Skip to main content

கருணை



அதிகாலை பொழுதில் இமயமலைப் பகுதியில் உள்ள பத்ரிகாஸ்ரமத்தில் சூரியன் உதிக்கும் நேரம். அவ்வேளையில் வியாச முனிவர் சரஸ்வதி நதியில் குளித்து தனது நித்யானுஷ்டானங்களை முறையாக செய்த பின்னர், தனியாக அமர்ந்து தியானம் செய்தார். முக்காலமும் அறிந்த மகாமுனியான அவர் ஞான திருஷ்டியில் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும் அவரால் பார்க்க முடிந்தது. அப்போது  துவாபர யுகத்தின் முடிவு காலம் .  வெகுவிரைவில் கலியுகம் நெருங்கிக் கொண்டிருப்பதையும், கலியுகத்தில் பிறக்கப்போகும் மக்களிடம் பல்வேறு குறைகளைக் கண்டார்.



மாமுனிவர் வியாசர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சத்யாவேஷ  அவதாரம். கலியுக மக்களுக்கு நன்மை செய்ய நினைத்த அவர் "கலியுகத்தின் மக்கள் பெரும்பாலும் அற்ப ஆயுளுள்ளவர்களாகவும், சண்டைப் பிரியர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், அதிர்ஷ்டமற்றவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக எப்பொழுதும் அமைதியற்றவர்களாகவும் உள்ளனர் என்பதை கண்ட அவர், மனிதகுலத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வுகள் மற்றும் நல்வழிகள் வேதங்களில் மட்டுமே சிறப்பாக உள்ளது, ஆதலால், வேதங்களின் அறிவை  மிகவும் எளிமையான வடிவத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.



பின்னர் வியாச தேவர் வேதங்களை எழுத திட்டமிட்டார். முன்பு வேதங்கள் எழுத்து வடிவில் புத்தகங்களாக இல்லை.  சக்தி வாய்ந்த குருவிடம் இருந்து மாணவர்கள் வேதங்களை எளிமையாகக் கற்றுக் , அதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வார்கள். அவர்களின் கூர்மையான புத்திசாலித்தனமும், நல்ல நினைவாற்றலும் கொண்டிருந்ததே இதற்குக் காரணம். ஆனால் கலியுகத்தில் உள்ளவர்களுக்கு நினைவாற்றல் குறைவு. எனவே, கலியுக மக்களின்  நன்மைக்காக  வேத அறிவை எழுத்து வடிவில் அளிக்க  விரும்பினார்.



 சிருஷ்டியின் தொடக்கத்தில், பிரம்மா, நான்கு வேதங்களைப் தனது நான்கு வாய்களில் கூறி அருளினார். இந்த வேதங்களின் மந்திரங்கள் , பல்வேறு வகையான ரத்தினங்கள் வரிசைப்படுத்தப்படாமல் ஒர் இடத்தில் சேகரிக்கபட்டுள்ளதை போல இருந்தது .மேலும் பலவிதமான நகைகளை அவற்றின் நிறம் அல்லது அளவைப் பொறுத்து பல்வேறு குவியல்களாக வரிசைப்படுத்துவதை போல வியாசதேவர்  வேதங்களை நான்கு பிரிவுகளாக  ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வ வேதம். என்று வகைபடுத்தி பிரித்து தந்தார். அதன்பிறகு வியாசர் புராணங்களையும் மகாபாரதத்தையும் கதைகள் மூலம் மனிதகுலத்திற்கு அறநெறிகளைப் போதிக்க எழுதினார். எனவே, புராணங்களில் உள்ள வரலாறுகள் மற்றும் கதைகள் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுகின்றன.


பின்னர் வியாசர் தனது சீடர்களை வேதங்களின் பேராசிரியராக்கி, இந்த தெய்வீக அறிவைப் அணைவரும் கற்றுணரும் படி பரப்புங்கள்" என்று அறிவுறுத்தினார். பைல முனிவர் ரிக் வேதத்திற்கும், ஜைமினி முனிவர் - சாம வேதத்திற்கும், வைசம்பாயன முனிவர் யஜுர் வேதத்திற்கும், சுமந்து முனிவர் - அதர்வ-வேதத்திற்கும், மேலும் ரோமஹர்ஷண முனிவர் புராணங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த அறிஞர்கள் வேதங்களை சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து தங்கள் சீடர்கள் மற்றும் பேரறிஞர்கள் மூலம் அகிலத்தின் எல்லா திசைகளிலும் பரப்பினர்.



இக்கதை மூலம் நாம் கற்று கொள்ளும் பாடம்.:- கருணை 


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஒவ்வொருவரும் ஒருவரின் நலனுக்காக உழைக்கிறார்கள். ஆனால் இரக்கமுள்ளவர்கள் அனைவரின் நலனுக்காகவும் உழைக்கிறார்கள். வியாச முனிவர், பொறுப்பான வாழ்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் புத்தகங்கள் தருவதன் மூலம் உலகிற்கு நன்மை செய்ய விரும்பினார். இப்படிப்பட்ட தன்னலமற்ற ஞானிகள்தான் மனிதகுலத்தின் உண்மையான நண்பர்கள். பொதுவாக மக்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட அசௌகரியங்களைக் கூட அனுபவிக்க தயாராக இருக்கிறார்கள். அத்தகைய ஞானிகளிடமிருந்து கருணை உணர்வைக் கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவ முயற்சிக்க வேண்டும்.



தொடரும் . . . .


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...