Skip to main content

கார்த்தியாயினி விரதம்



மார்கஸீர்ஷ மாதத்தில் ஆயர்குல இளமங்கையர் அதிகாலையில் எழுந்து ஒருத்தி மற்றொருத்தியின் கைகளைப் பற்றிக் கொண்டு கிருஷ்ணரின் கல்யாணகுணங்களைச் சிறப்பித்துக் பாடிக்கொண்டே யமுனை நதிக்கு நீராடச் செல்வர். நீராடி முடித்த கோபியர்கள் கிருஷ்ணரே தமது கணவராக வர வேண்டும் என்று விரும்பி கார்த்தியாயினி தேவியை தூய தீபங்கள் மற்றும் மலர்களைக் கொண்டு வழிபடுவர்.


ஒரு நாள் காலையில் கோபியர் தமது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்துவிட்டு, யமுனை நதியில் இறங்கி கிருஷ்ணரின் லீலைகளைப் போற்றியபடியே நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு தோன்றிய கிருஷ்ணர் கோபியர்களின் ஆடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அருகில் நின்ற ‘கதம்ப’ மரத்தில் ஏறிக் கொண்டார். கோபியர்களைக் கேலி செய்ய விரும்பிய கிருஷ்ணர் அவர்களிடம் “நீங்கள் மேற்கொண்ட விரதங்களினால் எவ்வாறு களைப்புற்றிருக்கின்றீர்கள் என்பதை நான் நன்கறிவேன். ஆகையினால் கரைக்கு வந்து உங்களது ஆடைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.


இதனைக் கேட்டுச் சினமுற்றவர்களைப் போல் நடித்த கோபியர்கள், அதிக நேரம் யமுனையின் குளிர்ந்த நீரில் தாங்கள் துன்புறுவதாகவும், கிருஷ்ணர் தமது ஆடைகளைத் திருப்பித் தராவிட்டால் நடந்தது அனைத்தையும் தாங்கள் மன்னன் கம்சனிடம் கூறப்போவதாகவும், மாறாகக் கிருஷ்ணர் தமது ஆடைகளைக் கொடுத்து விட்டால், பணிவுள்ள சேடிப் பெண்களைப் போல் தாங்கள் அவரது கட்டளைகளை நிறைவேற்றுவதாகவும் பதில் கூறினார்.


இதற்குப் பதிலாக ஸ்ரீ கிருஷ்ணர் மன்னன் கம்சனைக் கண்டு தாம் அஞ்சவில்லை என்றும் உண்மையிலேயே கோபியர்கள் தமது சேடிப் பெண்களைப் போல் பணிபுரிவர் என்றால் அவர்கள் உடனடியாக் கரைக்கு வந்து அவரவர்க்குரிய ஆடைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த கோபியர்கள் தமது இருகருங்களாலும் தங்கள் மேனியை மூடியவாறே நீரினின்று வெளியே வந்தனர். அவர்கள் மீது அதீதப் பாசமுடைய பகவான் அவர்களிடம் மீண்டும் கூறினார் “உங்கள் விரதத்தை நிறைவேற்றும் பொருட்டு நீங்கள் பிறந்த மேனியாக நதியில் நீராடியதால் தேவர்களிடத்து நீங்கள் பெருங்குற்றமிழைத்திருக்கின்றீர்கள். இதற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் இருகரங்களையும் கூப்பி அவர்களை வணங்க வேண்டும் அப்போது தான் உங்கள் விரதத்தின் பலனை நீங்கள் அடைவீர்கள்”.


கிருஷ்ணரின் கட்டளையைச் சிரமேற் தாங்கிய கோபியர்கள் தமது இருகரங்களையும் கூப்பி மரியாதையுடன் கிருஷ்ணரை வணங்கினர். அவர் அவர்களது ஆடைகளை அவர்களிடம் மீண்டும் அளித்தார். ஆனால் அவர் மீது நாட்டங் கொண்ட கோபியர்கள் அங்கிருந்து அவரைப் பிரிந்து செல்ல இயலாது நின்றனர். அவர்களது மனநிலையினை நன்கு அறிந்து கொண்ட கிருஷ்ணர் அவர்களிடம், தன்னைக் கணவராக வரிக்க விரும்பியே அவர்கள் காத்யாயனி விரதம் இருந்தனர் என்பது தமக்குத் தெரியுமென்றும், அவர்கள் தமது இதயங்களைத் தன்னிடம் இழந்து விட்ட காரணத்தினால், வறுத்த விதை மீண்டும் முளைக்காதது போல் அவர்களது ஆசைகளில் ஒருபோதும் உலகியல் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்னும் கறைபடியாதென்றும் கூறியதோடு, அடுத்த இலையுதிர் காலத்தில் அவர்களது விருப்பம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.


அவரது வார்த்தைகளில் முற்றிலும் திருப்தியுற்ற கோபியர்கள் அங்கிருந்து மீண்டும் விரஜத்திற்குத் திரும்பிச் சென்றனர். ஸ்ரீ கிருஷ்ணரும் அவர்தம் ஆயர்குல நண்பர்களும் பசுக்களை மேய்ப்பதற்காக வெகுதூரத்திலுள்ள ஓரிடத்திற்குச் சென்றனர்.


ஶ்ரீமத் பாகவதம் /   பத்தாம் காண்டம் / அத்தியாயம்  22


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...