Skip to main content

அசிந்த்ய-பேதாபேத தத்துவம்

 



ஏஷ நித்யோ ‘வ்யய: ஸூக்ஷ்ம ஏஷ ஸர்வாஸ்ரய: ஸ்வத்ருக்
ஆத்மமாயா - குணைர் விஸ்வம் ஆத்மானம் ஸ்ருஜதே ப்ரபு:


மொழிபெயர்ப்பு


உண்மையில் ஜீவராசி ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதால், அவன் நித்தியமானவனும், அழிவற்றவனுமாவான். அவன் பிறப்பதுமில்லை, மடிவதுமில்லை. எல்லா வகையான உடல்களுக்கும் அவனே அடிப்படைத் தத்துவம் என்றாலும், அவன் உடலின் பிரிவைச் சேர்ந்தவனல்ல. ஜீவராசி மிகவும் பரிசுத்தமானவான் என்பதால் அவன் குணத்தில் பரமபுருஷருக்குச் சமமானவனாவான். இருப்பினும், அவன் மிகமிகச் சிறியவன் என்பதால், புறச்சக்தியினால் மயக்கப்படக் கூடியவனாக இருக்கிறான். இவ்விதமாக, தனது பல்வேறு உடல்களை ஏற்படுத்திக் கொள்கிறான்.


பொருளுரை


இச்சுலோகத்தில், அசிந்த்ய-பேதாபேத தத்துவம், அதாவது, “ஒரேசமயத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்ட தத்துவம்” விவரிக்கப்படுகிறது. ஜீவராசி பரமபுருஷரைப்போல் நித்தியமானவன் (நித்ய). ஆனால் வேறுபாடு என்னவெனில், பரமபுருஷர் அனைவரிலும் பெரியவராவார். அவருக்குச் சமமானவரோ, அவரைவிட உயர்ந்தவரோ ஒருவருமில்லை. ஆனால் ஜீவராசியோ, மிகமிகச் சிறியவனாவான் (சூக்ஷ்ம). ஜீவராசியின் பரிமாணம், தலைமுடியின் நுனியின் பத்தாயிரத்தில் ஒரு பாகம் என்று சாஸ்திரம் விவரிக்கிறது. பரமபுருஷர் எங்கும் நிறைந்திருக்கிறார் (அண்டாந்தரஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம்). அதற்கேற்ப ஜீவராசி மிகமிகச் சிறியவன் என்று ஏற்றுக் கொள்ளப்படுவானாயின், இயல்பாகவே மிகமிகப் பெரியவரைப் பற்றிய விசாரணை எழவேண்டும். மிகமிகப் பெரியவர் பரமபுருஷராவார். மிகமிகச் சிறியவன் ஜீவராசியாவான்.


ஜீவன் மாயையால் மூடப்படுகிறான். அது அவனுடைய மற்றொரு விசித்திர குணமாகும். ஆத்மமாயா-குணை: அவன் பரமபுருஷரின் மாயச் சக்தியால் மூடப்படக்கூடியவன். ஜீவராசி இந்த ஜட உலகில் பந்தப்பட்ட நிலையில் இருப்பதற்கு அவனே பொறுப்பாளியாவான். எனவேதான் அவன் ப்ரபு (“தலைவன்”) என்று விவரிக்கப்படுகிறான். அவன் விரும்பினால் அவனால் இந்த ஜட உலகிற்கும் வர முடியும், ஆன்மீக உலகிற்கு திரும்பிச் செல்லவும் முடியும். ஜட உலகை அவன் அனுபவிக்க விரும்பியதால், பரமபுருஷர், ஜட சக்தியின் மூலமாக ஒரு பௌதிக உடலை அவனுக்குக் கொடுத்துள்ளார். இதை பகவான் பகவத்கீதையில் (18.61) பின்வருமாறு கூறுகிறார்:


ஈஸ்வர: ஸர்வ-பூதானாம்
ஹ்ருத்-தேசே ‘ர்ஜுன திஷ்டதி
ப்ராமயன் ஸர்வ-பூதானி
யந்த்ராரூடானி மாயயா

“அர்ஜுனா, பரமபுருஷர் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருக்கிறார். பௌதிக சக்தியால் செய்யப்பட்ட இயந்திரங்களில் அமர்ந்திருப்பவர்கள் போன்ற ஜீவராசிகளின் பயணங்களை அவரே வழி நடத்துகிறார்”. ஜீவராசி இவ்வுலகைத் தன் விருப்பம்போல் அனுபவிக்க பகவான் வாய்ப்பளிக்கிறார். ஆனால் ஜீவராசி எல்லா பௌதிக ஆசைகளையும் விட்டுவிட்டு, பரமபுருஷரிடம் முழுமையாகச் சரணடைந்து, பரமபதம் அடையவேண்டும் என்ற தமது விருப்பத்தை பகவான் வெளிப்படையாகக் கூறுகிறார்.


ஜீவராசி மிகமிகச் சிறியவனாவான் (ஸூக்ஷ்ம). இது தொடர்பாக ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி பின்வருமாறு கூறுகிறார்: பௌதிக விஞ்ஞானிகளுக்கு உடலுக்குள் உள்ள ஜீவராசியைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினமாகும். இருப்பினும் உடலுக்குள் ஜீவராசி இருப்பது பற்றி வேத வல்லுணர்களிடமிருந்து நாம் அறிகிறோம். உடல் ஜீவராசியிலிருந்து வேறுபட்டதாகும்.


 (ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 6.16.9 )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...