Skip to main content

ஶ்ரீ நவத்வீப தாமின் தோற்றம்

    .



பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்  எப்போதெல்லாம் அவதரிக்கிறாரோ அப்போதெல்லாம், அவரது புனித ஸ்தலம், தீர்த்தங்கள், பிரியமான நண்பர்கள். நித்யமான சேவகர்கள் மற்றும் அவரது உபகரணங்களும் அவருடன்  அவதரிக்கின்றனர், பகவானின் நித்ய வாசஸ்தலத்திலிருந்து அவரது லீலைகளில் பங்குகொள்ள அவதரிப்பதால் இந்த ஸ்தலங்களில் எவ்வித பேதங்களும் இல்லை. அதனால் இவ்விடம்  புனிதமான "தாமமாக"( புண்ணிய ஸ்தலமாக) கருதப்படுகிறது.


    பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்காகவும், அவரை கவர்ந்து இழுக்கவும் ஶ்ரீமதி ராதா ராணி தனிப்பட்ட முறையில் தனது பிரேமையால் உருவாக்கிய மிகவும் அற்புதமான  ஸ்தலம் இந்த நவதீபம்


    சிவபெருமான் பார்வதிக்கு நவத்வீப-தாமத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் போது இந்த அற்புதமான லீலைகளை விவரித்தார். "தாமரை மலரில் தேனீ எப்படி விளையாடிக் கொண்டு இருக்குமோ அது போல" "கிருஷ்ணர் விருந்தாவனத்தின் இனிமையான காட்டுத் தோப்புகளில் விரஜா என்ற கோபியுடன் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார். 


சகி (தோழி) ஒருத்தி மூலம் இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற , நிலவை  போன்ற முகத்தைக் கொண்டவரும், பெண் மானின் கண்களைக் கொண்டவருமாகிய ராதா கிருஷ்ணரை கண்டு பிடிப்பதற்காக அவசரமாக அந்த இடத்தை நோக்கி  ஓடினார். ஶ்ரீமதி ராதை அங்கு வருவதை கண்ட கிருஷ்ணர் திடீரென்று அங்கிருந்து மறைந்து விட்டார். அதே போல் விரஜா நதியாக மாறினாள். ஸ்ரீமதி ராதாராணி அங்கு வந்தபோது அவ்விருவரையும் அவரால் காண முடியவில்லை. விராஜாவிடமிருந்து கிருஷ்ணரை எப்படி கவர்வது என்பதைப் பற்றி கிருஷ்ணருடைய ஸ்மரணத்திலேயே இருந்த ராதாராணி எண்ணத் துவங்கினார்.


    "ஶ்ரீமதி ராதாராணி  தன்னுடைய பிரியமான சகிகள் அனைவரையுமே கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கிடையே ஒன்று திரட்டினார். மரங்கள், செடி கொடிகள் மேலும் ஆண் மற்றும் பெண் தேனீக்களால் அலங்கரிக்கப்பட்டு நிரம்பிய ஒரு அழகான இடத்தை உருவாக்கினார். ஆண் மற்றும் பெண் மான்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கே உலாவிக் கொண்டிருந்தன. மேலும் மல்லிகை, முல்லை மற்றும் மாலதி மலர்களின் நறுமணத்தால் அந்த இடம் நிரம்பியிருந்தது. துளசி வனத்தாலும் பல்வேறு ரம்மியமான இடங்களை  ராதையின் கட்டளையின்பேரில் உருவாக்கப்பட்டன. மேலும் வசந்த காலத்துடன் மன்மதனும் கூட நித்தியமாக அங்கேயே வாழ்கிறார். மேலும் மங்களகரமான கிருஷ்ணரின் நாமத்தை அங்கிருக்கும் பறவைகள் தொடர்ச்சியாக பாடிக் கொண்டிருக்கின்றன.


    "கிருஷ்ணரை கவர்வதற்காக வண்ணமயமான ஆடைகளை அணிந்திருந்த ராதை ஒரு அழகான மெல்லிசையை தன் புல்லாங்குழலை கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். கிருஷ்ணர் அந்த அழகான மெல்லிசையில் மயங்கி அந்த மயக்கம் ஏற்படுத்தும் மிகவும் ரம்மியமான இருக்கும் அந்த இடத்தில் தோன்றினார்.


    கிருஷ்ணரின் மனதை கவருபவரான ராதை, கிருஷ்ணர் அவ்விடத்தில் வந்துவிட்டதைக் கண்டதும் அவர் கைகளை பற்றியவாறு பிரேமத்தில் மூழ்கினார். ராதையின் மனதை அறிந்த பகவான் கிருஷ்ணர் ராதாபிரேமத்தில் வசப்பட்டு குரல் அடைபட்ட நிலையில் பேசினார்.


        "ஓ பிரேம மயி ராதே ! நீயே என் வாழ்வு. உன்னைவிட எனக்கு மிகவும் பிரியமானவர் எவருமில்லை. ஆகவே உன்னை ஒருபோதும் விடமாட்டேன்.  தேனீக்கள் ரீங்காரம் கொண்டாடும்  புத்தம் புது சோலைகள், பூத்துக்குலுங்கும் மலர்கள், பலவிதமான கனி மரங்கள் போன்ற இந்த அற்புதமான இடத்தை எனக்காகவே நீ உருவாக்கி இருக்கிறாய். இந்த இடத்தில் உன்னுடன் தங்கி நான் இந்த இடத்தை மாற்றுகின்றேன். புதிய (நவ) விருந்தாவனம் என்று பக்தர்கள் இந்த இடத்தை புகழ்வார்கள். இந்த இடமானது த்வீபத்தை (தீவு) போல இருப்பதால் சான்றோர்கள் இதனை நவத்வீபம் என்று அழைப்பார்கள். எல்லா புனித இடங்களும் என்னுடைய கட்டளையினால் இங்கு தோன்றியிருக்கும். என்னுடைய மகிழ்ச்சிகாகவே இந்த இடத்தை நீ உருவாக்கியதால் நான் நித்தியமாக இந்த இடத்தில் வீற்றிருப்பேன். இந்த இடத்திற்கு வந்து நம்மை வழிபடும் மக்கள் சகிகளின் மனோபாவத்தில் நித்தியமான நம் சேவையை அடைவார்கள். அன்பு இராதையே, இந்த இடமும் பிருந்தாவனத்தை போல மிகவும் தூய்மையானதாகும். இந்த இடத்திற்கு ஒரே முறை வந்தாலும் கூட எல்லா இடங்களுக்கும் சென்ற பலனை ஒருவர் பெறுகிறார். நம்மை திருப்திப்படுத்தும் ஆன்மீக சேவையை விரைவாக ஒருவர் இதன்மூலம் பெறுவார்."


    "ஓ பார்வதி, நவத்வீபம் தோன்றியதற்கான காரணத்தை நான் உனக்கு விளக்கி இருக்கிறேன். மனிதர்கள் இதைக் கேட்கும் பொழுது அவர்களுடைய அனைத்து பாவங்களும் களையப்பட்டு அவர்களின் தூய பக்தி தொண்டு உறுதிபடுத்தபடுகிறது. எவரொருவர் அதிகாலையில் எழுந்து கெளரங்கரின் மீதிருக்கும் பக்தியினால் இந்த நவத்வீபத்தின் தோற்றத்தை பற்றிய கதையை படிக்கிறாரோ அல்லது கேட்கிறாரோ  நிச்சயமாக அவர் கௌரங்கரை அடைய முடியும்." என்று பகவான் சிவன் கூறினார்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram

🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 

🍁🍁🍁🍁🍁

https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...