Skip to main content

கங்கை நதியின் சரித்திரம்

 


ரோஹிதரின் மகன் ஹரிதன். ஹரிதரின் மகன் சம்பன். இவர் சம்பாபுரி எனும் நகரத்தை நிர்மாணித்தார். சம்பனின் மகன் சுதேவன். சுதேவனின் மகன் விஜயன். விஜயனின் மகன் பருகன். பருகனின் மகன் விருகன். விருகனின் மகனான பாஹுகன் அவரது எதிரிகளால் மிகவும் தொல்லைப்படுத்தப்பட்டார். எனவே அவர் வீட்டைத் துறந்து மனவைியுடன் காடு சென்றார். அவர் அங்கு இறந்துபோனதும் அவருடைய மனைவி உடன்கட்டையேற விரும்பினாள். ஆனால் அவள் கர்ப்பவதியாக இருந்ததை அறிந்த ஓளரவ ரிஷி அவளைத் தடுத்துவிட்டார். இவளது சக்களத்திகள் இவளுக்கு உணவுடன் விஷம் கலந்து கொடுத்துவிட்டனர். ஆயினும் அவளுடைய மகன் விஷத்துடனேயே பிறந்தான். எனவே அம்மகன் சகரன் என்று பெயர் சூட்டப்பட்டான். (ஸ என்றால் “உடன்”, கர என்றால் “விஷம்”)  சகர மகாராஜன், தன் ஆன்மீக குருவான ஓளரவரின் உத்தரவுப்படி,  யவனர், சகர், ஹைஹயர் மற்றும் பர்பரஸ் முதலான பல ஜாதிகளை சீர்படுத்தினார். பிறகு மீண்டும் ஓளரவரின் உத்தரவுப்படி, அரசர் அஸ்வமேத யாகங்களைச் செய்தார். ஆனால் யாகக் குதிரையை இந்திரன் அபகரித்துச் சென்றுவிட்டார். சகர மகாராஜனுக்கு சுமதி மற்றும் கேசினி என்ற இரு மனைவிகள் இருந்தனர். குதிரையைத் தேடிச் சென்ற சுமதியின் மகன்கள் அகலமாக பூமியைத் தோண்டினார்கள். இவ்வாறு தோண்டப்பட அகழி பிறகு சாகர சமுத்திரம் என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு தேடிக்கொண்ட செல்லும்பொழுது, மகாபுருஷரான கபிலதேவரிடம் வந்த அவர்கள், அவருக்கருகில் குதிரை நிற்பதைக்கண்டு

 

 “இவன்தான் குதிரையைத் திருடியவன். கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். மகா பாவியான இவனைக் கொல்லுங்கள், கொல்லுங்கள்” என்று கூச்சலிட்டுக் கொண்டு. சகரனின் அறுபதாயிரம் மகன்களும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு முனிவரை நோக்கி ஓடினார்கள். அப்போது அம்முனிவர் கண்களைத் திறந்தார். குற்றமுள்ள இந்த எண்ணத்துடன் அவரைத் தாக்கிய அவர்களனைவரும் எரிந்து சாம்பலாயினர். அரசரின் இரண்டாவது மனைவியான கேசினிக்கு அஸமஞ்ஜஸன் என்ற ஒரு மகனிருந்தார். இவரது மகனான அம்சுமான் பிறகு குதிரையைத் தேடிச்சென்று, தன் தந்தையுடன் பிறந்தவர்களை விடுவித்தார். கபிலதேவரை அணுகிய அம்சுமான். யாகக் குதிரையும், ஒரு சாம்பல் குவியலும் அங்கிருப்பதைக் கண்டார். அம்சுமான் கபிலதேவரிடம் பிரார்த்தனைகள் செய்தார். இதனால் திருப்தியடைந்த கபிலதேவர் குதிரையை திருப்பித் தந்தார். குதிரையைப் பெற்ற பிறகும் அம்சுமான் அங்கேயே நின்று கொண்டிருந்ததைக் கண்ட கபிலதேவரால், அம்சுமான் தன் முனனோர்களின் விடுதலைக்காக வேண்டுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறாக கங்கை நீரினால் அவர்களை விடுவிக்க இயலும் என்ற உபதேசத்தை கபிலதேவர் அருளினார். அம்சமானும் பிறகு கபிலதேவரை வலம் வந்து அவரை வணங்கிய பிறகு, யாகக் குதிரையுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். யாகத்தை நிறைவேற்றிய சகர மகாராஜன், இராஜ்யத்தை அம்சுமானிடம் ஒப்படைத்துவிட்டு, ஓளரவரின் உபதேசத்தைப் பின்பற்றி முக்தியடைந்தார்.

 

அம்சுமான் மகாராஜனின் மகன் திலீபன். இவர் கங்கையை இவ்வுலகிற்குக் கொண்டு வர முயன்று அதில் வெற்றி பெறாமலேயே இறந்து போனார். திலீபனின் மகனான பகீரதன் கங்கையை ஜட உலகிற்குக் கொண்டு வருவதென உறுதி கொண்டார். இதற்காக அவர் கடுந் தவத்தையும் மேற்கொண்டார். அவரது தவத்தால் மகிழ்ந்த கங்கை மாதா, வரம் கொடுக்க விரும்பி அவருக்குக் காட்சியளித்தாள். பகீரதனும் தன் முன்னோர்களை விடுவிக்கும்படி அவளைக் கேட்டுக் கொண்டார். கங்கை பூமிக்கு வரச் சம்மதித்த போதிலும், இரு நிபந்தனைகளை விதித்தாள்: முதலாவதாக அவளது அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த தகுதியுள்ள ஓர் ஆண்மகன் தேவை; இரண்டாவதாக பாவிகள் கங்கையில் குளிப்பதால் அவர்களது பாவங்கள் நீங்கும் என்றாலும், அவர்களது எல்லாப் பாவங்களையும் வைத்திருக்க கங்கை விரும்பவில்லை. இவ்விரு நிபந்தனைகளும் கருத்திற் கொள்ள வேண்டிய விஷயங்களாகும். பகீரதனும் கங்கா மாதாவுக்குப் பின்வருமாறு விடையளித்தார். “சிவபெருமானால் தங்களுடைய அலைகளின் வேகத்தை முற்றிலும் கட்டுப்படுத்த இயலும். மேலும் தூய பக்தர்கள் தங்களுடைய நீரில் குளிக்கும்போது பாவிகள் விட்டுச் சென்ற பாவங்கள் செயலிழக்கச் செய்யப்படும்.” சுலபமாக திருப்தியடைவதால் ஆசுதோஷர் என்றழைக்கப்படும் சிவபெருமானை மகிழ்விக்கும் பொருட்டு பகீரதன் தவங்களைச் செய்தார். கங்கையின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதெனும் பகீரதனின் திட்டத்திற்கு சிவபெருமான் சம்மதித்தார். இவ்வாறாக கங்கை நீர் தொட்ட உடனேயே பகீரதனின் முன்னோர்கள் விடுதலையடைந்து சுவர்க்க லோகங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 

 (ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 9 / அத்தியாயம் 8 -9 )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...