்மீக உலகிற்கும் சென்று பகவான் நாராயணரிடம் சரணடைந்தார். ஆனால் ஒரு வைஷ்ணவருக்கு குற்றமிழைத்தவரை பகவான் நாராயணரால் மன்னிக்க இயலவில்லை. இத்தகைய ஒரு குற்றத்திலிருந்து மன்னிக்கப்படுவதற்கு ஒருவர், தான் குற்றமிழைத்த வைஷ்ணவரிடமே சரணடைந்து அவரிடம் மன்னிப்பைக் கோர வேண்டும். மன்னிக்கப்படுவதற்கு வேறு வழியில்லை. இவ்வாறாக அம்பரீஷ மகாராஜனிடமே திரும்பிச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்கும்படி பகவான் நாராயணர் துர்வாசருக்கு அறிவுரை கூறினார்.








பரமபுருஷரான விஷ்ணுவின் கட்டளைப்படி துர்வாச முனிவர் உடனே அம்பரீஷ மகாராஜனிடம் சென்று அவரது பாதம் பணிந்தார். அம்பரிஷர் இயல்பாகவே அடக்கமும், எளிமையும் உடையவர் என்பதால், துர்வாசர் தன் பாதங்களில் விழுந்ததால் அவர் வெட்கமும், கூச்சமும் அடைந்தார். இவ்வாறாக அவர் துர்வாசரைக் காப்பாற்றும்படி சுதர்சன சக்கரத்திடம் பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினார். இந்த சுதர்சன சக்கரம் என்பது என்ன? சுதர்சன சக்கரம் பகவானின் பார்வையாக இருக்கிறது. இப்பார்வைதான் ஜட உலகம் முழுவதையுமே படைக்கிறது. ஸ ஐக்ஷத, ஸ அஸ்ருஜத. இது வேத வாக்காகும். படைப்பின் மூலமான சுதர்சன சக்கரம் பகவானுக்கு மிகப்பிரியமானதாகும். இச்சக்கரத்தில் ஆயிரக்கணக்கான அரங்கள் உள்ளன. இச்சக்கரம் மற்றெல்லா ஆயுதங்களையும் வெல்லக்கூடியதும், இருளை அழிக்கக்கூடியதும், பக்தித் தொண்டை தோற்றுவிக்கக் கூடியதுமாகும்; அதுவே சமயக் கோட்பாடுகளை நிலைநாட்டுவதற்குரிய சாதனமாகவும், அதர்மங்களை அழிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதன் தயவில்லாமல் பிரபஞ்சத்தைப் பராமரிக்க முடியாது. எனவேதான் சுதர்சன சக்கரத்தை பகவான் உபயோகிக்கிறார். அம்பரீஷர் சுதர்சன சக்கரத்திடம், கருணை காட்டும்படி வேண்டியதும், அது சாந்தமடைந்து, துர்வாசரைக் கொல்வதிலிருந்து பின்வாங்கியது. இவ்வாறாக சக்கரத்தின் கருணையைப் பெற்ற துர்வாசர், ஒரு வைஷ்ணவர் சாதாரண ஒரு மனிதராவார் என்ற வெறுப்பூட்டும் எண்ணத்தை விட்டொழிக்க கற்றுக் கொண்டார் (வைஷ்ணவ ஜாதி-புத்தி). க்ஷத்திரிய பிரிவைச் சேர்ந்த அம்பரீஷ மகாராஜன் பிராமணர்களை விட தாழ்ந்தவர் என்று கருதிய துர்வாசர், தன் பிராமண சக்தியை அம்பரீஷர் மீது பிரயோகிக்க முயன்றார். இச் சம்பவத்தின் மூலமாக, வைஷ்ணவர்களை அலட்சியப்படுத்தும் தீய கருத்துக்களை எப்படி விட்டொழிப்பது என்பதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இச்சம்பவத்திற்குப் பின், அம்பரீஷ மகாராஜன் துர்வாச முனிவருக்கு விருந்தளித்தார். பிறகு ஓராண்டு காலமாக எதையும் சாப்பிடாமல் ஒரே இடத்தில் நின்றிருந்த அம்பரீஷ மகாராஜனும் பிரசாதத்தைச் சாப்பிட்டார். பிற்காலத்தில் அரசர் தமது ஆஸ்தியை தன் மகன்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு, பகவத் தியானத்தை மேற்கொள்ள மானஸ-ஸரோ வரத்தின் கரைக்குச் சென்றார்.

