Skip to main content

Posts

Showing posts from September, 2022

விருந்தாவனத்தில் வசிப்பது என்றால் என்ன ?

கிருஷ்ண பக்தர்கள் எப்போதும் விருந்தாவனத்தில் வசிக்க விரும்புகிறார்கள். ஆனால் விருந்தாவனத்தில் வாழ்வது என்றால் என்ன? மேலும் அணைவரும் விருந்தாவனத்தில்  வாழ்வது சாத்தியமா ? என்பதை இனி விளக்கமாக கான்போம் விருந்தாவனத்தில் வசிப்பது என்றால் என்ன ? விருந்தாவனத்தில் வசிப்பது என்பது அங்கு உடல் ரீதியாக இருப்பது மட்டும் அல்ல. ஒருவன் விருந்தாவனத்தில் உடல் ரீதியாக தங்கியிருந்தாலும், பக்தியில் ஈடுபடாமல், பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவன் உண்மையில் விருந்தாவனத்தில் வசித்து என்ன பயன் ? இப்படிப்பட்ட மனிதர்கள் உண்மையில் விருந்தாவணத்தில் வசிக்கவில்லை. ஆனால் ஒருவன் விருந்தாவனத்திருக்கு வெளியே எப்போதும் கிருஷ்ணரின் நாமங்களை உச்சரித்துக்கொண்டும், பல்வேறு கிருஷ்ண உணர்வு செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பானாயின், அவன் உண்மையில் விருந்தாவனத்தில் வசிக்கிறான். ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார், "ஒரு தூய பக்தன் தனது பக்தித் தொண்டினால் , விருந்தாவனத்தின் சூழலை எங்கு வேண்டுமானாலும் உருவாக்க முடியும்." இங்கே பிரபுபாதர் பக்தி தொண்டின் முக்கியத்துவத்தையும், நாம் தொடர்ந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டிருந்தால்,...

கிருஷ்ண பக்தியை எளிதாக மேற்கொள்வது எவ்வாறு?

கிருஷ்ணர் கூறுகிறார், அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு இலையோ, பூவோ, பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.(பகவத் கீதை 9.26) பகவத் கீதை 9.26 ல் எவ்வாறு  கிருஷ்ண பக்தியை, எளிதாக பயிற்சி செய்து அதன் மூலம் கிருஷ்ணரை எவ்வாறு அடைவது என்பதை விளக்குகிறது. இந்த ஸ்லோகத்தில் கொடுக்கப்பட்ட செயல்முறை மிகவும் எளிமையானது மற்றும் இதை யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்ய முடியும். அது எவ்வாறு என்று மேலும் விவரமாக காண்போம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நமது செயலின் நோக்கத்தைக் மட்டுமே காண்கிறார் பிரபஞ்சம் முழுவதும் அணைத்தையும் படைத்த பரம புருஷ பகவானான கிருஷ்ணருக்கு நாம் பூரணமாக எதையும் அளிக்க முடியாது. ஏனெனில் அணைத்தும் நாம் அவரிடம் இருந்து பெற்றுள்ளோம். அதனால் நாம் அர்ப்பணிக்கின்ற பொருட்கள் மற்றும் அதன் மதிபை பற்றி அவர் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை, ஆனால் நாம் எந்த நோக்கத்துடன் அந்தப் பொருட்களை அவருக்கு வழங்குகிறோம் என்பதில் அவர் ஆர்வம் காட்டுகிறார். கிருஷ்ணர் பரம புருஷர். முழு படைப்பிலும் உள்ள அனைத்தையும் அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். அவர் தன்னிறைவு பெற்றவர். எனவே, அவருக்கு நம்மிடம் உள்ள எதுவும் த...

தனிப்பட்ட உணர்விற்கும் பரம உணர்விற்கும் இடையிலான வேறுபாடு

  யதா ப்ரகாஷ யத் - யேக :  க்ருத்ஸ்னம் லோகம் இமம் ரவி : க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்னம்   ப்ரகாஷ யதி பாரத பரதனின் மைந்தனே, ஒரே ஒரு சூரியன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப் போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றான். பொருளுரை: உணர்வைப் பற்றி பல்வேறு கொள்கைகள் இருக்கின்றன. இங்கே பகவத் கீதையில் சூரியனும் சூரியக் கதிர்களும் உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஓரிடத்தில் அமைந்துள்ள சூரியன் அகிலம் முழுவதையும் பிரகாசப்படுத்துவதைப் போல, சிறு துகளாகிய ஆன்மீக ஆத்மா, உடலின் இதயத்தில் அமைந்திருந்தாலும் உணர்வின் மூலம் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றது. எனவே, சூரியக்கதிர் அல்லது வெளிச்சமானது சூரியன் இருப்பதற்கு சாட்சியாக விளங்குவதைப் போல, உணர்வானது ஆத்மா இருப்பதற்கு சாட்சியாக விளங்குகின்றது. உடலில் ஆத்மா இருக்கும்பொழுது உணர்வானது உடல் முழுவதும் காணப்படு கின்றது, ஆத்மா உடலிலிருந்து நீங்கியவுடனேயே உணர்வு எதுவும் இருப்ப தில்லை. அறிவுள்ள எந்த மனிதனாலும் இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, உணர்வு என்பது ஜ...

பௌதிக வாழ்வின் துன்பத்தை தொடரச் செய்வது அறியாமையாகும்

 

அறிவை பக்குவப்படுத்துவதில் பதினெட்டு முறைகள்

 

ஶ்ரீமதி ராதா ராணி

 

ஶ்ரீமதி ராதா ராணி

 

ஶ்ரீமதி ராதா ராணி

 

ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்

  ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்  🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 தேவீ க்ருஷ்ண-மயீ ப்ரோக்தா ராதிகா பர-தேவதா ஸர்வ-லக்ஷ்மீ-மயீ ஸர்வ- காந்தி: ஸம்மோஹினீ பரா “திவ்ய தேவதையான ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடி மறுபாகமாவாள், எல்லா லக்ஷ்மி-கணங்களுக்கும் அவளே மையமாவாள்.   எல்லாரையும் வசீகரிக்கும் முழுமுதற் கடவுளை வசீகரிப்பதற்குத் தேவையான எல்லா வசீகரமும் பொருந்தியவள். அவளே பகவானின் அந்தரங்க சக்திகளில் உயர்ந்தவளாவாள்." (பிருஹத்-கௌதமீய-தந்த்ர) “ராதா கிருஷ்ண தத்துவம் முக்தி பெற்ற நபர்களால் அறியப்பட வேண்டியதாகும், கட்டுண்ட ஆத்மாக்களால் அல்ல. நாம் முக்தர்களாக மாறும் அந்த நிலைக்காக காத்திருப்போம். அப்போது நம்மால் ராதா-க்ருஷ்ண-ப்ரணய விக்ருதிர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், ராதையும் கிருஷ்ணரும் பௌதிகத் தளத்தைச் சார்ந்தவர்கள் அல்ல... கிருஷ்ணரை சாதாரண ஆண் என்றோ, ராதையை சாதாரண பெண் என்றோ நாம் கருதக் கூடாது.   அவர்களே பரம பூரண உண்மை. ஆனால் அந்த பூரண உண்மையில், ஆனந்த சக்தி உள்ளது, அது ராதா-கிருஷ்ணரின் லீலைகளில் வெளிப்படுகிறது." 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆...