Skip to main content

வேத சடங்குகளை விட ஹரி நாம சங்கீர்த்தனம் முக்கியமானது.

 


பகவானின் புனித நாமத்தை ஜபிப்பதாலேயே மிகவுயர்ந்த வெற்றியைச் சுலபமாக ஒருவனால் அடைந்துவிட முடியும் என்பதால், பல வேதக் கிரியைகள் இருப்பதும் அவற்றால் மக்கள் கவரப்படுவதும் ஏன் என்று ஒருவர் கேட்கக்கூடும்.  பகவத்கீதை (15.15) பின்வருமாறு கூறுகிறது, வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை அணுகுவதே வேதக் கல்வியின் உண்மையான நோக்கமாகும். துரதிர்ஷ்டவசமாக, வேத யக்ஞங்களின் பகட்டில் மதிமயங்கியுள்ள அறிவிலிகள், ஆடம்பரமாக யாகங்கள் செய்யப்படுவதைக் காண விரும்புகின்றனர். வேத மந்திரங்கள் ஓதப்படுவதையும், இத்தகைய சடங்குகளுக்கு ஏராளமான பொருள் செலவிடப்படுவதையும் இவர்கள் விரும்புகின்றனர். சில சமயங்களில் இத்தகைய புத்தியற்ற மனிதர்களை திருப்திப்படுத்துவதற்காக நாம் வேதக் கிரியைகளை அணுஷ்டிக்க வேண்டியுள்ளது. பிருந்தாவனத்தில், பெரிய கிருஷ்ண பலராமர் ஆலயம் ஒன்றை சமீபகாலத்தில் நாம் நிறுவினோம். அப்பொழுது உள்ளூர் பிராமணர்களால் நடத்தப்பட்ட வேதக் கிரியைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டது. ஏனெனில் பிருந்தாவன வாசிகள், குறிப்பாக ஸ்மார்த்த - பிராமணர்கள் ஐரோப்பியர்களையும், அமெரிக்கர்களையும் உண்மையான, தகுதியுடைய பிராமணர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்விதமாக நாம் அதிகமாகச் செலவாகும் யக்ஞங்களைச் செய்ய பிராமணர்களை ஈடுபடுத்த வேண்டியிருந்தது. ஒருபுறம் இந்த யக்ஞங்கள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் என இயக்கத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள், மிருதங்களுடன் உரக்க சங்கீர்த்தனத்தைச் செய்து கொண்டிருந்தனர். வேதக் கிரியைகளை விட சங்கீர்த்தனம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாம் கருதுகிறோம். ஒரே சமயத்தில் கிரியைகளும், சங்கீர்த்தனமும் நடந்தன. கிரியைகள், சுவர்க்க லோகங்களுக்கு ஏற்றம் பெற, வேதச் சடங்குகளில் நாட்டம் கொண்டவர்களுக்கு உரியவையாகும் (ஜடீ - க்ருத - மதிர் மது - புஷ்பிதாயாம்). ஆனால் சங்கீர்த்தனமோ, பரமபுருஷரை திருப்திப்படுத்துவதில் நாட்டம் ோண்டுள்ள தூய பக்தர்களுக்கு உரியவையாகும். சங்கீர்த்தனத்தை மட்டும் நாம் செய்திருப்போம். ஆனால் பிருந்தாவன வாசிகள் இந்த பிராணப் பிரிதஷ்டைச் சடங்கை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். இங்கு விளக்கப்பட்டுள்ளது போல், வேதச் சடங்குகள், வேதங்களின் மலர்ச் சொற்களால் புத்தி மழுங்கிப் போனவர்களுக்கு உரியவையாகும்.


குறிப்பாக இக்கலியுகத்தில், சங்கிர்த்தனம் ஒன்றே போதுமானதாகும். உலகின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள நமது ஆலயங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஆலயத்திலுள்ள விக்கிரகங்களின் முன், குறிப்பாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் முன் சங்கீர்த்தனத்தைத் தொடர்ந்து செய்வார்களானால், அவர்கள் எப்பொழுதும் பூரணமானவர்களாகவே இருப்பார்கள். வேறெதையும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆயினும், பழக்கங்களையும், மனதையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்வதற்கு விக்கிரக வழிபாடும், மற்ற கட்டுப்பாட்டு விதிகளும் தேவைப்படுகின்றன. ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி கூறுகிறார்: பூரணத்துவம் அடைவதற்குச் சங்கீர்த்தனம் ஒன்றே போதும் என்றாலும், பக்தர்கள் பரிசுத்தமாகவும், தூய்மையாகவும் இருப்பதற்கு விக்கிரக வழிபாடும் (அர்ச்சனா) தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே ஒரே சமயத்தில் இவ்விரு முறைகளையும் ஒருவன் பின்பற்ற வேண்டும் என்று ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகுரர் சிபாரிசு செய்துள்ளார். விக்கிரக வழிபாடு, சங்கீர்த்தனம் ஆகிய இரண்டையும் செய்வதெனும் அவரது கொள்கையை நாம் உறுதியாகப் பின்பற்ற வேண்டும். இதை நாம் தொடரவேண்டும்.


ஶ்ரீமத் பாகவதம் 6.3.25 - பொருளுரை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...