Skip to main content

அலட்சியம் கூடாது



மஹாபாரத யுத்தத்திற்கு பின் யுதிஷ்டிர மகாராஜாவின் கேள்விக்கு அம்புபடுக்கையில் இருந்த பிதாமகர் பீஷ்மரால் சொல்லப்பட்ட ராஜ நீதி கதைகளில்  கீழ்காணும் கதையும் ஒன்று 


ஒரு ஊரில்  வயல்களின் நடுவே ஆங்காங்கே குளங்கள் இருந்தது அதில் சிறிதும், பெரியதுமாக நிறைய மீன்கள் இருந்தன. அதில் மூன்று பெரிய மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தது.   அவைகள்  எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரி செய்து கொண்டு மிக்க நேசமாக அக்குளத்தில் வாழ்ந்தன. மற்ற மீன்களுக்கு அவைகளிடம் மிக்க மரியாதையும், அன்பும் இருந்தது. அந்த மீன்கள் ஒவ்வொன்றிற்கும்  ஒரு விசேஷ தன்மை, குணம் இருந்தது.  ஒன்றிற்கொன்று வித்தியாசமான குணமானாலும் அவைகளுக்குள் பிரச்சினை ஒன்றும் இல்லை.


முதலாவது மீனின் பெயர் தூரதர்சி  அதாவது இதன் இயல்பு எதிர்வரும் ஆபத்துகளிலிருந்து முன் எச்சரிகையோடு தன்னை காப்பாற்றி கொள்ளும் குணமுடையது.  


இரண்டாவது மீனின் பெயர் பிரத்யுன்மதி இதன் இயல்பு, ஆபத்தான சமயம் வரை காத்திருந்து , மிகவும் சிரமப்பட்டு தக்க உபாயம் தோன்றி பல கடினங்களுக்கு பின் தன்னைத்தானே காப்பாற்றி கொள்ளும் குணமுடையது.


மூன்றாவது  மீனின் பெயர் தீர்க்க சூத்ரி அனாவசியமாகக் காலதாமதம் செய்து யாருடைய நல்ல உபதேசங்களை கேட்காமல் ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் குணமுடையது


ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் அக்குளத்தருகே வந்து அதைச் சுற்றிலும் வாய்க்கால் அமைத்து தண்ணீரை வடியவைத்து  , நீர் குறைந்ததும் வலை வீசி மீன்களைப் பிடிக்கலாம் என்று பேசிக் கொண்டனர். இந்தப்பேச்சை அம்மூன்று மீன்களும் செவிமடுத்தது. மறுநாளே கால்வாயும் வெட்டத் துவங்கினர். பெரிய மீன்கள் மற்ற மீன்களைக் கூப்பிட்டுப் பேசத் துவங்கியது. 


அப்போது தூரதர்சி மீன் பேச துவங்கியது. "உறவினர்களே இக்குளத்தில் இருக்கும் நம் யாவருக்கும் ஆபத்து நெருங்கி விட்டது. இன்று சில மீனவர்களின் பேச்சைக் கேட்டேன். நான் ஒரு யோசனை சொல்கிறேன் நீர் வடிய இவர்கள் வெட்டும் வாய்க்கால் மூலம் தந்திரமாக தப்பித்து வெளியேறி வேறொரு இடத்திற்கு செல்வோம் என்றது. இந்த யோசனையில் யாருக்காவது ஆக்ஷேபணை இருந்தால் தெரிவிக்கலாம் மேலும் அடுத்த இடத்திற்குப்  போய்விட்டால் இந்த பெரும் ஆபத்திலிருந்து  தப்பிவிடலாம் என்றும் தண்ணீரும் வெளியேறத் துவங்கிவிட்டதால் சீக்கிரம் முடிவெடுப்போம் என்றும் கூறியது.


ப்ரத்யுன்மதி தனது நண்பர்களிடம் நண்பனே இப்படி முடிவெடுக்க இன்னும் காலம் வரவில்லை. நேரம் வரும்போது  எனக்கு தக்க யோசனை தோன்றும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். என்றது.


தீர்க சூத்ரி தனது நண்பர்களிடம் இப்போதைக்கு இந்த பேச்சு அவசியமும் இல்லை , அவசரமுமில்லை இதெல்லாம் வீண் பயம் கவலைகொள்ள வேண்டாம் என்றது. அதற்கான காலம் இதுவல்ல, இப்போது உள்ள நேரத்தை வீணடிக்காமல் ஆனந்தத்துடன் துள்ளி விளையாடுவோம். 


பழக்கமான இடத்தைவிட்டுப் போக மனமில்லாததால் மற்ற மீன்களும் இதை ஆமோதித்தது. அதனால் தூரதர்சி நான் போகிறேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் நீரினுட் புகுந்து வெளியேறிவிட்டது.


மீனவர்கள் அதிக அளவு நீரை வெளியேற்றிவிட்டு  நல்லதொரு அழுத்தமான வலையை குளத்தில் வீசி, பலவித  யுக்திகளைக் கையாண்டு மீன்களையெல்லாம் வலையில் சிக்க வைத்தனர். பிரத்யுன்மதி  மீனும் அதில் சிக்கியது. ஆனால் வலையின் கயிற்றை வாயில் கவ்விக்கொண்டு வலையினுள் கட்டுண்டதைப் போல கிடந்தது. 


மீனவர்கள் ,வலையை வேறு நல்ல நீர்ருள்ள இடத்திற்கு எடுத்துப்போய் சுத்தம் செய்வோம் என்று இழுத்துக் கொண்டு போய் சுத்தம் செய்யத் துவக்கினர்,  ப்ரத்யுன்மதி கயிற்றை வாயிலிருந்து விடுத்துக் கொண்டு நீரில் தாவி தப்பித்து கொண்டது.


ஆனால் தீர்க சூத்ரிக்கு பயத்திலேயே உணர்விழந்து மரணத்தைத் தழுவியது.  


அதனால்  வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான்.


ஒருவன் தனக்குத் தக்க சமயத்தில் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறானோ அவன் கஷ்டப்பட்டுதான் சுகமடைய முடியும்.


எந்த மனிதனும் ஆலோசனை செய்து,  அல்லது நன்கறிந்து, தேசகாலத்தை உத்தேசித்து, நல்லவர்களின் உபதேசங்களை சரியான நேரத்தில் சரியாகப் பயன் படுத்தினால் அதன் ஒத்துழைப்பால்  விருப்பமான பலனைப்பெறுகிறான் என்பது,  பிதாமகர் பீஷ்மர், யுதிஷ்டிர மகாராஜாவிற்கு உபதேசித்து அருளினார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...