Skip to main content

தூய பக்தனோருவன் குழப்பங்களை உண்டாக்குவதற்குப் பதிலாக, பகவானின் தாமரைப் பாதங்களை இதய பூர்வமாக ஏற்று இடைவிடாமல் பூஜிக்கிறான்.

 



பரம் பதம் வைஷ்ணவம் ஆமனந்தி தத்
யன் நேதி நேதீதி அதத் உத்ஸிஸ்ருக்ஷவ:
விஸ்ருஜ்ய தௌராத்மியம் அனன்ய-சௌஹ்ருதா
ஹ்ருதோபகுஹ்யார்ஹ- பதம் பதே பதே


மொழிபெயர்ப்பு

பரமபுருஷரான விஷ்ணுவுடன் அனைத்தும் சம்பந்தப்பட்டுள்ள, அந்த மிகவுயர்ந்த நிலையை ஆன்மீகிகள் அறிந்திருப்பதால், தெய்வீகமற்ற அனைத்தையும் விலக்கிவிட அவர்கள் விரும்புகின்றனர். எனவே பகவானோடு பரிபூரண இணக்கம் கொண்டுள்ள தூய பக்தனோருவன் குழப்பங்களை உண்டாக்குவதற்குப் பதிலாக, பகவானின் தாமரைப் பாதங்களை இதய பூர்வமாக ஏற்று இடைவிடாமல் அவற்றைப் பூஜிக்கிறான்.

பொருளுரை


பகவத் கீதையில், மத்-தாம (எனது வசிப்பிடம்) எனும் சொல் ஒரு சில தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருத்துப்படி, எல்லையற்ற ஆன்மீக வெளி ஒன்றுள்ளது. அதிலுள்ள உலகங்கள் வைகுண்டங்கள், அல்லது முழுமுதற் கடவுளின் வசிப்பிடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பௌதிக வானிற்கும் அதை மறைத்துள்ள ஏழு திரைகளுக்கும் மிகவும் தூரத்திலுள்ள அந்த ஆன்மீக வானத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ தேவையில்லை. அவ்வுலகங்கள் சுய ஒளியுடையவையாக இருப்பதைலும், பௌதிக சூரியன்களை விட அதிக ஒளியுள்ளவையாகவும் இருப்பதாலும் ஒளியூட்டுவதற்கு அங்கு மின்சாரம் தேவைப்பட வில்லை. முழுமுதற் கடவுளின் தூய பக்தர்கள் அவருடன் இணங்கி வாழ்கின்றனர். அதாவது அவர்கள் எப்பொழுதும் பகவானை அவர்களது ஒரே நம்பிக்கைக்குரிய நண்பராகவும், தங்கள் நலத்தில் அக்கறை கொண்டவராகவும் எண்ணுகின்றனர். பிரபஞ்சத்தின் தலைவராகிய பிரம்மாவின் அந்தஸ்து வரையுள்ள எந்த இகலோக ஜீவன்களைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு மட்டுமே வைகுண்ட லோகங்களைப் பற்றிய தெளிவானதொரு காட்சி இருக்க முடியுமென்பதில் சந்தேகமில்லை. அத்தகைய தூய பக்தர்கள் பரமபுருஷரால் பக்குவமான வழியில் நடத்தப்படுவதால், எது பிரம்மம் எது மாயை என்பதைப் பற்றி விவாதித்து காலத்தை வீணாக்குவதன் மூலமாக, ஆன்மீக தன்னுணர்வில் எவ்விதமான குழப்பத்தையும் உண்டாக்குவதில்லை. அல்லது பகவானோடு தாங்கள் ஒன்றுபட்டவர்கள் என்றோ, அல்லது பகவானுக்கு தனித்தன்மை இல்லை என்றோ, அல்லது பகவானே இல்லை என்றோ, அல்லது ஜீவராசிகளே பகவான் என்றோ, அல்லது பகவான் அவதாரம் ஏற்று வரும் பொழுது அவர் ஒரு ஜட உடலை ஏற்கிறார் என்றோ அவர்கள் தப்பாக எண்ணுவதில்லை. அல்லது ஆன்மீக பாதையில் உண்மையில் பல்வேறு இடையூறுகளாக இருக்கும், தங்களுக்குப் புரியாத ஆதாரமற்ற தத்துவவாதங்களைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அருவவாதிகளும், பக்தரில்லாதவர்களும் ஒரு புறமிருக்க, தங்களை பக்தர்களாக காட்டிக் கொண்டு, அருவ பிரம்மத்தோடு இரண்டறக் கலப்பதன் மூலமாக முக்தியடையும் கருத்தை இதயத்தில் தேக்கி வைத்திருக்கும் மற்றொரு பிரிவினரும் உள்ளனர். அவர்கள் தீயொழுக்கத்தினால், தங்களின் சொந்த பக்தித் தொண்டு முறையை தவறான முறையில் உருவாக்கிக் கொண்டு, அறிவீனங்களையும், தங்களைப் போலவே தீயொழுக்கம் கொண்ட பிறரையும் தவறான பாதையில் வழி நடத்துகின்றனர். விஸ்வநாத சக்ரவர்த்தியின் கூற்றிற்கு இணங்க, பக்தரற்றவர்களும் சிற்றின்ப வெறியர்களுமான இவர்கள் அனைவரும் மகாத்மாக்களின் உடையிலுள்ள துராத்மாக்கள் ஆவர். இத்தகையவர்கள் சுகதேவ கோஸ்வாமியால் வழங்கப்பட்ட இக் குறிப்பிட்ட பதத்திற்கிணங்க, ஆன்மீகிகளின் பட்டியலிலிருந்து முற்றிலும் விலக்கப்படுகின்றனர்.

