Skip to main content

Posts

Showing posts from April, 2022

விருந்தினரை வரவேற்கும் முறை

ஓர் எதிரியை வீட்டிற்கு வரவேற்பதென்றாலும் அதை மரியாதையுடன் செய்யவேண்டுமென்பது வேதக் கட்டளையாகும். எதிரியின் வீட்டிலிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் அவரை நன்கு உபசரிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் மகத ராஜனான ஜராசந்தனை அணுகியபோது, மதிப்பிற்குரிய எதிரிகளை ஜராசந்தன் ராஜ மரியாதையுடன் வரவேற்றான். எதிரி விருந்தினராக இருந்த பீமன் ஜராசந்தனுடன் சண்டை செய்வதாக இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் அவர்கள் நண்பர்களைப் போலவும், விருந்தினர்களைப் போலவும் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம். பகலிலோ வாழ்வா, சாவா என்ற ஆபத்தான சூழ்நிலையுடன் அவர்கள் போர் செய்தனர். அதுதான் உபசரணை விதியாகும். ஒருவன் பரம ஏழையாக இருந்தாலும், குறைந்தது ஒரு புல்லாசனம், குடிப்பதற்கு சிறிது நீர் மற்றும் இனிய வார்த்தைகள் ஆகியவற்றையாவது தன் விருந்தினருக்கு அளிக்க வேண்டும் என்பது உபசரணை விதி. எனவே ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த செலவும் இல்லை. நற்பண்புதான் இதற்குத் தேவை.  ( ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம்...

அறிவுரையை யாரிடம் கேட்க வேண்டும்

பந்தப்பட்ட ஆத்மா நான்கு வழிகளில் குறைபாடுடையவனாக இருக்கிறான். அவை அவன் மாயை வசப்பட்டவன், தவறு செய்பவன், குறை அறிவு உடையவன், ஏமாற்றம் எண்ணம் உடையவன் என்பவையாகும். பௌதீக பந்தத்திலிருந்து ஒருவன் விடுதலை பெறாதவரையில் இந்நான்கு குற்றங்களும் கண்டிப்பாக இருக்கும். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மனிதனிடமும் ஏமாற்றும் எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணம் தொழில் மற்றும் பண வரவு செலவுகளில் நடை முறைப்படுத்தப்படுகிறது. இரண்டு நண்பர்கள் இணைந்து அமைதியுடன் வாழ்ந்தபோதிலும் அவர்களிடையே வரவு செலவு என்று வரும்பொழுது, அவர்களிடம் இருக்கும் ஏமாற்றும் மனப்பான்மையின் காரணமாக அவர்கள் பகைவர்களாகின்றனர். ஒரு தத்துவவாதி ஒரு பொருளாதார நிபுணனை ஏமாற்றுக்காரன் என்று குற்றம் சொல்கிறான், ஒரு பொருளாதார நிபுணனோ, ஒரு தத்துவவாதி பணத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது அவனும் ஏமாற்றுக்காரனாகிறான் என்று தத்துவவாதியைக் குற்றம் சொல்கிறான். எது எப்படியிருந்த போதிலும் பௌதீக வாழ்க்கையின் நிலை இதுவேயாகும். மிகப் பெரிய தத்துவத்தை ஒருவன் கற்றுக் கொடுக்கலாம் ஆனால் அவனுக்குப் பணம் தேவைப்படும்பொழுது அவன் ஏமாற்றுக்காரானாகிறான். இப்பௌதிக உலகில் விஞ்ஞானிகளு...

ஶ்ரீபாத ராமனுஜ ஆச்சாரியார்

வைணவ தர்மத்தைப் பரப்பிய ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவராக விளங்கியவர் ஶ்ரீபாத இராமானுஜர். ஆதிசேஷனின் அவதாரமான இவர் கலி யுகத்தில் 1017ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இராமானுஜரின் தோற்றம், செயல்கள், உபதேசம், மறைவு என அனைத்துமே திவ்யமான லீலைகளாகும். 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼  ஸ்ரீ ஸம்பிரதாயம் எனப்படும் இராமானுஜ பரம்பரையில் பகவத் கைங்கரியத்தோடு இணைந்து வைஷ்ணவ கைங்கரியத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு பக்தன் தனது ஆச்சாரியருக்கும் சக வைஷ்ணவர்களுக்கும் சேவை செய்வதில் மிகுந்த முனைப்புடன் இருக்க வேண்டும். அத்தகு மனப்பான்மையினை இராமானுஜரின் வாழ்விலும் அவரைச் சார்ந்த இதர பக்தர்களின் வாழ்விலிருந்தும் சில உதாரணங்களை வைத்து அறிவோமாக. திருக்கச்சி நம்பிகள் புரிந்த வைஷ்ணவ சேவை 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 காஞ்சிபுரத்தில் இராமானுஜர் வாழ்ந்த சமயத்தில் வரதராஜ பெருமாளுக்கு திருக்கச்சி நம்பிகள் (காஞ்சிபூர்ணர்) என்ற மாபெரும் பக்தர் தினந்தோறும் சாமரம் வீசும் சேவையை ஏற்றிருந்தார். வரதராஜ பெருமாளுடன் அவர் சகஜமாக பேசக்கூடியவர், அதனால...