Skip to main content

பிரபு தவ பாத யுகே மோரா நிவேதன்

 


(1 )

பிரபு தவ பாத யுகே மோரா நிவேதன்

நாஹீ மாகி தேஹ - சுக வித்யா தன ஜன்


மொழிபெயர்ப்பு:

🌼🌼🌼🌼🌼🌼🌼

பகவானே, நான் பின்வரும் இந்த பிரார்த்தனையை, தங்களின் புனித பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். நான் உடலின்பத்தை பெறுவதற்காகவோ, படிப்பதற்காகவோ, செல்வங்கள் சேர்பதற்காகவோ அல்லது சீடர்களை சேர்பதற்காகவோ ப்ரார்திக்கவில்லை.


(2 )

நாஹீ மாகி ஸ்வர்க, ஆர மோக்ஷ நாஹீ மாகி 

நா கோரி பிரார்த்தன கோனோ விபுதிர லாகி


மொழிபெயர்ப்பு:

🌼🌼🌼🌼🌼🌼🌼

நான் ஸ்வர்கலோகங்களை அடைவதற்காகவோ, முக்தி பெறுவதற்காகவோ இந்த பிரார்த்தனை செய்யவில்லை.


(3)

நிஜ-கர்ம-குண- தோசே ஜெ ஜெ ஜென்ம பாய் 

ஜன்மே ஜன்மே ஜெனோ தவ நாம-குண காய்  


மொழிபெயர்ப்பு:

🌼🌼🌼🌼🌼🌼🌼


நான் எப்படி பிறந்தாலும், என் கர்மா என்னை எப்படி அழைத்து சென்றாலும், நான் தங்களுடைய புனித நாமத்தை ஒவ்வொரு பிறப்பிலும் பாடிக்கொண்டே இருக்கவேண்டும்.



(4)

ஏ மாத்ரா ஆசா மம தோமார் சரணே 

அஹோய்துகி பக்தி ஹ்ரிதே ஜாகே அனுக்ஷனே


மொழிபெயர்ப்பு:

🌼🌼🌼🌼🌼🌼🌼

இது ஒன்றே என்னுடைய விருப்பம், என்னுடைய நம்பிக்கை மற்றும் என்னுடைய பிரார்த்தனையாகும் . தடையில்லாத எல்லையற்ற பக்தி என் மனதில் எழுந்து தம்மை நோக்கி பாயட்டும்.


(5)

விஷயே ஜெ ப்ரீத்தி எபே ஆச்சயே ஆமார்

செய்-மாத ப்ரீத்தி ஹூக் சரணே தோமார்  


மொழிபெயர்ப்பு:

🌼🌼🌼🌼🌼🌼🌼

நான் இப்போது எவ்வளவுக்கெவ்வளவு ஜட இன்பத்தை நேசிக்கின்றேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு தங்களுடைய தாமரை பாதங்களை நேசிக்க வேண்டும். ஜட பொருட்களின் மீதுள்ள என் பற்றினை தங்களுடைய தாமரை பாதங்களுக்கு பரிமாற்றம் செய்வீராக.


(6)

விபதே சம்பதே தாஹா தாகுக் சம - பாவே 

தினே தினே வ்ரிதி ஹூக் நாமேர ப்ரபாவே   


மொழிபெயர்ப்பு:

🌼🌼🌼🌼🌼🌼🌼


எனக்கு வெற்றி தோல்வி ஏற்படும்போதும், அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் ஏற்படும்போதும் என் மனம் சம நிலை பெறவேண்டும். தங்களின் புனித நாமத்தின் தாக்கத்தினால், எனக்கு தங்களின் மீதான அன்பு நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.


(7)

பசு - பக்ஷி  ஹொயே தாகி ஸ்வர்கே வா நிரோயே 

தவ பக்தி ரகு பக்தி வினோத – ஹ்ரிதோயே


மொழிபெயர்ப்பு:

🌼🌼🌼🌼🌼🌼🌼

நான் பறவையாய் வாழ்ந்தாலும் மிருகமாய் வாழ்ந்தாலும், சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் நரகத்தில் வாழ்ந்தாலும், பக்திவினோத் என்னும் நான் எப்பொழுதும் என் இதயத்தில் பக்தியை கொண்டாட வேண்டும்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...