Skip to main content

நரசிம்மபள்ளி அல்லது தேவபள்ளி

 



நரசிம்மபள்ளி அல்லது தேவபள்ளி


🔆🔆🔆🔆🔆


ஸ்ரீ நவத்வீப தாம் மஹாத்மியத்தின் பரிக்கிரமா காண்டத்தில் தேவபள்ளி என்ற மிகவும் சக்திவாய்ந்த இடத்தை பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது


ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி மற்றும் ஸ்ரீவாச தாகூரருடன் சுவர்ண விஹாருக்கு சென்றபிறகு பகவான் நித்தியானந்தர் நரசிம்மபள்ளி என்னும் கிராமத்திற்கு முன்னேறிச் சென்றார். இந்த இடத்தை நரசிம்மபள்ளி என்றும்  தேவபள்ளி என்றும் அழைப்பார்கள். 


சத்ய யுக காலத்திலிருந்தே பகவான் நரசிம்மதேவருக்கென்று பிரத்தியேகமான ஒரு ஆலயம் இந்த கிராமத்தில் இருக்கிறது என்பதை பகவான் ஶ்ரீ நித்யானந்தர், விளக்கினார். தன்னுடைய பிரியமான பக்தனான பிரகலாதனின் மீது கொண்ட பெரும் கருணையால் , பிரஹலாதருக்கு அதிகமான தொல்லைகளைக் கொடுத்து வந்த அவனுடைய தந்தையான ஹிரண்யகசிபுவை பகவான் நரசிம்மர் வதம் செய்த பின்னர் இந்த இடத்திற்கு ஓய்வெடுக்க வருகிறார் என்பதை அறிந்த பிரம்மா உட்பட அனைத்து தேவர்களும் அந்த இடத்தில் தங்களுக்குத் தேவையான இல்லங்களை அமைத்து ஒரு கிராமத்தையே உருவாக்கினார். மந்தாகினி நதியில் கரையோரமாக இருக்கும் சிறு குன்றின் மீது தங்களுடைய இல்லங்களை அமைத்து பகவானின் சேவையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போதிருந்து நவத்வீப தாமத்தில் இருக்கும் நரசிம்ம ஷேத்திரம் என்று இந்த இடத்தை அழைக்கிறார்கள். இந்த இடம் உள்ளத் தூய்மைக்கு சிறந்த இடம் என்று சாஸ்திரங்கள் விவரிக்கின்றன. பிரம்மா. சூரியதேவன். கணேசன் மற்றும் இந்திரன் போன்றவர்களுடைய இல்லங்கள் சிறு சிறு குன்றுகளாக முன்பு இங்கு இருந்தது. கற்களால் நூற்றுக்கணக்கான  இல்லங்களை விஷ்வகர்மா கட்டினார். காலப்போக்கில மந்தாகினி நதி வறட்சியடைந்து அங்கிருந்து அனைத்து இல்லங்களும் அழிக்கப்பட்டன தற்போது உங்களால் சிறு சிறு குன்றுகளை காண முடியும் ஆனால் அங்கு சுற்றி இருக்கும் இடத்தில் பல கற்களை அதாவது தேவர்களுக்கு உருவாக்கப்பட்ட கற்களை காண முடியும். இந்த ஆலயத்தின் அருகே இருக்கும் குளத்தில் தான் பகவான் நரசிம்மர் தன்னுடைய கைகளை கழுவிய தாக கூறப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு உயர்ந்த நபர் அல்லது அரசன் இங்கு வந்து பகவான் நரசிம்மருடைய கருணையால் இங்கே நரசிம்ம பகவானுக்கென்று ஒரு ஆலயத்தை எழுப்பி அவருடைய வழிபாடுகளை மீண்டும் துவக்குவார். 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...