Skip to main content

"ஆத்மா" பிறப்பற்றவனும், நித்தியமானவனும், என்றும் நிலைத்திருப்பவனும், மரணமற்றவனும், மிகப் பழமையானவனுமாவான்



ஜாயதே ம்ரியதே வா கதாசின்

நாயம் பூத்வா பவிதா வா யூய:

அஜோ நித்ய: சாஸ்வதோயம் புராணோ

ஹன்யதே ஹன்யமானே சரீரே

ஆத்மாவிற்கு பிறப்போ, இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவன் இல்லாமற் போவதும் இல்லை. அவன் பிறப்பற்றவனும், நித்தியமானவனும், என்றும் நிலைத்திருப்பவனும், மரணமற்றவனும், மிகப் பழமையானவனுமாவான். உடல் அழிக்கப்படும் பொழுது அவன் அழிவதில்லை.” பௌதிக உடலின் காரணத்தால் உண்டாகும் சேதத்திலிருந்தும், மாற்றத்திலிருந்தும் விடுபட்டிருபூபதால், ஜீவாத்மா நித்தியமானதாகும். ஒரு மரமும், அதன் பழங்களும், மலர்களும் பற்றிய உதாரணம் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் இருக்கிறது. ஒரு மரம் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கிறது. ஆனால் பருவங்களின் மாற்றத்தினால் அதன் பழங்களும், மலர்களும் ஆறுவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன. இரசாயண சேர்க்கைகளினால் உயிரை உண்டாக்க முடியும் என்ற நவீன இரசாயண விஞ்ஞானிகளின் முட்டாள்தனமாக கொள்கையை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. சினை முட்டை மற்றும் விந்து ஆகியவற்றின் கலப்படத்தினால் ஒரு மனிதனுடைய ஜட உடல் பிறக்கிறது. ஆனால் சினை முட்டையும், விந்துவும் உடலுறவுக்குப் பிறகு ஒன்றாகக் கலக்கின்றன என்றாலும், அவ்வாறு கலக்கும் ஒவ்வொரு முறையும் கருத்தரிப்பதில்லை. அக்கலவையில் ஆத்மா புகுந்தாலொழிய ஒரு பெண் கருவுறுவது சாத்தியமில்லை. ஆனால் அக்கலவையில் ஆத்மா தஞ்சமடையும் பொழுது, உடலானது பிறந்து, இருந்து, வளர்ந்து மாற்றமடைந்து, நலிவடைந்து இறுதியில் மரணமடைகிறது. ஒரு மரத்தின் பழங்களும், மலர்களும் பருவ காலங்களில் வந்து போகின்றன. ஆனால் மரமோ அப்படியே நிற்கிறது. அதுபோலவே கூடுவிட்டு கூடுமாறும் ஆத்மா பல்வேறு உடல்களை ஏற்கிறது அந்த உடல் ஆறுவித மாற்றங்களுக்கு உட்படுகிறது என்றாலும், ஆத்மாவானாது, மாற்றமின்றி அப்படியே இருக்கிறது (அஜோ நித்ய: சாஸ்வதோயம் புராணோ ஹன்யதே ஹன்யமானே சரீரே). ஆத்மா நித்தியமானது. அது மாற்றமில்லாமல் அப்படியே இருக்கிறது. ஆனால் ஆத்மாவால் ஏற்றுக் கொள்ளப்படும் உடல்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன.

இருவகையான ஆத்மாக்கள் உள்ளன. ஒன்று பரமாத்மா, மற்றது ஜீவாத்மா. ஜீவாத்மாவில் பல்வேறு தேக மாற்றங்கள் உண்டாவது போலவே, பரமாத்மாவில் பல்வேறு யுகங்களின் சிருஷ்டிகள் உண்டாகின்றன. இது தொடர்பாக ஸ்ரீல மத்வாச்சார்யர் பின்வருமாறு கூறுகிறார்:

ஷட் விகாரா: சரீரஸ்ய
விஷ்ணோஸ் தத்-கதஸ்ய
தத்-அதீனம் சரீரம்
ஞாத்வா தன் மமதாம் த்யஜேத்

உடலானது ஆத்மாவின் புற அம்சம் என்பதால், ஆத்மா உடலைச் சார்ந்திருக்கவில்லை; மாறாக, உடல்தான் ஆத்மாவைச் சார்ந்துள்ளது. இவ்வுண்மையை அறிந்துளூள ஒருவன், தன் உடலின் பராமரிப்பைப் பற்றி அதிகமாக கவலைப்படக் கூடாது. உடலை நிலையாக அல்லது நிரந்தரமாகக் காப்பாற்றுவது சாத்தியமில்லை. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: சரீரிண:. (பகவத்கீதை 2.18) ஜட உடல் அழியக்கூடியது (அந்தவத்), ஆனால் உடலுக்குள் உள்ள ஆத்மாவோ நித்தியமானது (நித்யஸ்யோக்தா: சரீரிண:). பகவான் விஷ்ணுவும், அவரது பின்னப் பகுதிகளாகிய தனிப்பட்ட ஆத்மாக்களும் நித்தியமானவர்களாவார். நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம். பகவான் விஷ்ணு தலைமையான ஜீவனாவார். ஆனால் தனிப்பட்ட ஜீவராசிகளோ அவரது பின்னப் பகுதிகளாவர். பிரம்மாண்டான பிரபஞ்ச ரூபத்திலிருந்து, ஓர் எறும்பின் சிறிய உடல் வரையுள்ள எல்லா வகையான உடல்களும் அழியக் கூடியவையே. ஆனால் பரமாத்மாவும், ஜீவாத்மாவும் குணத்தில் சமத்துவமுடையவை என்பதால், நித்தியமானவையாகும்

(ஸ்ரீமத்-பாகவதம்  7.7.18 / பொருளுரை )



ஹரே கிருஷ்ண🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Telegram

🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


ஆன்மீக கதைகளை படிக்க 👇


Whatsapp :- 

🍁🍁🍁🍁🍁


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...