Skip to main content

ஒரு புலி ஒரு மிருகத்தைத் தாக்கிக் கொன்று தின்றாலும் அது பாவமாகாது, ஆனால் . . .

 


யஸ் த்வ இஹ வை பூதானாம் ஈஸ்வரோபகல்பித வ்ருத்தினாம் அவிவிக்த - பரவ்யதானாம் ஸ்வயம் புருஷோபகல்பித - வ்ருதத்தில் லிலிக் பர - வ்யதோ - வ்யதாம் ஆசரதி பரத்ராந்தகூபே தத் - அபி ராஹேண நிபததி தத்ர ஹாஸௌ தைர் ஜந்துபி பஸு - ம்ருக - பக்ஷி - ஸரீஸ்ருபைர் மஸக யூகா மத்குண மக்ஷிகாதிபிர் யே கே சாபித்ருக்தாஸ் தை: ஸர்வதோ () பித்ருஹ்யமாணஸ் தமஸி விஹத - நித்ரா நிர்வ்ருதிர் அலப்தாவஸ்தான: பரிக்ராமதி யதா ருஸரீரே ஜீவ:


மொழிபெயர்ப்பு

பரம புருஷ பகவானின் ஏற்பாட்டின் பேரிலேயே இழிந்த உயிர்களான மூட்டைப் பூச்சிகளும், கொசுக்களும் மனிதன் மற்றும் விலங்கின் இரத்தத்தினை உறிஞ்சி வாழ்கின்றன. இவ்விழிந்த பூச்சிகளுக்குத் தாம் மனிதனைக் கடிப்பதினால் அவன் வேதனை அடைகிறான் என்பது தெரியாது. ஆயினும் முதல்தர மனிதர்களான அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் அறிவு வளர்ச்சி பெற்றவர்கள் அதனால் கொல்லப்படுவது எத்துணை துன்பமானது என்பதை அவர்கள் நன்கறிவர். பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் எந்தவித பேதமுற்ற இழிந்த ஜந்துக்களைக் கொன்றாலோ அல்லது துன்புறுத்தினாலோ அவன் நிச்சயம் பாவம் செய்தவனேயாவான். பரமபுருஷ பகவான் அவனை அந்த கூபம் என்னும் நரகத்தில் தள்ளுவதின்மூலம் தண்டிக்கிறார். அங்கே அவன், அவனால் முன்பு துன்புறுத்தப்பட்ட பறவைகள், ஈக்கள் போன்றவற்றினால் தாக்கப்படுகிறான். அவை அவனை எல்லா பக்கங்களிலும் தாக்கி அவன் நித்திரை சுகத்தினைத் திருடிக் கொள்கின்றன. ஒய்வில்லாத காரணத்தினால் அவன் இருளில் தொடர்ந்து இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கின்றான். இவ்வாறு அந்த கூபத்தில் அவன் அனுபவிக்கும் துன்பமானது இழிந்த பூச்சிகள் அனுபவிக்கும் துன்பம் போன்றதாகும்.


பொருளுரை

இச்சுலோகத்தின் உபதேசத்திலிருந்து மனிதர்களைத் துன்புறுத்துவதற்காக ஜட இயற்கையினால் படைக்கப்பட்ட இழிந்த விலங்குகள் தண்டனைக்கு ஆளாவதில்லை என்று நாம் பாடம் கற்கிறோம். மனிதன் உணர்ச்சியில் வளர்ச்சி பெற்றிருப்பதினால் கண்டனத்திற்காளாகாது வர்ணா ஸ்ரம தர்மங்களுக்கு எதிராக அவனால் எதும் செய்ய முடியாது. பகவத்கீதையில்(4.13) கிருஷ்ணர், “சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஸஅதாவது ஜட இயற்கையின் முக்குணங்களுக்கேற்பவும், செய்கைகளுக்கேற்பவும் என்னால் நான்கு மனித குலங்கள் படைக்கப்பட்டனஎன்று குறிப்பிடுகிறார். இவ்வாறு எல்லா மனிதர்களும் அந்தணர், சத்திரியர், வைசியர் சூத்திரர் என்று நான்காகப் பிரிக்கப்படவேண்டும். மேலும் அவர்கள் அவர்களுக்குரிய ஒழுங்கு முறைகளுக்கேற்ப செயல்படவும் வேண்டும். அவர்களால் அவர்களது குறிப்பிட்ட ஒழுங்கு முறைவிதிகளிலிருந்து மாறிச் செல்ல முடியாது. இவற்றில் ஒன்று, மனிதர்களைத் துன்புறுத்திய போதிலும், அவ்விலங்குகளுக்கு ஒருவன் தீமை செய்யக் கூடாது என்பதாகும். ஒரு புலி ஒரு மிருகத்தைத் தாக்கிக் கொன்று தின்றாலும் அது பாவமாகாது, ஆனால் பகுத்தறிவுடைய ஒரு மனிதன் இதனைச் செய்தால் அவன் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவான். இதனையே ஒரு மனிதன் தனது வளர்ச்சி பெற்ற அறிவினை பயன்படுத்தாது மிருகத்தைப் போல் நடந்து கொண்டால் நிச்சயம் அவன் பல்வேறு நரகங்களில் துன்புற வேண்டியதிருக்கும் என்றும் கூறலாம்.



(ஸ்ரீமத்-பாகவதம் 5.26.17  / பொருளுரை )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...