Skip to main content

பாரிஜாத மலரின் கதை

 


சத்தியபாமாதுவாரகையிலுள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முக்கிய ராணிகளுள் ஒருத்தி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றபின், அவருடைய அரண்மனையைக் காண சத்தியபாமாவுடன் சென்றார். சக்தியபாமாவுடன் அவர் இந்திரலோகத்திற்கும் சென்றார். அங்கு சசிதேவி அவளை வரவேற்று தேவர்களின் தாயான அதிதிக்கு அறிமுகம் செய்து வைத்தாள். சக்தியபாமாவிடம் மிகவும் திருப்தியடைந்த அதிதி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் இருக்கும்வரை மாறாத இளமையோடு இருக்கும் வரத்தை அவளுக்கு அளித்தாள். பிறகு ஸ்வர்கலோகங்களில் உள்ள, தேவர்களுக்கே உரிய தனிப்பட்ட உரிமைகளைக் காட்டுவதற்காக அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள். சத்தியபாமா பாரிஜாத மலரைக் கண்டதும், அச்செடியை துவாரகையிலுள்ள தன் அரண்மனையில் வைத்து அலங்கரிக்க விரும்பினாள். பிறகு துவாரகைக்குத் திரும்பியதும், பாரிஜாத மலரைப் பற்றிய தமது விருப்பத்தை கணவனிடம் தெரிவித்தாள். சத்தியபாமாவின் அரண்மனை முக்கியமாக அரிய நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் மிகவும் உஷ்ணமான கோடைக் காலத்திலும் கூட அரண்மனையின் உட்புறம் குளிர் சாதனம் பொருத்தியதுபோல் குளுமையாகவே இருந்தது. அவளது அரண்மனையை அவள் பல்வேறு கொடிகளால் அலங்கரித்தாள். அது, எல்லாவகையிலும் உயர்ந்தவரான அவளது கணவர் அங்கிருப்பதையே பறை சாற்றியது. ஒருமுறை தன் கணவருடன் திரௌபதியைச் சந்தித்த அவள், கணவரை திருப்திப்படுத்தும் வழிமுறைகளில் திரௌபதியிடமிருந்து அறிவுரைகளைப் பெற ஆவல்கொண்டாள். இந்த விஷயத்தில் திரௌபதி கைதேர்ந்தவளாக இருந்தாள். ஏனெனில் அவளுக்கு பஞ்ச பாண்டவர்கள் கணவன்களாக இருந்தனர். அவர்கள் ஐவரும் அவளிடம் மிகவும் திருப்தி அடைந்திருந்தனர். திரௌபதியிடமிருந்து அறிவுரைகளைப் பெற்றபின், அவளுக்கு நல்லாசிகளை வழங்கி விட்டு சத்தியபாமா துவாரகைக்குத் திரும்பினாள். அவள் சத்ராஜித்தின் புதல்வியாவாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவுக்குப்பின், அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றபோது சத்தியபாமாவும், ருக்மணியும் உட்பட எல்லா ராணிகளும் உணர்ச்சிவசத்துடன் பகவானை எண்ணி மனங்கலங்கினர். அவளது வாழ்வின் இறுதி கட்டத்தில், கடுந்தவத்தை மேற்கொள்ள அவள் காட்டுக்கு சென்றாள்.


சத்தியபமா ஸ்வர்க லோகங்களிலிருந்து பாரிஜாத மலரை பெற்று வரும்படி தன் கணவரைத் தூண்டினாள். பகவானும், மனைவியை திருப்திப்படுத்த கேட்ட பொருளைக் கொண்டுவரும் ஒரு சாதாரண கணவனைப் போல், பலாத்காரமாக தேவர்களிடமிருந்து அதைப் பெற்றுத் தந்தார். ஏற்கனவே விளக்கியதைப் போல், பல மனைவிகளை மணந்து கொண்டு, அவர்களது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் பகவானுக்கு இல்லை. ஆனால் பகவானுக்கு எல்லா சௌகரியங்களையும் செய்து தருவதெனும் மிகச்சிறந்த பக்தித் தொண்டை ராணிகள் ஏற்றுக் கொண்டதால், பகவானும் ஒரு பூரணமான, உண்மையான கணவரைப் போலவே நடந்து கொண்டார். எந்த மண்ணுலகவாசியும் ஸ்வர்க லோகங்களிலிருந்து எதையும் பெற கற்பனையும் செய்து பார்க்க முடியாது. அவை, குறிப்பாக பாரிஜாத மலர்கள், தேவர்களின் உபயோகத்திற்காகவே உள்ளவையாகும். ஆனால் அவர்கள் பகவானின் விசுவாசமுள்ள மனைவிகளாக இருப்பதால், ஸ்வர்கவாசிகளுடைய மனைவிகளின் தனிப்பட்ட உரிமைகளையும் அவர்கள் அனைவராலும் அனுபவிக்க முடிந்தது. அதாவது, பகவானுடைய சிருஷ்டியிலுள்ள அனைத்திற்கும் அவரே உரிமையாளர் என்பதால், பிரபஞ்சத்தின் எப்பகுதியிலிருந்தும், எந்த அபூர்வமான பொருளையும் துவாரகையின் ராணிகள் பெறுவதில் பெரும் ஆச்சரியம் எதுவும் இல்லை.



ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.14.37 / பொருளுரை )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...