 

அம்பரீஷரின் பக்தி தொண்டு


ஸ வை மன: கிருஷ்ண-பதாரவிந்தயோர்
வாசாம்ஸி வைகுண்ட குணானுவர்ணனே
கரௌ ஹரேர் மந்திர-மார்ஜனாதிஷு
ஸ்ருதிம் சகாராச்யுத-ஸத்-கதோதயே
முகுந்த-லிங்காலய-தர்சனே த்ருசௌ
தத்-ப்ருத்ய-காத்ர-ஸ்பர்சே’ங்க ஸங்கமம்
க்ராணம் ச தத்-பாத-ஸரோஜ-சௌரபே
ஸ்ரீமத்-துளஸ்யா ரஸனாம் தத்-அர்பிதே
பாதௌ ஹரே: க்ஷேத்ர-பதானுஸர்பனே
சிரோ ஹ்ரிஷீகேச-பதாபிவந்தனே
காமம் ச தாஸ்யே ந து காம காம்யயா
யதோத்தமஸ்லோக-ஜனாஸ்ரயா ரதி:

 

அம்பரீஷ மகாராஜன் எப்பொழுதும் தன் மனதைக் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை தியானிப்பதிலும், வார்த்தைகளை பகவானின் பெருமைகளை விவரிப்பதிலும், கரங்களை பகவானின் ஆலயத்தைச் சுத்தம் செய்வதிலும், மற்றும் செவிகளை கிருஷ்ணரைப் பற்றி அல்லது கிருஷ்ணரால் பேசப்பட்ட வார்த்தைகளைக் கேட்பதிலும் ஈடுபடுத்தினார். அவர் தன் கண்களை, கிருஷ்ணரின் விக்கிரகத்தையும், ஆலயங்களையும் மற்றும் பிருந்தாவனம், மதுரா போன்ற இடங்களையும் காண்பதில் ஈடுபடுத்தினார். அவர் தன் ஸ்பரிச உணர்வை பகவத் பக்தர்களின் உடல்களைத் தொடுவதிலும், முகரும் புலனை பகவானுக்கு நிவேதம் செய்யப்பட்ட துளசியின் நறுமணத்தை முகர்வதிலும், மற்றும் நாக்கை பகவானின் பிரசாதத்தைச் சுவைப்பதிலும் ஈடுபடுத்தினார். தன் கால்களைப் புண்ணிய ஸ்தலங்களுக்கும், பகவானின் ஆலயங்களுக்குச் செல்வதிலும், தலையை பகவான் முன் வணங்குவதிலும் மற்றும் தன் விருப்பங்களை எல்லாம் பகவானுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் தொண்டு செய்வதிலும் ஈடுபடுத்தினார். உண்மையில், அம்பரீஷ மகாராஜன் தன் புலன் நுகர்வுக்காக எதையுமே விரும்பியதில்லை. அவர் தனது புலன்களை எல்லாம் பகவானுக்குச் சம்பந்தப்பட்ட பல்வேறு பக்தித் தொண்டுகளில் ஈடுபடுத்தினார். பகவானிடமுள்ள பற்றை அதிகரிப்பதற்கும், பௌதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பதற்கும் இதுதான் வழி. ( ஶ்ரீமத் பாகவதம் 9.4.18 ) 

 

ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் காண்டம் 9 / அத்தியாயம் 4 - அத்தியாயம் 5) 


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...