Skip to main content

ஆத்மாவை மறைக்கும் ஐந்து வகையான அகஙகாரங்கள்

 



கிருஷ்ணா புத்தகத்தில் ஸ்ரீல பிரபுபாதா, ஆத்மாவை மறைக்கும் ஐந்து வகையான அகஙகாரங்களை விளக்குகிறார்; “உடலுக்குள் ஐந்து பிரிவுகளைக் கொண்ட வாழ்வு நிலைகள் உள்ளன. அவை அன்ன-மயம், ப்ராண-மயம் மனோ-மயம், விஞ்ஞான-மயம் மற்றும் ஆனந்த மயம் எனப்படுகின்றன. (இவை, தைத்திரீய உபநிஷத்ததின் பிரம்மாண்ட-வல்லியில் விவரிக்கபப்ட்டுள்ளன). வாழ்வின் துவக்கத்தில் ஒவ்வொரு ஜீவனும் உணவைப் பற்றிய உணர்வை மட்டுமே கொண்டுள்ளான். ஒரு குழந்தை அல்லது ஒரு மிருகம் நல்ல உணவைப் பெறுவதால் மட்டுமே திருப்தியடைகிறது. திருப்தியாக உண்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளன. இந்த உணர்வு நிலை, அன்ன-மயம் என்று அழைக்கப்படுகிறது. அன்னம் என்றால்உணவுஎன்று பொருள்படும். இதன்பிறகு உயிர் வாழ வேண்டும் என்ற உணர்வு நிலையில் ஒருவன் வாழ்கிறான். ஒருவனால் தன் வாழ்வை எந்த பாதிப்பும் அல்லது அழிவும் இல்லாமல் தொடர முடியுமானால், தான் மகிழ்ச்சியடைவதாக அவன் நினைக்கிறான். இந்நிலை, உயிர் வாழ் உணர்வு (ப்ராண-மயம்) என்று அழைக்கப்படுகிறது. இந்நிலைக்குப் பிறகு, ஒருவன் மனோ தளத்தில் இருக்கும் பொழுது அவ்வுணர்வு மனோ-மயம் என்று அழைக்கப்படுகிறது. பௌதிக நாகரிகமானது முக்கியமாக இம்மூன்று படிகளில் தான் அமைந்துள்ளது-அன்ன-மயம், ப்ராண-மயம் மற்றும் மனோமயம், நாகரிகமடைந்த மனிதர்களின் முதல் கவலை பொருளாதார முன்னேற்றமாகும். அடுத்த கவலை, அழிவை எதிர்த்து தற்காத்துக்கொள்வது, அடுத்ததாக வரும் உணர்வு மனோ தத்துவமாகும். அதாவது, வாழ்வின் முக்கியத்துவங்களைப் பற்றி தத்துவார்த்தமான அணுகுமுறை.