எனவே வைகுண்ட லோகங்கள், பரம் பதம் என்றழைக்கப்படும் மிகச் சிறந்த வசிப்பிடங்களாகும். சூரியப் பிரகாசம் சூரியனிலிருந்து வரும் கதிர்களாக இருப்பதைப் போலவே, வைகுண்ட லோகங்களிலிருந்து வரும் கதிர்களாக இருப்பதால், அருவமான பிரம்மஜோதியும் பரம் பதம் என்றே அழைக்கப்படுகிறது. அருவ பிரம்மஜோதி பகவானின் உருவாம்சத்தைச் சார்ந்துள்ளது என்று பகவத் கீதையில் (14.27) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்தும் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ பிரம்மஜோதியைச் சார்ந்திருப்பதால், அவையனைத்தும் பகவானிடமிருந்தே உண்டுபண்ணப் படுகின்றன, அனைத்தும் அவரையே சார்ந்துள்ளன. மேலும் அழிவுக்குப்பின் அனைத்தும் அவரிலேயே ஒடுங்குகின்றன. எனவே எதுவுமே அவருக்குச் சுதந்திரமானதல்லை. பரபிரம்மமாகிய பகவான் தமது பிரம்ம சக்தியால் அனைத்திலும் ஊடுருவி பின்னிப் பிணைந்திருக்கிறார். இதனால் அனைத்தும் பகவானின் உடைமை என்பதை தூய பக்தனொருவன் உண்மையாக அறிந்திருப்பதால், மாயையிலிருந்து பிரம்மத்தை வேறுபடுத்திப் பார்ப்பதில் விலைமதிப்பற்ற நேரத்தை அவன் வீணாக்குவதில்லை. பக்தன் எல்லாவற்றையும் பகவத் சேவையில் ஈடுபடுத்த முயல்கிறான். பகவானின் சிருஷ்டியைப் பொய்யாக அடக்கியாள முயன்று குழப்பங்களை அவன் விளைவிப்பதில்லை. அவன் அதிக விசுவாசம் உள்ளவனாக இருப்பதால், தன்னை மட்டுமல்லாமல், மற்றனைத்தையும் கூட உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுத்துகிறான். அனைத்திலும் பகவான் இருப்பதையும், அனைத்தும் அவருக்குள் இருப்பதையும் பக்தன் காண்கிறான். திவ்யமான பகவானின் உருவம் பௌதிகமான ஏதோ ஒன்று என்று துராத்மா ஒருவன் எண்ணுவதே அவன் விளைவிக்கும் குழப்பங்களுக்குக் காரணமாகும்.


ஶ்ரீமத் பாகவதம் 2.2.18 / பொருளுரை



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...