Skip to main content

பக்தவத்சலர் பிரபு ஜகந்நாதர்



கீழ்கண்ட லீலைகள் ஶ்ரீ ராஜாபூர் ஜகந்நாதரின் கோயிலை இஸ்கான் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்ற பிறகு நடந்தது.


பாழடைந்த நிலையில் இருந்த ராஜாபூர் ஜகந்நாதரின் கோவிலை நன்றாக பராமரிக்கவும் ஜகந்நாதரின் நித்திய பூஜைகள், நைவேத்தியம் போன்றவைகள் தடையின்றி நடைபெற ஜகந்நாதரின் கட்டளை பேரில் இஸ்கான் அமைப்பிற்கு கோவில் உரிமையாளர் தர தீர்மானித்தார்.


இஸ்கான் அமைப்பு பாதுக்காக்கும் பொறுப்பேற்ற சமயம்  ராஜாபூர் கோவிலில் சமையல் செய்வதற்கு ஏற்ற இடவசதி இல்லாமல் இருந்ததாகையால், இஸ்கான் அமைப்பின் மற்றொரு கோவில்லான ஸ்ரீ மாயாபூர் ராதா மாதவரின் சந்த்ரோதய மந்திரில் அதிகமாக சமைத்து பின்னர்,  ஒரு பூஜாரி அதனை ஒரு உணவு பாத்திரத்தில் வைத்து கொண்டு மிதிவண்டியில் ஜகந்நாதர் கோயிலுக்கு எடுத்து வருவார். ஒரு நாள் நைவேத்தியத்திற்கான  உணவு வகைகளை (ராஜ போக்)   தயார் செய்த பிறகு, தான் துளசி இலையை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்தார்.  அப்போது ராஜாபூர் ஜகந்நாதரின் கோவில் மிகவும் பழையதாகவும்   சிதைந்த நிலையில் இருந்தமையால். கதவுகளை சரியாக மூட முடியாது. அவர் யோசிக்க ஆரம்பிதார் "நான் சென்று துளசி எடுத்து வருவதற்குள் சில குழந்தைகள் உள்ளே வந்து விடுவார்கள், இல்லையெனில் நாய்கள் உள்ளே வந்துவிடும்." என்று குழம்பிப்போனார். 


    ஆனால் பகவானின் நைவேத்தியம் நேரம் நெருங்கி விட்டதால் அவர் ஜகந்நாதரிடம் கூறினார் "எனது பகவானே! பிரபு ஜகந்நாதா ! பக்தர்களை காக்கும் பிரியமான பகவானே ! நீங்கள் துளசி இலை இல்லாத உணவு பதார்த்தங்களை ஏற்றுக் கொள்ள மாட்டீர் என்பதை நான் அறிவேன், ஆனால் சூழ்நிலையை புரிந்து கொண்டு, தயவு செய்து இதனை எற்றுக் கொள்ளவும்" என்றார். இவ்வாறாக அவர் பகவான் ஜகன்னாதருக்கு உணவை படைத்துவிட்டு, காயத்ரி மந்திரம் கூற சென்றார். தீபாராதனைங்கு  நேரம் வந்ததும், கதவை திறந்து, பிரசாதத்தட்டுகளை எடுக்க செல்லும் பொழுது, பத்து அங்குலம் உயரமுள்ள துளசி இலை உள்ள கிளை, சாதத்தின் நடுவில் இருந்ததை கண்டு பூஜாரி ஆச்சரியத்தில் மூழ்கினார். 



கருணாமூர்த்தியான பிரபு ஜகந்நாதரின் லீலையில் பூரித்த பூஜாரி,  ஜகந்நாத ஸ்வாமி கி ஜெய்!!  துளசி மஹாராணி கி ஜெய்!!  என கூறினார்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...