இத்தகைய தத்துவார்த்தமான அணுகுமுறையிள் படிப்படியான முன்னேற்றத்தினால் ஒருவன் புத்தி கூர்மையுள்ள படித்தரத்தை அடைந்து தான் ஜட உடலல்ல, ஆன்மீக ஆத்மா என்பதைப் புரிந்து கொள்ள நேர்ந்தால், அவன் விஞ்ஞான-மயம் என்ற நிலையில் இருப்பவானாகிறான். பிறகு ஆன்மீக வாழ்வின் பரிணாம வளர்ச்சியின் மூலம் அவன் பரமபுருஷரை, அல்லது பரமாத்மாவை அறியும் நிலைக்கு வருகிறான். பிறகு பகவானுடனான தனது உறவை விருத்தி செய்துகொண்டு, பக்தித் தொண்டில் அவன் ஈடுபடுவானாயின், அந்நிலை கிருஷ்ண உணர்வு (ஆனந்த-மயம்) நிலை என்று அழைக்கப்படுகிறது. ஆனந்தமயம் என்பது, அறிவும், நித்தியத் தன்மையும் நிறைந்த ஆனந்தமான வாழ்வாகும். ஆனநத-மயோப்யாஸாத் என்று வேதாந்த சூத்திரம் கூறுகிறது. அதாவது பரப்பிரம்மனும் (பரமபுருஷர்), அவருக்குக் கீழ்ப்பட்ட பிரம்மனும் (ஜீவராசிகள்) இயல்பாகவே ஆனந்த மயமானவர்கள். ஜீவ ராசிகள் நான்கு கீழ்நிலைகளான, அன்ன-மயம், ப்ராண-மயம், மனோ-மயம் மற்றும் விஞ்ஞான மயம் ஆகிய நிலைகளில் உள்ள வரையிலும், அவர்கள் பௌதிக சூழ் நிலையில் இருப்பவர்களாக கருதப்படுகின்றனர். ஆனால் ஆனந்த-மய நிலையை அடைந்த உடனேயே ஒருவன் முக்தியடைந்த ஆத்மாவாக ஆகிவிடுகிறான். இந்த ஆனந்த-மய நிலையானது பகவத்கீதையில் ப்ரஹ்ம-பூத நிலை என்று விவரிக்கப்படுகிறது.இந்நிலையில் கவலையோ, ஆசையோ இல்லை என்று அங்கு கூறப்படுகிறது. ஒருவன் எல்லா ஜீவராசிகளிடமும் சமமாக நடந்து கொள்ளும் பொழுது இந்நிலை துவங்குகிறது. பிறகு இது கிருஷ்ண உணர்வுப் படிக்கு விரிவடைகிறது. இக்கிருஷ்ண உணர்வு நிலையில் ஒருவர் பரம புருஷருக்குத் தொண்டு செய்ய விரும்புகிறார். பக்தித் தொண்டில் முன்னேற வேண்டும் என்ற இந்த ஆசை, பௌதிக இருப்பில் புலன் நுகர்விலுள்ள ஒருவனது ஆசைக்குச் சமமானதல்ல. அதாவது ஆன்மீக வாழ்விலும் ஆசை இருக்கிறது என்றாலும், அது தூய்மையான ஆசையாகும். நம்முடைய புலன்கள் தூய்மையடையும் பொழுது, அவை அன்ன-மயம், ப்ராண-மயம், மனோ-மயம் மற்றும் விஞ்ஞான-மயம் ஆகிய எல்லா பௌதிக நிலைகளிலிருந்து விடுபட்டு, மிக உயர்ந்த நிலையான ஆனந்த-மய நிலையில், அதாவது ஆனந்தமான கிருஷ்ண உணர்வு நிலையில் அவை நிலை பெறுகின்றன.


மாயாவதி தத்துவவாதிகள் ஆனந்த-மய நிலையை, பரமனுடன் இரண்டறக் கலக்கும் நிலையென்று கருதுகின்றனர். அவர்களுக்கு ஆனந்தமயம் என்றால், பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றாக மாறுவதாகும். ஆனால் உண்மியல் ஒருமை என்பது, பரமனுடன் இரண்டறக் கலந்து, தனது தனிப்பட்ட வாழ்வை ஒருவன் இழந்து விடுவதைக் குறிப்பதாகாது. ஆன்மீக இருப்பில் கலந்து விடுவதென்பது, பூரண நித்யத் தன்மையும், அறிவும் கொண்ட பரம புருஷடானான குண ஒற்றுமையை ஜீவராசி உணரும் நிலையாகும். ஆனால் பக்தித் தொண்டில் ஈடுபடும்பொழுதே உண்மையான ஆனந்தமயம் அடையப்படுகிறது. அது மத்-பக்திம் லபதே பராம் என்று பகவத்கீதையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பரமபுருஷருக்கும், கீழ்ப்பட்ட ஜீவராசிக்கும் இடையில் அன்புப் பரிமாற்றம் ஏற்படும் பொழுது தான் ப்ரஹ்ம-பூத ஆனந்த-மய நிலை முழுமையடைகிறது. ஒருவன் ஆன்நத-மயம் என்ற இந்த நிலைக்கு வர வேண்டும். இல்லையெனறில் அவனது சுவாதம் கொல்லனுடைய துருத்தியின் சுவாசத்திற்கு ஒப்பாகும். அவனது ஆயுள் ஒரு மரத்தின் ஆயுளுக்கு ஒப்பாகும். மேலும் அவன் தாழ்ந்த மிருகங்களான நாய், பன்றி, ஒட்டகம் போன்றவைகளைவிட எவ்விதத்திலும் சிறந்தவனல்ல.”



(ஸ்ரீமத்-பாகவதம் 10.87.17  / பொருளுரை )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆





ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆





ஹரே கிருஷ்ண!



ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Telegram செயலி



🔆🔆🔆🔆🔆🔆🔆



Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇



🔆🔆🔆🔆🔆🔆🔆



சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...