Skip to main content

வெடித்து போன தவளை


 

உபாக்யானே உபதேசம்


( ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி )


🍁🍁🍁🍁🍁🍁🍁


வெடித்து போன தவளை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒரு குளத்தில் தவளையொன்று தனது மகன் தவளையுடன் வசித்து வந்தது. ஒரு நாள் மகன் தவளை குளக்கரையில் ஒரு யானையைக் காண நேர்ந்தது. உடனே குளத்திர்குத் திரும்பிய அந்த தவளை தன் தாயிடம் உற்சாகமாக, "அம்மா நான் இன்று ஒரு பெரிய விலங்கைப் பார்த்தேன்" என்றது. 

அதற்கு அதன் தாய், அப்படியா!! அது எவ்வளவு பெரியதாக இருந்தது? 


அதற்கு குழந்தை தவளை, " ஓ அது உங்களை விட பெரியது!'' என்றது.


அப்போது அந்த தாய் தவளை தனது உடலை ஊதி பெருக்கிக் கொண்டு (உப்பியபடி) "இவ்வளவு பெரியதா?' என்றது. 


அதற்கு மகன் தவளை, "இல்லையம்மா இதை விட பெரியது" என்றது. 

மறுபடியும் தாய் தவள இன்னும் அதிகமாக அதன் உடல உப்பி வைத்தபடி, "இவ்வளவு பெரிதாக இருந்ததா? என்றது. 

உடனே மகன் தவளை, "ஓ இல்லையம்மா இதை விட பெரியது" என்றது. இப்பொழுது தாய் மேலும் தனது உடல உப்பிக்காட்டியது. இவ்வாறாக திரும்ப திரும்ப செய்யவும் மகன் தவளை, "இல்லை இல்லை இதை விட பெரியது என்றது. இதனால் மேலும் மேலும் தனது உடலை தனது சக்திக்கு அப்பாற்பட்டு உப்பிக் காட்டிய தாய் தவளையின் உடல் ஒரு கட்டத்தில் பலத்த சப்தத்துடன் வெடித்தது.


ஒரு சாதாரண உயிர்வாழி உலகிலேயே தான் தான் மிகவும் உயர்ந்தவன் என்றும் தனக்குத் தானே தான் "பர பிரஹ்மன்"  (பர - மிக உயர்ந்த, பிரஹ்ம - பூரணம்) என்று கூறிக் கொள்கின்றான். அவன் தனக்கு சமமானவரோ அல்லது தன்னை விட உயர்ந்தவரோ இல்லை என்று பக்தி சேவையில் ஈடுபட்டிருக்கும் சில அமைப்புக்களைக்கூட அவன் தவறாகப் புரிந்து கொள்கிறான். பக்தித் தொண்டில் பக்குவமடைந்து முக்தியடைந்த ஆத்மாக்களுடன் தானும் சமம் என்று ஆடம்பரமாக நினைத்துக் கொள்கிறான். அவனது இந்த பொய் அஹங்காரத்தின் காரணமாக இக்கதையில் வரும் தவளை போல முடிவில் அழந்து போகின்றான்.


குறிப்பு: "வெடித்துப் போன தவளை" எனும் இக்கதையை விவரிப்பதன் மூலம் ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதா அவர்கள், "ஒருவன் பெரிய மனிதனாக இருப்பதை விட நல்ல மனிதனாக இருப்பது  சிறந்தது" என்று நமக்கு அறிவுறித்துகின்றார். "நானே பிரம்மன், நானே சித்திகள் வாய்க்கப்பட்டவன், நானே வைஷ்ணவன், நானே பண்டிதன், நானே தன்னை உணர்ந்தவன்" இந்த வகையான தவறான பொய் அஹங்காரமே ஆத்மா வீழ்ச்சியடைவதற்கும், பற்றுதலுக்கும் மூல காரணமாக அமைகின்றது. ஆனால் பகவான் ஸ்ரீ ஹரியின் மீதுள்ள தூய பக்தியினால் புத்துயிரூட்டப்பட்ட பக்தன் தன்னை இந்த பெளதிக இயற்கயின் அதிபதி என்றோ, அதன் அனுபவிப்பாளன் என்றோ ஒரு போதும் கருதுவதில்லை. பக்தர்கள் தங்களை ஆன்மீக குரு மற்றும் அனைத்து வைஷ்ணவர்களின் பாதத் தூளிக்கு சமமானவன் என்பது எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களின் இதயம் எப்போதும் பணிவுடனேயே இருக்கும். ராவணன் ஒருபோதும் பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக முடியாது. அது போல ஒரு உயிர்வாழி ஒரு போதும் "பரபிரஹ்மன்" ஆக முடியாது.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 


கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஹரே ராம, ஹரே ராம, 


ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!



ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Telegram செயலி



🔆🔆🔆🔆🔆🔆🔆



Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇



🔆🔆🔆🔆🔆🔆🔆



சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...