Skip to main content

கிருஷ்ணரும், பீஷ்மரும்


 

சித-விசிக-ஹதோ விசீர்ண-தம்ச:
க்ஷதஜ-பரிப்லுத ஆததாயினோ மே
ப்ரஸபம் அபிஸஸார மத்-வதார்தம்
பவது மே பகவான் கதிர் முகுந்த:


மொழிபெயர்ப்பு

முக்தி அளிப்பவரான, அந்த பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக, எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல், போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார். அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது. மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது.


பொருளுரை

கிருஷ்ணரும், பீஷ்மரும் போர்க்களத்தில் நடந்து கொண்ட முறை கவனத்தைக் கவர்வதாக இருந்தது. ஏனெனில், கிருஷ்ணரின் செயல் அர்ஜுனனுக்குச் சாதகமாகவும், பீஷ்மருக்கு பாதகமாகவும் இருந்ததைப் போல் காணப்பட்டது; ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மதேவருக்கு விசேஷ அன்பைக் காட்டுவதற்காகவே இவ்வளவும் நிகழ்ந்தன. ஓரெதிரியைப் போல் நடந்துகொள்வதாலும் பக்தரால் பகவானை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதே இத்தகைய விவகாரங்களின் பிரமிக்கச் செய்யும் அம்சமாகும். பகவான் பரிபூரணமானவர் என்பதால், ஓர் எதிரியின் வேடத்திலுள்ள அவரது தூய பக்தரின் சேவையையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியும். பரம புருஷருக்கு எந்த எதிரியும் இருக்க முடியாது. மேலும் பெயரளவேயான ஒரு எதிரியால் அவருக்குத் தீங்கிழைக்கவும் முடியாது. ஏனெனில் அவர்அஜித”, அல்லது வெல்லப்பட முடியாதவராவார். ஒருவரும் பகவானைவிட உயர்ந்தவராக இருக்க முடியாது என்றபோதிலும், தூய பக்தரொருவர் ஓரெதிரியைப் போல் அவரைத் தாக்கும்பொழுது அல்லது உயர்ந்ததொரு நிலையில் இருந்து கொண்டு அவரைக் கடிந்து கொள்ளும்பொழுது, அதில் பகவான் ஆனந்தமடைகிறார். இவை பகவானுடன் பக்தர்கள் கொள்ளும் உன்னதமான அன்புப் பரிமாற்றங்களில் சிலவாகும். மேலும் தூய பக்தித் தொண்டைப் பற்றி அறியாதவர்களால் இத்தகைய விவகாரங்களில் உள்ள மர்மத்தைப் புரிந்துகொள்ள இயலாது.

சாதாரண கண்களுக்கு பகவான் காயமடைந்ததைப் போல் காணப்பட வேண்டும் என்பதற்காகவே ஒரு துணிவுமிக்க வீரரின் பாகத்தை ஏற்றிருந்த பீஷ்மதேவர், வேண்டுமென்றே பகவானின் உடலை அம்புகளால் துளைத்தார். ஆனால் உண்மையில் பக்தரல்லாதவர்களை குழப்புவதற்காகவே அப்படி செய்யப்பட்டது. ஆன்மீகமயமான உடலை காயப்படுத்த முடியாது, பக்தரொருவர் பகவானின் எதிரியாகவும் முடியாது. அது முடியுமானால், பீஷ்மதேவர் அவரது வாழ்வின் இறுதி இலக்காக அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே தேர்ந்து எடுத்திருக்கமாட்டார். பீஷ்மர் பகவானின் எதிரியாக இருந்திருப்பாரானால், சிறிதும் அசையாமலேயே அவரை பகவானால் கொன்றிருக்க முடியும். இரத்தத்துடனும், காயங்களுடனும் பீஷ்மதேவரின் முன் வரவேண்டிய அவசியமில்லை. ஆனால் தன்னால் உண்டாக்கப்பட்ட காயங்களால் அலங்கரிக்கப்பட்ட பகவானின் திவ்யமான உடல் அழகை பீஷ்மர் காண விரும்பியதாலேயே பகவான் அப்படிச் செய்தார். இதுவே பகவானுக்கும், பக்தருக்கும் இடையிலான தெய்வீகமான உறவைப் பரிமாறிக் கொள்ளும் முறையாகும். இத்தகைய விவகாரங்களினால் பகவான் மற்றும் பக்தர் ஆகிய இருவருமே பெருமையடைகின்றனர். பகவான் மிகவும் கோபாவேஷத்துடன் இருந்ததால், அவர் பீஷ்மதேவரை நோக்கிச் செல்லும்பொழுது, அர்ஜுனன் அவரைத் தடுக்க முயன்றபோதிலும், தடைகளைப் பொருட்படுத்தாமல் காதலியை நோக்கி காதலன் விரைந்து செல்வதைப் போலவே, கிருஷ்ணரும் பிஷ்மதேவரை நோக்கிச் சென்றார். வெளிப்பார்வைக்கு அவர் பிஷ்மதேவரை கொல்ல முடிவு செய்திருந்ததாக காணப்பட்டது. ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மரை மகிழ்விப்பதே அவரது நோக்கமாகும். பகவான் எல்லா ஜீவராசிகளையும் விடுவிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. அருவவாதிகள் அவரிடமிருந்து முக்தியைப் பெற விரும்புகின்றனர். அவர்களது விருப்பப்படியே அதை அவர்களுக்கு பகவான் அளிக்கிறார். ஆனால் இங்கு, பகவானை அவரது உருவ அம்சத்தில் காண பீஷ்மதேவர் விரும்புகிறார். தூய பக்தர்கள் அனைவரும் இதைத்தான் விரும்புவார்கள்.


ஶ்ரீமத் பாகவதம் 1.9.38


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...